சீமை அகத்தி

                                                                                     சீமை அகத்தி




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி


1) மூலிகையின் பெயர் -: சீமைஅகத்தி.
2) தாவரப்பெயர் -: CASSIA ALATA.
3) தாவரக்குடும்பம் -: FABACEAE,(CAESALPINACEAE)
4) வேறு பெயர்கள் -: மெழுகுவத்திப் புதர், மெழுகுவத்திப் பூ, காட்டுச் சென்னா, GUAJAVA, கிருஸ்மஸ் மெழுகுவத்தி, ஏழு தங்க மெழுகுவத்தி.
5) பயன்தரும் பாகங்கள் -இலை,பட்டை, பூக்கள் மற்றும் விதை.
6) வளரியல்பு -இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ள இடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும். இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால் போன்று மஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதிர்ந்து நீண்ட காய்கள் இருபக்கத்திலும் அடுக்காகக் காய்க்கும்.இதன் விதைகள் நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
7) மருத்துவப்பயன்கள்: சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கர்ப்பப்பை கோளாறுகள் பாக்டீரியா, பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும், வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எளிதாகக் கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு, ஷேம்பு, முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைப் பறித்து எலுமிச்சஞ்சாறுடன் சேர்த்து நன்கு அரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படி கசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.
சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊறவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.
படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அரைத்து அதற்கு சமனெடை தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும் இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்.

நன்றி: மூலிகைவளம்

மேற்கண்ட மூலிகைகள்வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...