சர்ப்பகந்தி

சர்ப்பகந்தி
 1) மூலிகையின் பெயர் -: சர்ப்பகந்தி. 2) தாவரப்பெயர் -: RAUVOLFIA SERPENTINA.
3) தாவரக் குடும்பம் -:APOCYNACEAE.
4) வேறு பெயர்கள் -: சிவன் அமல் பொடி, பாம்புக்களா.
5) வகைகள் -: ராவுன்பியா செர்பென்டினா. ராவுன்பாயா டெட்ரா பில்லர். ஆர்.எஸ் 1.
6) பயன் தரும் பாகங்கள் -: வேர்கள்.
7) வளரியல்பு -: சர்ப்பகந்திக்குச் செம்மண் மற்றும் பொறைமண், அமிலத்தன்மை அதிகம் உள்ள மண் ஏற்றது. காரத்தன்மை அதிகமுள்ள (PH 8) மண்ணில் வளராது. இதற்கு 20 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செலிசியஸ் வெப்ப நிலையும் ஆண்டுக்கு 75 -100 செ.மீ. மழையளவு ஏற்றது. சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கும். அதிக குளிரும், அதிக மழையும் சர்ப்பகந்திக்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிளையாகப் பிரியும். மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும். பின் அதை மருந்துக்காகத் தோண்டி எடுப்பார்கள். சுமார் 400 வருடங்களாக இதன் வேரை மூலிகையாகப் பயன் படுத்தி வருகிறார்கள். இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம். பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இதன் இனப்பெருக்கம் விதைக் குச்சி, வேர் துண்டுகள் மற்றும் விதை மூலம் செய்யப்படுகிறது. வணிக ரீதியாக விதை மூலம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடுவது நல்லது. ஒரு எக்டருக்கு 8 -10 கிலோ புதிய விதைகள் தேவை. விதைத்த ஆறு வாரத்தில் நாற்றுகள் தயாராகி வடும். 2 அடி பாரில் ஒரு அடி இடைவெளியில் நடவேண்டும். வேர்கள் 15 செ.மீ. பருமனாக இருப்பதனுடன் வேர்களின் வெளித்தோல் பழுப்பு நிறத்திலும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஏராளமான இளஞ்சிவப்பு நிறமுடைய பூங்கொத்துக்களுடன் காய்கள் ஊதா கலந்த கறுப்பு நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு காயிலும் 2 – 3 விதைகள் வரை இருக்கும்.
8) மருத்துவப்பயன்கள் -: சர்ப்பகந்தியினால் இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு தீர்க்க உதவுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இதன் மருந்தால் பலநரம்பு வியாதிகள், புற்று நோய்,-(Vinblastine) மலேரியா,-(Quinens) மனஅழுத்தம் (ஐப்பர்டென்சன்)-(Raubasine) இரத்த ஓட்டம் சீர்படுத்த,(Vincanpes) மாரடைப்பு (Ajmaline) இவைகளைக் குணப் படுத்தும்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மூலிகைகள்வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...