உடல் மெலிய பாட்டி வைத்தியம், இடுப்பு சதை குறைய பாட்டி வைத்தியம், கொழுப்பு கட்டி கரைய பாட்டி வைத்தியம், இடுப்பு சதை குறைய வழிகள்

 உடல் எடை குறைக்க 23 எளிய வழிகள்


1. எலுமிச்சைச் சாறு - தேன்

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து அதனை ஒரு டம்ளர் வெந்நீரில் சேர்த்து தினமும் காலையில் குடித்து வரவேண்டும்.

அவ்வாறு தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைவதைக் காணமுடியும்.

 

2. கடுக்காய் - நெல்லிக்காய் - தான்றிக்காய்

நன்கு உலர்ந்த கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றையும் எடுத்து நன்கு பொடித்து, தினமும் காலையில் வெந்நீருடன் கலந்து குடித்து வரவேண்டும்.

அவ்வாறு தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைவதைக் காணமுடியும்.


3.
 நெல்லிக்காய் - இஞ்சிச்சாறு

சுத்தம் செய்த நெல்லிக்காயை கொட்டையை எடுத்த பின் நன்கு அரைத்து அதன் சாறை எடுத்து, அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு சேர்த்து தினமும் காலையில் குடித்து வரவேண்டும்.

அவ்வாறு தினமும் குடித்து வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் பருமன் குறைவதைக் காணமுடியும்.

4. கொழுப்பைக் கரைக்கும் ஜூஸ் 

விரைவில் உடல் கொழுப்பை கரைக்கும் கரும்பு ஜூஸ்.உடல் எடையைக் குறைக்க கரும்புச் சாறு முக்கிய பங்கு அளிக்கிறது.


கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.
 கரும்புச் சாறு பருகுவதால் உடல் சோர்வுகள் நீங்கும். கரும்பு சாறு பருக ஆரம்பித்தால், முதல் ஓர்இரு மாதங்களிலேயே நல்ல பலனை பார்க்கமுடியும்.

 

5. பூசணி

பூசணி சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

 

6. வாழைத்தண்டு


வாழைத்தண்டு சாறை தினமும் காலையில் குடித்து வர, மிக விரைவில் உடல் பருமன் குறையும்.

 

7. மந்தாரை வேர்


ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு மந்தாரை வேரை போட்டு அது அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவேண்டும். அவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரை ஆரிய பிறகு அடிக்கடி குடித்து வர கண்டிப்பாக உடல் பருமன் குறையும்.
 

 

8. சோம்பு

ஒரு தேக்கரண்டி சோம்பை தண்ணீரில் நன்கு ஊறவைத்து, அதனை வடிக்கட்டி அடிக்கடி பருகிவர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். 

 

9. காரட்

காரட் - 2

காரட்டை பொடிதாக நறுக்கி, அதனை மிக்சியில் நன்றாக அரைத்து, தினமும் காலையில் ஒரு முறை குடிக்கவும். தினமும் குடித்து வர, உடல் எடை குறையும். காராட்டை ஜூஸ் மட்டும் அல்லாமல் அதனை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ கூட உண்டு வர உடல் எடையில் நல்ல மாற்றம் வரும். வயிறு குறையும்.

 

10. தேன் - பட்டை


தேன் -
 1 தேக்கரண்டி 

பட்டை போடி -
 1 தேக்கரண்டி 

வெந்நீர் -
 1 டம்ளர் 

வெந்நீரில் தேன் மற்றும் பட்டைப் பொடியை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். அவ்வாறு தினமும் குடித்து வர, விரைவில் உடல் மெலியும்.

 

11. சோம்பு - தண்ணீர்

தினமும் தண்ணீரில் சிறிது சோம்பு கலந்து குடித்து வர, விரைவில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் மெலியும்.

 

12. காரட் - மோர்

ஒரு காரட்டை நன்றாக அரைத்து அதனுடன் மோரை சேர்த்து, தினமும் பருகி வர உடல் எடை கண்டிப்பாக குறையும்.

 

13. பூண்டு - பால்

4 பூண்டு பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு கொதிக்க விடவேண்டும். பாலின் அளவு பாதியாகும் வரை கொதிக்க விடவும். பிறகு இளம் சூட்டில் பாலுடன் சேர்த்து பூண்டை சாப்பிட்டு வரவேண்டும். பூண்டு நம் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால் விரைவில் நம் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து உடல் மெலியும்.

