எடை குறைப்பு அறுவை சிகிச்சை

 உடல் எடை குறைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா?

 

தீவிர உடற்பயிற்சி,கடுமையான உணவு கட்டுப்பாடு கடைப்பிடித்தும் குறையாத உடல் எடையை அறுவை சிகிச்சையால் குறைத்துவிடலாம் என்று நினைப்பவர்கள் முதலில் இதைப்பற்றி தெரிந்துகொள்வது நல்லது.

 

 உடல் எடை குறைய அறுவை சிகிச்சை

ஹைலைட்ஸ்:

  • உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் உடல் எடை குறைக்கலாம் என்பதில் கவனம் தேவை.
  • அறுவை சிகிச்சை பின்பும் மருத்துவரது கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆரோக்கியமாக உடல்எடை குறைய வேண்டும்.

உடல் பருமன். இன்று குடும்பத்தில் ஒருவராவது இந்தப் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை வயது பேதமின்றி பலரும் உடல்பருமன் பிரச்சனையைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் உடற் பயிற்சி, ஒரு புறம் உணவு கட்டுப்பாடு என்று ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளலாம் என்ற கருத்து மக்களிடம் பரவிவருகிறது.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று ஓடிக்கொண்டிருக்கும் பருமனான மக்கள் உடற்பயிற்சி வேண்டாம் உணவு கட்டுப்பாடு வேண்டாம் அறுவை சிகிச்சை போதும் என்று சொல்லும் போலி சிகிச்சையளிக்கும் தவறான கூட்டத்தை நோக்கி ஓடுவதும் அவ்வபோது நடக்கிறது.

பெரும்பாலான மக்கள் உடலை வறுத்தாமல் கண்டதைச் சாப்பிட்டு உடல் எடையை அறுவை சிகிச்சை வாயிலாக சிரமமில் லாமல் குறைத்துவிடலாம் என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால் உடல் பருமனுக்கு அறுவை சிகிச்சை என்பது எல்லோருக்குமானதல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

அப்படியானால் உடல் பருமன் நோயைக் கொண்டிருப்பவர்கள் அனைவருமே உடல் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சைதான் நல்ல தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்களா? சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் உடல் குறைய பரிந்துரை செய்வதும் உண்டு. அந்தவகையில் யாரெல்லாம் அறுவை சிகிச்சை செய்யலாம்? அறுவை சிகிச்சைக்கு பிறகு செய்ய வேண்டியது என்ன? என்பதை பார்க்கலாம்.

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெட்டபாலிக் அண்ட் பேரியாட்ரிக் சர்ஜரி (ASMBS) 1998 ஆம் ஆண்டு 13 ஆயிரம் நபருக்கு எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்தது. இது 2000 ஆம் ஆண்டில் 15 மடங்கு அதிகரித்தது. அதிகப்படியான உடல் பருமன் கொண்டவர்கள் தீவிரமான நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு அதிக வாய்ப்புண்டு என்பதால் பெரும்பாலான எடை கொண்டவர்களது கவனம் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மீது திரும்பி இருக்கிறது.


எடை குறைய அறுவை சிகிச்சை


உடல்பருமன் பிரச்சனையால் இன்று பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க உணவு பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை தான் மருத்துவர்களும், உடற்பயிற்சியாளர்களும் அறிவுறுத்துகிறார்கள்.
அதே நேரம் குறிப்பிட்ட உடல் எடையை விட மிக அதிகமான எடை கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை தீர்வாக அமையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மிக அதிகப்படியான எடையை தீவிர கட்டுப்பாட்டின் மூலமும் குறைக்க முடியாமல் இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறுகிறார்கள். பல தொடர் பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் விதித்த பிறகே இத்தகைய முடிவை மருத்துவக் குழு பரிந்துரை செய்கிறது.

 

உடல் எடை குறைய அறுவை சிகிச்சை


எல்லோருக்கும் ஏற்றதல்ல


என்பது சமயங்களில் அதிக எடையைக் கொண்டிருந்தாலும் அவை பொருந்தும் என்று சொல்லமுடியாது.உடல் பருமனைக் குறைக்க வருபவர்களிடம் இதை தெளிவாக மருத்துவர்கள் கூறினாலும் போலியான இடங்களில் மக்கள் ஏமாந்து விடுகிறார்கள். அதனால் சமயங்களில் உடல் எடை குறைப்பு என்பது உயிரையே போக்கும் அளவுக்கு பாதிப்பையும் உண்டாக்கி விடுகிறது.ஆனாலும் உடல் எடை குறைய அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்னும் விளம்பரங்கள் போலியான ஆட்களிடம் இருந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனினும் அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உடல் எடை குறைய அறுவை சிகிச்சை தேவையா என்பதை அங்கீகாரமுள்ள மருத்துவ நிபுணர்களைக் கண்டு உரிய பரிசோதனைக்கு பிறகே முடிவு செய்வது நல்லது.

