எடை குறைப்பு இரகசியங்கள்

 எடை குறைப்பு இரகசியங்கள்

முன்னுரை

நம் இந்திய மண்ணில் நீரழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்க்கு அடுத்தபடியாக பயமுறுத்தும் முக்கிய நோய்ப் பிரச்சனை என்பது உடல் பருமனாகும். உலக நாடுகளில் எங்கெல்லாம் துரித உணவுக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறதோ அங்கெல்லாம் உடல் பருமன் பெருத்துக்கொண்டே போகிறது. நம் இந்திய மக்களும் இப்பொழுது துரித உணவுகளுக்கு அடிமையாவதால் இங்கும் உடற்பருமன் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் தேற சக மனிதர்கள் கூறும் அறிவுரை என்ன வென்றால், 'நிறைய துரித உணவு, உருளைக் கிழங்கு மற்றும் மதுபானம் சாப்பிடு" என்பதே. அப்புறம் அந்த ஒல்லியானவர் ஏடா கூடமாக குண்டாகி எடையைக் குறைக்க வழி தேடி அலைய வேண்டியதுதான்.

உடல் எடை கூடும் வரை நாம் அலட்சியமாக இருந்து விட்டு பின்னர் உபத்திரவமாக ஆன பின்பு எப்படி எடையைக் குறைப்பது என்பதுதான் தலையாய பிரச்சனையாக பார்ப்போம். நாம் விழிப்புணர்வோடு வாழ்ந்தோமேயானால், உடல் எடை ஏறாமல் பார்த்திருப்போம். உடல் எடை ஏறாமல் இருக்க நாம் அல்லதை விட்டு நல்லதைச் சாப்பிட வேண்டும். அதேபோல், எடை குறைய வேண்டுமாயின், நாம் அல்லதை உடலில் இருந்து வெளியேற்றி நல்லதை உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

நம் ஆங்கில மருத்துவம் ஆராய்ச்சி செய்து கண்டதுபோல் நமக்கு கூறும் வேலைக்கு ஆகாத அபத்த வழிமுறைகளால் உண்மையில் எடை குறைப்பு நிகழ்கிறதா என்பதை விழிப்புணர்வோடு கவனித்தால், நமக்கு பணம் மற்றும் கால விரயம் ஏற்படாமல் இருக்கும். உதாரணமாக, நடை பயின்றால் எடை குறையும் என்று சொல்வதை வருடக் கணக்கில் நடை பயின்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. நாம் அன்றாடம் நடை பயிலும் பாதையில் நாம் பார்க்கும் நடை நண்பர்கள் உண்மையாகவே தொப்பையையும் உடல் எடையையும் குறைக்கத்தான் செய்கிறார்களா என்பதை கண்கூடாக பார்க்க முடியும்தானே? நான் பல வருடம் கண்ட காட்சி அனுபவத்தில் சொல்கிறேன், இதுவரை எனக்கு நன்குத் தெரிந்த நண்பர்கள் எவரும் தொடற்சியான நடை பயிற்சியின் மூலம் எடையைக் குறைத்ததாக சரித்திரமே இல்லை. இது என் கண்டுபிடிப்பு. நீங்களும் இதை உறுதி செய்ய வேண்டுமாயின் இதன் பிறகாவது உங்கள் பக்கத்து நபர்களின் நடை பயிற்சி முன்னேற்றத்தை கவனியுங்கள். அப்புறம் உண்மை புரிய வரும். அதை விடுங்கள், நீங்கள் நடப்பதன் மூலம் உங்களுக்கு எடை குறைகிறதோ இல்லையோ கண்டிப்பாக எலும்புகள் தேய்ந்து மூட்டு வலி நோய்கள் வரப்போவது நிச்சயம்.

அன்பு நண்பர்களே! எவர் ஒருவர் அதிகாலையில் எழுந்து காலை முதல் இரவு வரை தன் சுயத் தேவைகளை தானே செயல்படுத்தி சுறுசுறுப்பாக இயங்குகிறாரோ அவருக்கு தனியாக நடை பயிற்சியெல்லாம் தேவையேயில்லை. அலுவலகத்திற்கு கார் டிரைவர், அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலை, வீட்டு வேலைக்கு வேலையாள், குடும்ப பராமரிப்பில் துளியும் பங்களிப்பு இல்லாமை, இப்படியாக உழைப்பு இன்றி வாழ்பவர்களுக்குத்தான் நடை பயிற்சி போன்ற வேண்டாத வேலை தேவை. நீங்கள் புத்திசாலியாக இருப்பின் வீடு மற்றும் தோட்ட வேலைகளில் பங்கெடுத்து வாக்கிங் விரையங்களைத் தவிர்ப்பீர்.

நாம் ஆரோக்கியமாக எடை குறைக்க வேண்டுமாயின் உடல் பலவீனமாகாமலும், உடல் சக்தியை அதிகம் செலவழிக்காமலும், அதே சமயம், உடல் வலுவேறியும் எடை குறைப்பு நிகழ வேண்டும். அப்புறம் எடை குறைப்புச் செயலை நிறுத்திய பின்னர் மீண்டும் எடை அதிகரிக்கக் கூடாது. அதேபோல், எடை குறைப்பு அதிரடியாகவும் இருக்கக் கூடாது, ஒரு பக்கம் குறைவதும், மறுபக்கம் ஏறுவதுமாகவும் இருக்கக் கூடாது. எடை குறைப்பு நம் சொத்தை காலி செய்வதாகவும் இருக்கக் கூடாது. இத்தனையும் சாத்தியமா?

