சிலந்தி நாயகம்

சிலந்தி நாயகம்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1. மூலிகையின் பெயர் :- சிலந்தி நாயகம்
2. தாவரப்பெயர் :- ASYSTASIA GANGETICA.
3. தாவரக்குடும்பம் :- ACANTHACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பூ, பிஞ்சு ஆகியவை
5. வளரியல்பு :- சிலந்தி நாயகம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படும். முக்கியமாக சாலையோரங்களில், ஆற்றங்கரைகளில், ஈரமான களிமண் நிலங்களிலும் அதிகமாகக் காணபடும். இதன் பிறப்பிடம் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்கா. இது ஆசியாவிலிருந்து வட ஆப்பிரிக்காவுக்குப் பரவியது. பசிபிக் தீவிலும் காணப்படும். இது ஒரு தரையில் படரக்கூடிய சிறு செடி. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ பச்சை இலைகளையுடையது. இதன் பூக்கள் நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிறங்களைக் கொண்டது. இதன் பூக்களை வடநாட்டில் Gangesprim rose என்றும், Chinese violet, Philippine violet Coromandal என்றும் அழைப்பார்கள். இதன் பூக்களுக்கு தேனிக்கள் அதிகமாக வரும். இதனால் மகரந்தச் சேர்க்கை உண்டாகும். இந்தப்பூ பட்டாம் பூச்சிகளை இழுக்கக் கூடிய சக்தியுடையது. வெடித்துச் சிதறக்கூடிய முற்றிய காய்களையுடையது. இதன் காய்ந்த காய் வெடிக்கும் போது சுமார் 18 அடி தூரத்தில் விதைகள் சிதறும். விதைகள் மரக்கலரில் இருக்கும். இதனை வெடிக்காய் செடி எனவும் அழைப்பார்கள். கட்டிங் மூலமும் விதை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
6. மருத்துவப்பயன்கள் :- இந்தோனீசியாவில் இதன் இலைச்சாறு, எலுமிச்சன் சாறு மற்றும் வெங்காயச் சாறு சம அளவு எடுத்துக் கலக்கி வறட்டு இருமல், தொண்டைவலி, மற்றும் இருதய வலிகளுக்கு உபயோகிக்க குணமடைவதாகக் கூறுவர். பிலிப்பையின்ஸ் நாட்டில் இதன் இலை மற்றும் பூவை குடல் புண்ணுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிரிக்காவில் பிரசவ வேதனைக்கும், கழுத்து வலிக்கும் இதைப்பயன் படுத்துகிறார்கள். வேரின் பொடியை வயிற்று வலிக்கும் பாம்புக்கடிக்கும் குணமாக்கப்
பயன்படுத்துகிறார்கள். இதன் இலையை நைஜீரியாவில் ஆஸ்த்துமாவிற்குப் பயன்படுத்துகிறார்கள்.
இலையை நீரின்றி அரைத்து நகச்சுற்றில் கட்டி வர உடைந்து, இரத்தம், சீழ்,முளை யாவும் வெளியேறிக் குணமாகும்.
இலைச் சாற்றுடன் (1 தேக்கரண்டி) சம அளவு பாலில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரக் கட்டிகள் வராது தடுக்கும். உள் உறுப்புகளில் உள்ள புற்று ரணங்கள் குணமாகும். இரத்த சர்க்கரை குறையும்.
பூ, பிஞ்சு ஆகியவற்றைப் பன்னீரில் போட்டு அத்துடன் 4 அரிசி எடை பொரித்த படிகாரம் கலந்து 4 மணி நேரம் கழித்து தெளிவு இறுத்து 2 துளி ஒரு நாளைக்கு 4 முறை கண்ணில் விடக் கண்கோளாறு, கண்வலி, பார்வை மங்கல், கண்சிவப்பு, கூச்சம் ஆகியவை தீரும்.
சமூலச்சாறு 60 மி.லி. கொடுத்து இலையை அரைத்து கடிவாயில் கட்டிக் கடும் பத்தியத்தில் இருக்க அனைத்துப் பாம்பு நஞ்சுகளும் தீரும்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட சிலந்தி நாயகம் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...