 

14. கொள்ளு சூப்

தேவையற்ற தண்ணீரை உடலிலிருந்து கொள்ளு எடுத்து விடும். கொள்ளு இரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். 

கொள்ளு : 4 தேக்கரண்டி 
பூண்டு : 5 பல்
தக்காளி : 2
மிளகு : 1 தேக்கரண்டி
 
சீரகம் : 1 தேக்கரண்டி
 
துவரம்பருப்பு : 1 தேக்கரண்டி
 
பெருங்காயம் : 1/2
 தேக்கரண்டி
கொத்தமல்லி : சிறிதளவு
 
கறிவேப்பிலை :
 சிறிதளவு

நல்லெண்ணெய் : சிறிதளவு
கடுகு :
 சிறிதளவு
வரமிளகாய் : 2

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய தேவையான பொருட்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவேண்டும். 

அரைத்தக் கலவையில் 4 / 5 டம்ளர்  தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து தாளித்து, பிறகு கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். 

நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
 

15. சிறுகீரை - பார்லி - சீரகம் - மஞ்சள்


இரண்டு கைப்பிடி அளவு சிருகீரையை, ஒரு கைப்பிடி அளவு பார்லியுடன், சிறிது சீரகமும், மஞ்சளும் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்த நீரை தினமும் அதிகாலையில் குடித்து வர, உடல் மெலிந்து அழகான தோற்றம் பெற முடியும்.



16. நாவற்பழம்

ஒரு சிறிய கிண்ணம் நாவற்பழத்தை, வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர, உடல் மெலியும்.

 

17. கறிவேப்பிலை - மோர்

 

சுமார் 10 கறிவேப்பிலை இலைகளை நறுக்கி, அதை மோருடன் கலந்து தினமும் பருகி வர, உடல் எடை குறைந்து மெலிதான தோற்றம் பெறலாம்.

18. முள்ளங்கி - தேன்


முள்ளங்கியை
 நன்றாக துருவி, சிறிது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் எடை மெலியும்.

19. தேன் - எலுமிச்சைச் சாறு - மிளகு

தேன் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
 
மிளகு - சிறிதளவு
வெந்நீர் - 1 டம்ளர்

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை நன்றாக கலந்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தினமும் ஒரு முறை காலை வேளையில் குடித்து வர உடலில் உள்ள கொழுப்பு மிக விரைவில் கரையும். உடல் எடையில் நல்ல மாற்றம் தரும்.



20. தேன் - இஞ்சிச் சாறு

தேன் - 3 தேக்கரண்டி
இஞ்சி சாறு -
 2 தேக்கரண்டி

இஞ்சி சாறுடன் தேனை நன்றாக கலக்கி தினமும் இரண்டு வேளை குடித்து வரவேண்டும். அவ்வாறு செய்து வர ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றத்தை காணமுடியும். உடலில் உள்ள கொழுப்புகள் கரைத்து, உடல் எடை குறையும்.



21. அன்னாசி பழ பச்சடி

அன்னாசி பழத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை தாளித்து, அதில்  அன்னாசிப் பழ துண்டுகளையும் சேர்த்து லேசாக வதக்கி, கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை சேர்த்து பச்சடி செய்யலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.

22. வாழைப்பூ குழம்பு

வாழைப்பூவை நன்றாக ஆய்ந்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். அத்துடன் உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். குழம்புக்குத் தேவையான அளவு புளி கரைத்து கொள்ளவும். பூண்டு, வறமிளகாயை  நசுக்கி வைத்துக் கொள்ளவும். சீரகத்தை தனியாக நல்லெண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். மேல் கூறிய அனைத்துப் பொருட்களையும்  புளிக் கரைசலில் போட்டு வாழைப்பூ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது சுவையான மற்றும் சத்தான குழம்பு தயார்.

23. வெந்தயக் கீரை சப்பாத்தி

வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவேண்டும். பிறகு   நல்லெண்ணெயில் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சப்பாத்தி பதத்தில் பிசையவும். இறுதியாக வதக்கி வைத்திருக்கும் வெந்தயக் கீரையை  இந்த மாவுடன் சேர்த்துப் பிசையவும். இதனை வழக்கமான சப்பாத்தி போல போட்டு எடுக்க வேண்டும். இந்த சப்பாத்தி  தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page