உடல் எடை குறைப்பு என்பது உடலுக்குச் சத்தும் சக்தியும் கொடுத்து சங்கடமின்றி உடற்கழிவை நீக்குவதும், அதனை அப்படியே நிலைக்கச் செய்வதுமாகும்.

நல்லதும் கெட்டதும்

நாட்டில் உள்ள நல்லவர்களே!, உங்களுக்கு ஒரு கெட்டச் செய்தி சொல்லப் போகிறேன். உலகில் நீங்கள் மிக மிக நல்லவராக இருந்தாலும், உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் என்பது இல்லை. ஆனால் நீங்கள் நல்லவராகவும் இருந்து, சரியானதையும் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு அனேகமாக நல்லதே நடக்கும். ஆக, உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நல்லதே நடக்க வேண்டுமானால், நீங்கள் சரியானதையே தெரிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் விருப்பு வெறுப்பு விட்டுத் தெரிவு செய்தால், உங்களால் சரியானதைத் தெரிவு செய்ய முடியும். சரி, அன்பர்களே!, வெளியே தெரிவு செய்வது பற்றி இன்னொரு சமயம் பார்ப்போம். இன்று, நம் உள்ளே சரியானதைத் தெரிவு செய்வது பற்றி பார்ப்போமா?

நண்பர்களே ! நமக்குள்ளே உள்ள நல்லது கெட்டது பற்றித் தெரிந்து கொண்டால், நாம் நலமாக வாழச் சரியானதைத் தெர்வு செய்வோம். இந்த நல்லதுதான், நமது தோல் ஆரோக்கியம், இரத்த நாள இலகுத்தன்மை, இருதய செயல்பாடு, நரம்புச் சூட்டிகை, மூளைத் திறன், நுரையீரல் செயல்பாடு, மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. இவ்வளவுக்கும் உபயோகமாக இருப்பது வேறு எதுவும் அல்ல, நமது உடலில் உள்ள நல்லக் கொழுப்புதான். நமது உடலில் எங்கெல்லாம் சுருங்கி விரியும் நிகழ்வு நடை பெறுகிறதோ அங்கெல்லாம் நல்லக் கொழுப்பு அவசியம் தேவை. இந்த இடங்களில் நல்லக் கொழுப்புக்கு பதிலாகக் கெட்டக் கொழுப்புச் சேரும் போதுதான் சிக்கல்கள் ஆரம்பமாகின்றன. சரி, அன்பர்களே!, நல்லக் கொழுப்புக்கும் கெட்டக் கொழுப்புக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் சரியானதைத் தெரிவு செய்ய உதவியாக இருக்கும். அது பற்றி இனி பார்ப்போம்.

காரணிகள்

நல்லக் கொழுப்பு

கெட்டக் கொழுப்பு

எது எப்படி?

இது இலாஸ்ட்டிக் (Elastic) போல் சுருங்கி விரியும் தன்மை உடையது. மிக இலகுவாக இருக்கும்.

இது பிளாஸ்ட்டிக் (Plastic) போல் விரிந்தால் சுருங்காத தன்மை உடையது. அழுத்தமாக இருக்கும்.

எவை எவை?

ஓமேகா-3 (Omega-3), ஓமேகா-6 மற்றும் ஓமேகா-9,

மிகக் குறை அடர் கொழுப்பு (VLDL), குறை அடர் கொழுப்பு (LDL), மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ் (Triglyricides)

சக்தி தருவது எது?

விரதமிருந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ சுலபமாக கழன்று சக்தியாக மாறக்கூடியது.

எவ்வளவு பட்டினி கிடந்தாலும் அல்லது உடற்பயிற்சி செய்தாலும் அசைந்து கொடுக்காது. இதைக் கரைக்க நிறையச் சக்தி தேவை. கெட்டக் கொழுப்பு கரையாததால், சதையும் எலும்பும் கரைந்து உடலியக்கம் நடைபெறும்.

மனநலம்

புத்தி கூர்மை, மனத் தளர்வு (Relaxation), மற்றும் மன அமைதி.

புத்தி மந்தம், மன இறுக்கம் (Mental stress) மற்றும் மன உளைச்சல்

உடல் நலம்

உடல் மென்மை (Suppleness), நல்ல தூக்கம், நோய் எதிர்ப்புச் சக்தி, ஆரோக்கியமான உள்ளுறுப்புகள் மற்றும் அழகான ஆரோக்கியமான தோல்.

உடல் கடினத்தன்மை (Hardened), தூக்கமின்மை, மாரடைப்பு, பித்தக்கல், மூளைச் செயலிழப்பு, குண்டாகுதல், நரம்புத் தளர்ச்சி, வாத நோய் மற்றும் தோல் நோய்கள்.

எதில் உள்ளது?

மீன் எண்ணை, குளிர் கடல் மீன்கள் (Cold water fish), ஆலிவ் எண்ணை, பாதாம், பிஸ்தா, நாட்டுக் கோழி, சிறிய மீன்கள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, முட்டை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை ஆகியன.

