கருவேல்

கருவேல்

பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி
 

1. மூலிகையின் பெயர் -: கருவேல்.
2. தாவரப்பெயர் -: ACACIA ARABICA.
3. தாவரக்குடும்பம் -: FABACEAE.
4. வேறு பெயர்கள் -: BABUL.
5. பயன் தரும் பாகங்கள் -: கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, மற்றும் பிசின்.
6. வளரியல்பு -: கருவேல் ஒரு கெட்டியான மரம். சுமார் 25 அடி முதல் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. தமிழகம் எங்கும் தரிசு நிலங்களிலும், மலைகளிலும் வளரக்கூடியது. வறட்சியைத் தாங்கக் கூடியது. இதன் இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை யுடையது. இலைகள் கால் அங்குல நீளத்தில் 10 – 12 இலைகளையுடையது, காய் சுமார் 6 அங்குல நீளமுடையது அதில் 8 -12 கொட்டைகள் இருக்கும். இந்த மரத்தில் கிளைகளில் வெண்மையான முட்கள் இருக்கும்.. மரப்பட்டைகள் வெடித்தும் கருப்பாகவும் மரக்கலராகவும் இருக்கும். மலர்கள் மஞ்சள் நிறமானவை அரை அங்குல விட்டமுடையவை. இவை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். காய்கள் வெண்ணிறமான பட்டை வடிவானவை. விதைகள் வட்ட வடிவமானவை. வெள்ளாடுகள் காய்களை விரும்பிச் சாப்பிடும்.
7.மருத்துவப்பயன்கள் -: கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சல் தணிக்கும், காய்ச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல், மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும், கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத் துவளச்செய்யும், சளியகற்றும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.
துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்புக் கழிச்சல் பாஷாண மருந்து வீறு ஆகியவை தீரும்.
இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.
இளம் வேர் 20 கிராம் நன்கு நசுக்கி 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 25 மி.லி. யாக காலை மாலை சாப்பிட்டு வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை தீரும்.
பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.
கருவேலம்பட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சம், பல்வலி, பல்லாட்டம் ஆகியவை தீரும்.
யாராவது நஞ்சு உட்கொண்டு விட்டால்  அதை முறித்து உயிருக்கு மோசம் ஏற்படாமல் காக்கக்கூடிய சக்தி வாய்ந்தது கருவேலமரத்துக் கொழுந்து இலை. ஒரு கைப்பிடியளவு கருவேலங் கொழுந்தைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தயிர் விட்டு மை போல் அரைத்து ஒரு டம்ளர் பசும் பாலில் கலந்து உடனே கொடுத்து விட்டால் நஞ்சு முறியும். நஞ்சு உண்டவர்கள் உயிர் பிழைப்பார்கள்.
கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடித்து 2 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரத் தாது பலப்படும். இருமல் தீரும். வயிற்றுப்போக்கு நிற்கும்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...