களா

களா




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி

 

1) வேறுபெயர் – கிளா.
2) தாவரப்பெயர் –CARRISSA CARANDAS.
3) குடும்பம் — APRCYANACEAE.
4) வளரும் தன்மை –செம்மண்ணில் நன்கு வளரும். மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். ஐந்து முதல் ஆறு அடி உயரம் வரை வளரும். முட்கள் உள்ள செடி, தடிப்பான பச்சை இலைகளையுடையது. காரைச்செடி போன்று இருக்கும். வெண்மையான பூக்களையும், சிவப்பு நிறக் காய்களையும், கறுப்புப் பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.
5) பயன்தரும் பாகங்கள் –பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
6)பயன்கள் — காய், பழம், ஆகியவை பசி மிகுக்கும் வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும், சளியகற்றும், மாத விலக்கைத் தூண்டும்.
காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,  தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவை தீரும்.
வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக்கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப்பித்தம், சுவையின்மை, தாகம், அதிகவியர்வை, சில்விஷங்கள் தீரும்.
களாப்பழத்தை உணவுண்ட பின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள் தோறும் கண்களில் விட்டு வரக் கண்களிலுள் வெண்படலம், கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவை தீரும்.
50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.ஆகக் காய்ச்சி வடிகட்டிகாலை மாலை 50 மி.லி ஆகக் கொடுக்க மகப் பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.