குளத்து மீன்கள், பெரிய மீன்கள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பிராய்லர் கோழி, கடலை எண்ணை, வனஸ்பதி (டால்டா), பனீர், துரித உணவுகள், நொறுக்குத் தீணிகள், வறுத்த உணவுகள், கொண்டைக் கடலை ஆகியன

உண்மையை ஆதரிக்கும் உன்னதமானவர்களே ! ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நீங்கள் கொழுப்பே சாப்பிடாவிட்டாலும் உங்களுக்குள் கொழுப்பு சேரத்தான் செய்யும். நம் உணவில் இருக்கும் மாவுச்சத்து (Carbohydrates), புரதம் (Proteins) மற்றும் கொழுப்பு (Fats) ஆகிய மூன்றும் முறையே, குலுக்கோஸ் (Glucose), அமினோ அமிலங்கள் (Amino Acids) மற்றும் அமிலக் கொழுப்பாக (Fatty Acids) செரிமாணம் மூலம் தன்மாற்றம் அடைகின்றன. பின்னர் இந்த மூன்றும் அசிடைல் கோ-ஏ (Acetyl Co-A) என்ற ஒரே பொருளாகத்தான் மாறுகின்றன. இந்த அசிடைல் கோ-ஏ ஆனது நம் உழைப்பின் தேவைக்கு ஏற்ப சிட்ரிக் அமில சுழற்சியின் (Citric Acid Cycle) மூலம் சக்தியாக (ATP மூலக்கூறாக) மாறி நம் உழைப்புக்கு ஆற்றலைத் தருகிறது. நம் உழைப்புக்கு போக மீதம் உள்ள அசிடைல் கோ-ஏ எல்லாம் கல்லீரலில் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தரமான உணவும், செரிமாணமும் இருக்கும் வரை இந்தச் சக்தி மாற்றம் மற்றும் கொழுப்புச் சேமிப்பு சிக்கலின்றி நிகழும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவு கேடு விளைவிப்பதாக இருப்பின், அது சக்தியாக மாறமுடியாமல் கெட்டக் கொழுப்பாக கல்லீரலிலும் அதைத் தாண்டி உடலின் பல இடங்களிலும் தேங்க ஆரம்பிக்கின்றன. இப்படித்தான் நாம் கெட்டக் கொழுப்பின் வசம் சிக்கிப் போகிறோம்.

அறிந்து, புரிந்து, தெளிந்த மண்ணின் மைந்தர்களே!, நம் உணவு இரசமாகி, இரத்தமாகி, சதையாகி பின் கொழுப்பாகிறது. பின் இந்தக் கொழுப்பு எலும்பாகி, நரம்பாகி, விந்து நாதமாகிறது. நம் உணவு நல்லதும் கெட்டதுமாக இருக்கும் பட்சத்தில், இரசமும் தசையும் ஓரளவுக்குத் தேறி விடுகிறது, ஆனால், இது கெட்டக் கொழுப்பாக மாறியதும் சக்தி மாற்றம் ஆக முடியாது சிக்கிப் போகிறது. ஆகவே, கொழுப்பானது எலும்பு, நரம்பு மற்றும் விந்து நாதங்களுக்குச் சக்தியாக மாறமுடிவதில்லை. எலும்பு பலவீனத்தால், உடல் வலிமை குறைவதும், நரம்பு பலவீனத்தால், உடல் நோய் வளர்வது தெரியாமலும், விந்து நாத சக்தியிழப்பால் ஆண்மை அல்லது பெண்மை குன்றுவதும் நிகழ்கின்றன. விந்து நாதத்தை உசுப்புவதற்கு நாம் வயக்ரா உள்ளிட்ட ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால், மிச்சமிருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளை கரைத்துக் கொஞ்ச காலத்திற்கு வீரியத்தைக் கொடுத்து விட்டு, அப்புறம் உள்ளதும் போய் வருந்தி வாழ்வோம்.

நல்ல நண்பர்களே! நமது உடலில் கெட்டக் கொழுப்பு சேராமல் இருக்க வேண்டுமானால் இவைகள் அவசியம் வேண்டும்.

  1. தரமான கல்லீரல் செரிமாணம்: அதிக உடல் உஷ்ணம், கல்லீரல் செரிமாண நொதிகளை அழிந்து கொழுப்புச் செரிமாணத்தைக் கெடுக்கிறது.
    1. தரமான சமச்சீர் புரதம்: நல்லக் கொழுப்பைச் சக்தியாக மாற்ற எல்லா அத்தியாவசியமான அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதம் தேவை. நல்ல கொலஸ்ட்ரால் என்பது நல்லக் கொழுப்பும் சமச்சீர் புரதமும் சேர்ந்தக் கூட்டாகும்.
    2. உழைப்புக்கு ஏற்ற உணவு அளவு: நமது உணவிலிருந்து கிடைக்கும் சக்தியானது உழைப்புக்குப் போக மீதமெல்லாம் கொழுப்பாக மாறிவிடுவதால் உழைப்புக்கு மிஞ்சிய உணவு அதிகக் கொழுப்பாக மாறி, அதற்கேற்ற அளவு புரதக் பற்றா குறைவால் கெட்டக் கொழுப்பாக தேங்கிவிடுகின்றன.
    3.  

நல்லக் கொழுப்பை உணவில் தினமும் சேர்ப்போம்!

நல்ல இரசம் முதல் விந்து நாதம் வரை சிறப்போம்!

