மகிழமரம்

மகிழமரம்




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1. மூலிகையின் பெயர் -: மகிழமரம்
2. தாவரப் பெயர் -: MIMUSOPS ELENGI.
3. தாவரக்குடும்பம் -: SAPOTACEAE.
4. வகைகள் -: வெள்ளை. (BULLET WOOD TREE,)
5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், விதை, பட்டை, ஆகியவை.
6. வளரியல்பு -: மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம். பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில்களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
7. மருத்துவப் பயன்கள் -: மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.
பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.
கருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.
மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.
10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.
மகிழங் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.
மகிழ வித்துப் பருப்பை வேளைக்கு 5 கிராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோள்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்றவல்லது.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மகிழமர பொருட்கள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...