அறுவை சிகிச்சைக்கு ஏற்றவர்கள்


டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனைக்கு உள்ளானவர்கள். அதிக கொழுப்பு, இதய நோய் செரிமானக்கோளாறு பிரச்சனை இருப்பவர்கள், அதிக எடையால் புற்றுநோய் பிரச்சனைக்கு உள்ளானவர்கள் மிக அதிகப்படியான தனது உடல் எடையைக் குறைக்க இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதுவும் தொடர் பரிசோதனைகளுக்கு பிறகு.

அறுவைசிகிச்சையில் என்ன மாதிரியான சிகிச்சை


பேரியாட்ரிக் எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் முக்கியமானவை ஸ்லீவ் கேஸ்ட்ரோக்டமி மற்றும் கேஸ்ட்ரிக் பைபாஸ் சர்ஜரி. முதலாவதில் லேப்ராஸ்கோப்பி கொண்டு இரைப்பையின் ஒரு பகுதி அகற்றப்படும். இதனுடன் பசியைத்தூண்டும் க்ரெலின் என்னும் ஹார்மோன் பகுதியும் நீக்கப்படும்.

கேஸ்ட்ரிக் சிகிச்சையில் இரைப்பையின் அளவில் ஒரு பகுதியோடு சிறுகுடலில் ஒரு பகுதியும் நீக்கப்படும். இதனால் உடல் எடை கட்டுக்குள் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அதிக கவனத்தோடு செய்ய வேண்டிய இந்த உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையை மருத்துவ குழுவினரின் தீவிர ஆலோசனையோடு அவர்களது சம்மதத்தின் பேரில் செய்ய வேண்டும்.

அடுத்தது எளிமையானது. லைப்போசக்ஷன் என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை பாதுகாப்பானது. உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை உறிஞ்சி எடுப்பார்கள். உடல் உறுப்புகளான கை, வயிறு, தொடை பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை சருமத்துளையினுள் ஊசியை செலுத்தி மெல்லிய சிறிய குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும். ஆனால் இவை எதிர்பார்த்த அளவு உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வராது என்பதே உண்மை.

அறுவை சிகிச்சை செய்வதற்கு குறிப்பிட்ட தினங்களுக்கு முன்பே உங்கள் உடலை தயார்படுத்துவார்கள். உணவுப் பழக்கங்களிலும் பல மாற்றங்களை செய்து பரிசோதனை செய்வார்கள். அதனால் உடல் எடை குறைய வேண்டும் என்றதும் உடனடியாக சர்ஜரி செய்துவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம்.

 

அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர் கவனம்
அறுவை சிகிச்சைக்கு பிறகு

 
இந்த சிகிச்சைக்கு பிறகு அதிகளவு உணவு உண்பது கட்டுப்படுத்தப்படும். இயல்பாகவே பசி எடுப்பது குறையும். நாளடைவில் உடல் எடை இயல்பாகவே குறையத் தொடங்கும். ஆனால் இந்த உடல் எடை குறைவு என்படு ஆரோக்கியமானதாக உடல் சத்துகள் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் உடல் உறுப்புகளின் செயல்பாடும் சீராக இருக்க வேண்டும். ஆரோக்கிய குறைபாட்டை அதிகரிக்கும் எந்த அறிகுறிகளையும் உதாசீனம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையோடு உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் உங்கள் சிகிச்சை முடிந்துவிடாது. அதற்கு பிறகும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மேலும் உணவின் மூலம் பெறும் ஊட்டச்சத்துகள் குறைந்துவிடாமல் இருக்க ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையையும் தொடர்ந்து எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உடல் எடை குறைவுக்கு பிறகு உடல் சோர்வில்லாமல் நோய் பாதிப்பில்லாமல் இருக்கிறதா என்ற பரிசோதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அழகுக்காக அறுவை சிகிச்சை

அதிகப்படியான உடல் எடை உடலில் பல தீவிரமான நோய்களை உண்டாக்கி விடும் தருணத்தில் மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த பரிசோதனைகளுக்கு பிறகே உடல் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். ஆனால் உடல் பருமன் அழகை குறைக்கிறது என்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முன்வருவது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல. பாதுகாப்பானதுமல்ல.

அப்படி வருபவர்களை அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள் அதனால் உங்கள் அழகு குறித்த அக்கறையோடு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் தேவை என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

உடல் எடை சற்று அதிகரிக்கும் போதே கவனத்துடன் தீவிர உணவு கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள். இது எவ்வித நோயையும் உங்களிடம் வராமல் பாதுகாக்கும் அதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டி என்றும் அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page