ஒல்லியும் குண்டும்

என் இனிய நண்பர்களே!, ஒல்லி உடம்பு காரர்களுக்கும், குண்டு உடம்பு காரர்களுக்கும் இரு வேறு பிரச்சனைகள். ஒல்லிக்காரருக்கு குண்டாக வேண்டும், குண்டுகாரருக்கு ஒல்லியாக வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு மிகவும் சுலபமானது. குண்டுக்காரர், ஒல்லிக்காரரின் நல்ல செயல்களை எல்லாம் செய்ய வேண்டும். ஒல்லிக்காரர், குண்டுக்காரரின் வேண்டாத செயல்களை செய்யாமல் இருந்தால் போதும். அப்படியானால் ஒல்லிக்காரரின் வேண்டிய செயல்களும், குண்டுக்காரரின் வேண்டாத செயல்களும் என்ன என்ன என்று தெரிந்துகொண்டால் இருவித நபர்களுமே சுகமாக வாழலாம் அல்லவா?. ஆகவே நண்பர்களே!, இந்த இரண்டு தன்மையாளர்களையும் புரிந்து கொள்ள முதலில் முயற்சிப்போம்.

கேள்வி

ஒல்லித் தன்மையாளர்

குண்டுத் தன்மையாளர்

ஏன் இப்படி?

மண்ணீரல் திறன் சிறப்பாக இருப்பதால், உணவில் இருக்கும் நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை அப்பொழுதே நீக்கிவிடுவதால் கழிவுகள் தேங்குவது இல்லை. உடல் குண்டாவதில்லை நல்லது குறைவாக இருப்பதால் ஒல்லியாக இருக்கிறார்.

மண்ணீரல் திறன் குறைவாக இருப்பதால், நல்லது கெட்டது தரம் பிரிக்கப்படாமல், அப்படியே கல்லீரல் செரிமாணத்திற்கு அனுப்பப்பட்டு, அல்லதும் செரித்து எடுத்துக் சேமிக்கப் படுவதால் உடல் குண்டாகிறது. அல்லது தேங்குவதால் குண்டாக இருக்கிறார்.

என்ன தெரியும்?

மண்ணீரலானது அல்லதை அப்பொழுதே தள்ளிவிடுவதால் (வாந்தி அல்லது பேதி மூலம்), பிரச்சனை உடனடியாக புரிவதால், இவரால் எது உடலுக்கு நல்லது எது கெட்டது என்று தெரிந்து கொள்ள முடியும்.

இவருக்கு மண்ணீரல் உதவியாக இல்லாததால் எல்லாவற்றையும் உடலுக்குள் எடுத்துக் கொண்டபின்தான் பிரச்சனையே தெரிய வரும், ஆகையால் நல்லது எது கெட்டது எது என்று இவருக்குப் புரிவதில்லை.

என்ன செய்ய வேண்டும்?

குண்டுகாரர் வாய் கட்டாது ருசிக்கு சாப்பிடுவதைப் பார்த்து தானும் சாப்பிட்டக் கூடாது, தான் உணர்ந்த அல்லதை விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டால், ஒல்லித் தன்மை போய், சராசரி உடல் அளவைப் பெறுவார்.

ஒல்லிக்காரருக்குத் தெரிந்த அல்லதை விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டால், குண்டுத் தன்மை போய், சராசரி உடல் அளவைப் பெறுவார்.

சரி அன்பர்களே!, இவர்கள் இருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய நல்லது எது அல்லது எது என்று பார்ப்போமா?.

தீர்வுகள்

ஒல்லி தன்மையாளர்

குண்டு தன்மையாளர்

அதிகப்படுத்த வேண்டிய சுவை

துவர்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு

துவர்ப்பு, காரம் மற்றும் கசப்பு

குறைக்க வேண்டிய சுவை

இனிப்பு, காரம் மற்றும் புளிப்பு

உவர்ப்பு, இனிப்பு மற்றும் புளிப்பு

மிளகு மருந்தாக

அசைவ உணவோடு மிளகு சேர்த்துக் கொண்டால் கெட்டக் கொலஸ்ட்ரால் ஏறாது.

அசைவ உணவோடு மிளகு சேர்த்துக் கொண்டால் ஏற்கனவே உள்ள கெட்டக் கொலஸ்ட்ரால் குறையும், மேலும் ஏறாது.

வேண்டிய உணவுகள்

ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, வேப்பம் பூ, முருங்கை, அகத்தி, அத்திக்காய், எலுமிச்சை, பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, வெள்ளைக் கீரை, கடுக்காய், நெல்லி, ஆரஞ்சு, பப்பாளி, கறிவேப்பிலை, மாம்பழம், புடலை, பீர்க்கை, பாகல், மஞ்சள் மற்றும் வெற்றிலை

ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, வேப்பம் பூ, முருங்கை, அகத்தி, எலுமிச்சை, பூண்டு, மிளகு, கரிசலாங்கண்ணி, முருங்கை, தூதுவாளை, வெள்ளைக் கீரை, நெல்லி, ஆரஞ்சு, பப்பாளி, பாசிப்பயாறு, பேரீச்சை, உலர் திராட்சை, பாதாம், தேங்காய், பனங்கற்கண்டு, மாம்பழம், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு

வேண்டாத உணவுகள்

உருளைக் கிழங்கு, கடலைப் பருப்பு, டால்டா, மொச்சை, மசாலா உணவுகள், ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கெட், குளிரான பானங்கள், பால், தயிர், இரால், மட்டன், குளத்து மீன் மற்றும் வறுத்த உணவுகள்

எண்ணை, நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள், மசாலா உணவுகள், பலாக்கொட்டை, டீ, காப்பி, பச்சை மிளகாய், வெங்காயச் சட்னி, தக்காளிச் சட்னி, ஊறுகாய், குளத்து மீன், மற்றும் இனிப்பு உணவுகள்

துணை உணவுகள்

சமச்சீர் புரதம், உயிர் சத்துக்கள் (Vitamins), நார்ச்சத்து, இயற்கை இரும்பு, மெக்னீசியம் மற்றும் செலிணீயம்

சமச்சீர் புரதம், உயிர் சத்துக்கள் (Vitamins), ஒமேகா-3 கொழுப்பு, நார்ச்சத்து, இயற்கை கால்சியம் மற்றும் சி-வைட்டமின்கள்,

மலர் மருந்துகள்

வைட்செஸ்நட்: ஹார்மேன் சமன்பட

ராக் ரோஸ்: இரத்த விருத்திக்கு

ஜென்ஷியான்: மனக்கவலைக்கு

ஹீத்தர்: சத்துக்களை கிரகித்துக்கொள்ள

சென்டாரி: உடல் பலஹீணம் நீங்க

ஹார்ன்பீம்: உடல் டானிக்

வைட்செஸ்நட்: ஹார்மேன் சமன்பட

ராக் ரோஸ்: இரத்த சுத்தத்திற்கு

கோர்ஸ்: நல்லதை நம்புவதற்கு

ஸ்கிளராந்தஸ்: உடல் சோம்பல் நீங்க செரிபிளம்: உடல் உஷ்ணம் வெளியேற

ஆலிவ்: உடல் வலிமை பெற

ஒல்லியோ, குண்டோ இருவரும் மத்தியமான உடல் அமைப்பைப் பெற, கெட்டக் கொழுப்பு உணவுகளையும் தயிரையும் தவிர்த்தால் பலன் கிடைக்கும். ஓல்லியானவர் தயிரைத் தவிர்த்தால், உடலின் கணச்சூடு தனிந்து செரிமாண நொதிகள் நன்கு வேலை செய்து உணவுச் செரிமாணம் (Digestion) மற்றும் சத்து கிரகிப்பு (Assimilation) சிறப்பாக நிகழ்ந்து, ஒல்லி உடல் சதைப் பற்றோடு விளங்க வழி கிடைக்கும். செய்துதான் பாருங்களேன். குண்டானவர், தயிரை விட்டால், கழிவுகள் நொதித்து, புளித்து, உடல் மேலும் குண்டாகாமல் தவிர்த்து உடல் மெலிய வாய்ப்பு கூடும்.

வெகுளித்தனத்தில் சிறந்து விளங்கும் குண்டு நண்பர்களே! உங்கள் உணவுத் தேர்வை ஒல்லிக்காரர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அறிவுச் சூட்டிகையில் சிறந்து விளங்கும் ஒல்லிக்காரர்களே! குண்டுக்காரர்களைப் பார்த்துக் கண்டதையும் சாப்பிட வேண்டாம். ஒல்லியானவர்களே! குண்டு நபர்களை உணர்வுபூர்வமாக நேசித்து, அறிவுபூர்வமாக வழிகாட்டுங்கள். குண்டானவர்களே! ஒல்லியாளர்களை அறிவுபூர்வமாக அனுகி, உணர்வுபூர்வமாக நன்றி கூறுங்கள். இதனால், இருவரும் நட்பாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் வாழலாம்.

ஒல்லியானவரின் நல்லதை எடுப்போம்! குண்டானவரின் அல்லதை விடுவோம்!

அதிக எடை ஆபத்துக்கள்

என்னுயிர் குண்டு தோழர்களே! தோழியர்களே! உடல் எடை குறைப்பு இரகசியங்களை நான் உங்களுக்கு காதோடு காதாக சொல்லலாம் என்று இருக்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒலி பெருக்கி வைத்து, குண்டு தன்மையின் ஆபத்துக்களை (ஆ! பத்துக்களை) கத்தலாம் என்று இருக்கிறேன். நான் உங்களை பயமுறுத்துகிறேன் என்று நினைத்தாலும் இதைச் சொல்லத்தான் போகிறேன். காரணம், இந்த இரகசியங்கள் குண்டானவர்கள் மற்றும் குண்டாகாமல் இருக்க நினைப்பவர்கள் ஆகிய இரண்டு பேருக்குமே தேவை. நம்மில் நிறைய பேர் குண்டாகாமல் இருப்பது எப்படி என்று தெரியாததால் குண்டு தன்மையில் சிக்கி ஆரோக்கிய சுதந்திரத்தை இழக்கிறார்கள். நண்பர்களே! சுதந்திரம் என்பது விட்டு விடுதலையாவதில் இல்லை. உண்மையில் எதிலும் சிக்காமல் இருப்பதில்தான் இருக்கிறது. அதற்கு விழிப்புணர்வு இருந்தால் போதுமானது. ஆகவே, விழிப்புணர்வை உண்டுடாக்கவே குண்டு தன்மையின் ஆபத்துக்களை உங்கள் அறிவுக்கு படைக்கிறேன். நான் சொல்லப் போகும் இந்த விஷயங்கள், உங்களை அறிவு பூர்வமாக உணரவைத்து (உணர்வு பூர்வமாக பயப்பட வைத்து அல்ல), உணர்வு பூர்வமாக உங்களை நேசிக்க வைத்து (அறிவு பூர்வமாக உங்களை வெறுக்க வைத்து அல்ல) பக்குவ படுத்துமானால், நிச்சயம் எடையை குறைக்க வேண்டும் அல்லது குண்டாகாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உங்களில் ஏற்படுத்திக்கொள்வீர்கள். ஆகையால், கவனமாக கவனியுங்கள்.

நண்பர்களே! குண்டு தன்மையால் ஏற்படும் ஆபத்துகளை இரண்டு விதமாக நாம் இப்போது பார்க்கப்போகிறோம். ஒன்று, உடல்ரீதியான பாதிப்புகள். மற்றொன்று, மனரீதியான பாதிப்புகள். முதலில், நாம் உடல்ரீதியான பாதிப்புகளை பார்ப்போம்.

1. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு: இரத்தக் குழாய்கள் கெட்டக் கொழுப்பு படிமானத்தால் கடினமாகிப் போவதாலும், அதிக எடைப் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்த வேண்டியதாலும், இருதயம் அதிகப்படியாக இயங்கி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்துகிறது. நமது உடலில் கிட்டதட்ட 90,000 மையில்கள் நீளம் உள்ள இரத்தக் குழாய்களில் எங்கு கெட்டக் கொழுப்பு அடைத்துக் கொண்டாலும் மாரடைப்பு நிகழ்கிறது. அதிலும் இருதயத் தமனிகளில் (Caronary Arteries) அடைத்துக் கொள்ளும் போது மிகத் தீவிர மாரடைப்பு (Massive Heart Attack) நிகழ்கிறது.

2. மூளைச் செயலிழப்பு: கெட்டக் கொழுப்புச் சேர்மானத்தால் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு, மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு இரத்தம் செல்லாமல் மூளைச் செயலிழப்பு (Stroke) நிகழ்கிறது. இதுவே மூளையின் நினைவுப் பகுதிக்குள் நிகழும் போது சுய நினைவிழத்தல் (Coma) நிகழ்கிறது.

3. சிறுநீரகச் செயலிழப்பு:அதிக கெட்டக் கொழுப்பானது, சிறுநீரகங்களில் படிவதால், அதன் செயல்பாட்டுத் திறன் குறைந்து, படிப்படியாகச் செயலிழப்பு நிகழ்கிறது. கெட்டக் கொழுப்போடு சேர்ந்த கழிவுகள் நீரில் கரையாமல் சிறுநீரகங்களில் அடைத்துக் கொள்கிறது.

4. பித்தப்பை கல் உருவாக்கம்: அதிகப்படியான கெட்டக் கொழுப்பை கிரகித்து வெளியேற்ற அதிகப்படியான பித்தத்தை கல்லீரல் சுரக்கிறது. இதனோடு கெட்டக் கொழுப்பும் தேங்கும் போது பித்த கற்களை உண்டாக்குகிறது.

5. சர்க்கரை நோய் பாதிப்பு: கெட்டக் கொழுப்பப்பானது கெட்டச் சர்க்கரையை இழுத்து வைத்துக் கொள்வதால் உடல் சதைகளிலும் உறுப்புகளிலும் தேங்கிச் சர்க்கரை நோயின் பாதிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், உள் உறுப்புகள் விரைவாக பழுதடைகின்றன.

அடுத்ததாக, குண்டு தன்மையால் ஏற்படும் மன பாதிப்புகளை இனி பார்போம்.

1. மன உளைச்சல்: கெட்டக் கொழுப்புச் சேர்மானத்தால், நரம்புச் சூட்டிகை குறைந்து, ஹார்மோன் உறுப்புக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பானது பாதிப்படைவதால் ஹார்மோன் இணக்கம் கெடுகிறது. இதன் காரணமாக, இனம்புரியாத மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இந்த மன உளைச்சலால், உறவுத் தன்மையிலும் (Relationship) இணக்கம் குறைகிறது.

2. மூளைத்திறன் குறைவு: கெட்டக் கொழுப்பின் சேர்மானமும், அது பிடித்து வைத்துள்ள உடற்கழிவுகளும் அதிகமாகும் போது, நரம்பானது நீர்த்துப்போய் செயலிழப்புக்கு ஆளாகிறது. இதனால் மூளைத் திறனும், அது சார்ந்த சூட்டிகை மற்றும் ஞாபகத் திறன் ஆகியன குறைய ஆரம்பிக்கின்றன.

3. செயல் திறன் குறைவு: மூளைக்கும் உடல் பகுதிகளுக்கும் உண்டான தொடர்பு நீர்த்துப்போகும் போது உடல் செயல் திறன் குறைந்து சோம்பலும், இயலாமையும் முன் வந்து நின்று தோல்விக்கு அடித்தளம் அமைக்கும்.

4. தன்னம்ம்பிக்கை குறைவு: மூளைத் திறனும் செயல் திறனும் குறையும் போது, தன்னால் எதுவும் முடியாது என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக உணர்வதால் தன்னம்பிக்கை குறைவுக்கு ஆளாக நேரிடுகிறது.

5. சுய தோற்றக் குறைவு: உடல் பருமன் ஒரு பக்கம், அது சார்ந்த உடல் உபாதைகள் இன்னொரு பக்கம். இவற்றையெல்லாம் தீர்க்க வேண்டிய நரம்பு மற்றும் மூளைத் திறன் குறைவு ஒரு குறையாக இருக்கும் போது, தனது தன்னம்பிக்கையும், சுய தோற்றமும் (Self Image) தளர ஆரம்பிக்கிறது. சிறப்பாக வாழவேண்டும் என்ற மனமிருந்தும் மார்கம் (வழி) புரியாமல் தவிக்க வேண்டியிருக்கும்.

அதிக உடல் எடையின் அவலங்களை தெரிந்துகொண்ட பாசத்திற்குறிய நண்பர்களே!, எடையைக் குறைக்க வழி தெரிந்து கொள்வதற்கு முன், எடை கூட்டும் காரணங்களைத் தெரிந்து தவிர்த்தல் மிக முக்கியம். அது பற்றி இப்போது பார்ப்போம்.

1. முழுமை உணவு எடுக்காமை

2. வயிற்றில் கத்தி வைத்தல்

3. நாக்கிற்கு அடிமையாதல்

தோலோடு சாப்பிடும் உணவானது செரிப்பதற்கு வேண்டிய உயிர்ச் சத்துக்களோடு இருப்பதால், உணவிலிருந்து சக்தி மிகுதியாகவும் கழிவு குறைவாகவும் உண்டாகின்றன.

வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதால், நெருப்பு, நீர் மற்றும் திடப் பொருள் சக்திகளில் சம நிலையைக் கெடுத்து பருமனுக்கு வழி வகுக்குகிறது

 

நாக்கு ருசிக்கு சாப்பிடுவதை விட்டு, உடல் சத்துக்கும் சக்திக்கும் சாப்பிட வேண்டும். அதிக இனிப்பு மற்றும் புளிப்பு உணவுகள் கல்லீரலைக் கெடுத்து உடலைப் பருமனாக்கும்.

4. நொறுக்கை நொறுக்குதல்

5. துரித உணவுகள்

6. குளிர் நீர் மற்றும் பானம்

நொறுக்குத் தீனிகள் மண்ணீரலின் ஈரப்பதத்தைக் கெடுத்து உடலை பருமனாக்கிவிடும்.

அதி விரைவாக சூடுபடுத்தப்படும் உணவுகள் எல்லாம் சத்தழிந்து கெட்டக் கொழுப்பாக மாறிவிடும்.

மண்ணீரலையும் கல்லீரலையும் கெடுத்து கெட்டக் கொழுப்பு உருவாவதில் முடியும் .

7. அதிக மசாலா உணவுகள்

8. முழு உடல் உழைப்பின்மை

9. இரசாயன மருந்துகள்

கல்லீரலின் கொழுப்புச் செரிமாணத்தைக் கெடுத்து, கெட்டக் கொழுப்பை அதிகமாக்கும்.

உடலின் எல்லா பகுதிகளுக்கும் இயக்க அசைவை கொடுக்கும் உடல் உழைப்பானது கழிவு தேக்கத்தை நீக்கிவிடும்.

இரசாயனங்களின் வினைக் கூறுகள் கெட்டக் கொழுப்போடு இனைந்து உடல் பருமனை அதிகமாக்குகிறது.


உடல் பருமனை தவிர்ப்போம்
!

உள்ளம் குதுகளித்திருப்போம்!

எடை குறைப்பு மாயைகள்

உள்ளம் போல் உடலையும் அழகாக வைத்துக் கொள்ள விருப்பப்படும் இனிய நண்பர்களே! உடல் எடை குறைக்கும் இரகசியங்களை அறிய ஆசையா? கொஞ்சம் பொறுங்கள், இந்த இரகசியங்கள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக சொல்லப்படுபவையல்ல. சுயமாக சரியான உடல் எடையை இருபது வருடமாக வைத்திருந்த சொந்த அனுப அறிவாலும், அடுத்தவர்கள், உடல் எடை அதிகரிப்பால் படும்பாட்டின் உணர்வுபூர்வ புரிதலாலும், கடந்த பத்து வருடங்களாக மற்றவர்களுக்கு அளித்த ஆலோசனைகளின் பயன் மற்றும் பாதிப்புகளின் வெளிப்பாடும் கலந்த வாழ்வியல் இரகசியங்கள் மற்றும் ஆழ்ந்த ஞானத்தில் உணர்ந்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் இந்த இரகசியங்கள். ஆக, இந்த நுட்பங்களைப் பயன்படுத்தினால் நிச்சையமான பலன்களை அடைய முடியும். இந்த இரகசியங்களை இரண்டு விதமாக நாம் பார்க்கப் போகிறோம். ஒன்று, எப்படியெல்லாம் எடை குறைக்க முடியாது அல்லது எடை குறைக்கக் கூடாது என்ற இரகசியங்கள். மற்றொன்று, உண்மையாக வேலைக்காகும் எடை குறைப்பு இரகசியங்கள். முதலில், நாம் எப்படியெல்லாம் எடையை குறைக்க முடியாது அல்லது எடையை குறைக்கக் கூடாது என்று பார்ப்போம். ஆக, முதலில் எடை குறைப்பு மாயையில் இருந்து விடுபட்டால்தான் உண்மையான எடை குறைப்பு இரகசியங்களை புரிந்து உண்ர்ந்து பயன் படுத்திக்கொள்ள முடியும். ஆகவே, எடை குறைப்பு பொய்களை இன்று பார்த்து விடுவோம்.

1. நடை மற்றும் உடற்பயிற்சியால் உண்மையில் எடை குறைக்க முடியாது: ஒரு ஒல்லியானவரையும் ஒரு குண்டானவரையும் ஓடவிட்டால் யார் ஜெயிப்பார்கள்?. நிச்சயமாக ஒல்லியானவர்தானே?. இதற்கு காரணம், ஒல்லியானவரிடம் கழிவு குறைவு, அதனால் சக்தி அதிகம் இருக்கும். அதுவே, குண்டானவரிடம் சுமை (எடை) அதிகம், கழிவும் அதிகம், அதனால் சக்தி குறைவு. குண்டானவர்க்கு பத்திருபது கிலோ சுமையை கட்டிவிட்டதுபோல் அவரின் உடல் சுமை இருக்க, ஒல்லியானவர்க்கு சுமை எதுவும் இல்லாமல் ஓடுவது போல் அல்லவா இருக்கிறது. இந்த பந்தயம் நியாயம் இல்லைதானே? நண்பர்களே! குண்டானவர் அதிக உடல் எடையை வைத்துக்கொண்டு எவ்வளவுதான் நடந்தாலும், ஓடினாலும் அதற்குக் கெட்டக் கொழுப்பு சக்தியளிக்க முடியாது. ஆக, கொழுப்பு அப்படியே இருக்க நடை பயிற்சிக்கு சதையும் எலும்புதான் கரையும். இது தேவையா?

2. அதிரடியாக எடை குறைக்கக் கூடாது: இன்னும் சில் அமைப்புகள் உடல் எடையைக் குறைக்க வயிற்று பெல்ட் அல்லது எந்திர உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றன. இங்கேயும் அதிரடியாக கரைவது கெட்டக் கொழுப்பல்ல, சதையும் எலும்பும்தான். அப்படியே அதிரடியாக கெட்டக் கொழுப்பு கரைந்தாலும், அவையாவும் சிறுநீரகங்களை பதம்பார்க்கும் விதமாகவே அமையும். நண்பர்களே! உடற் கழிவுகளை எப்பொழுதும் படிப்படியாகத்தான் சிறு நீரகங்கள் தாங்கும் விதமாக வெளியேற்ற வேண்டும்.

3. சத்தும் சக்தியும் இல்லாமல் எடை குறைப்பு கூடாது: இயற்கை மருத்துவ முறைகளில் எடை குறைப்பை மூலிகை மற்றும் பழச்சாறுகளைக் கொண்டு குறைக்க வழி செய்து, பிற்பாடு சத்துள்ள பயறு, பாதாம் பிஸ்தா போன்ற பருப்புகள் முதலியவற்றைக் கொண்டு உடலைத் தேற்ற முயற்சிக்கின்றன. இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. ஒன்று, முற்றிலுமாக ஓய்வெடுத்து எடை குறைக்க வேண்டும். இன்னொன்று, எடை குறைப்பில் உடல் மிகவும் பலஹீனப்பட்டுவிடுவதால் பிற்பாடு உடலை தேற்ற அதிக பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

4. பட்டினி கிடந்தெல்லாம் எடை குறைத்துவிட முடியாது: கெட்டக் கொழுப்பை உடலில் வைத்துக் கொண்டு எவ்வளவுதான் ஓய்வாக பட்டினி கிடந்தாலும் உள்ளுறுபுகளின் செயலாக்கத்திற்கு சக்தியளிக்க கெட்டக் கொழுப்பால் முடியாது ஆகையால், சதை மற்றும் எலும்புதான் கரையும். இன்னும் சொல்லப் போனால், இவர்கள் விரதம் இருப்பது கூட கடினமாகவே இருக்கும்.

5. கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை மூலமெல்லாம் எடை குறைக்க முடியாது: இன்னும் சிலர், கெட்டக் கொழுப்பு அதிகம் தேங்கும் போது அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு முறையும் அப்படி அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டியிருக்குமே தவிர, இவர்கள் கெட்டக் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும் வழிக்கு வராத வரை தீர்வு என்றுமே இல்லை. இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இவர்கள் இப்படி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கம் செய்வதால் கெட்டக் கொழுப்புத் தன்மை உடல் முழுவதும் பரவ காரணமாகிறது. ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நோய்த் தொற்றை நீக்க (உதாரணமாக புற்று நோய்) அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, அந்நோய் உடல் முழுவதும் பரவ அறுவை சிகிச்சையே காரணமாகிவிடும். இத்தோடு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்கும் போது கெட்டக் கொழுப்போடு நல்லக் கொழுப்பு, புரதம் மற்றும் தாதுச் சத்துக்களையும் சேர்த்துதான் நீக்கப்படுவதால் உடல் பலவீணப்பட்டு விடுகிறது.

6. பசியை அடக்கும் மருந்துகள் மூலம் எடை குறைக்கக் கூடாது: உடல் எடை குறைக்கச் சில மருத்துவ நண்பர்கள் இப்படி முடிவு செய்கிறார்கள். பசியை குறைத்து விட்டால் சாப்பிடமாட்டார், ஆகையால் உடல் பருமனாகாது என்று நம்புகிறார்கள். இதில் மூன்று அபத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, சக்தியளிக்க முடியாத கெட்டக் கொழுப்புச் சுமையால் சக்தியிழந்திருக்கும் பருமன் நபர்களுக்கு இன்னொரு சாபமாக பசியின்மையையும் பரிசாக கொடுத்தல் நிகழ்கிறது. இரண்டாவதாக, உடல் உழைப்புக்கும், உள்ளுறுப்பு செயல்பாட்டிற்கும் தேவையான சக்திக்காக சதை மற்றும் எலும்பு கரைகின்றன. மூன்றாவதாக, உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாக உள்ள ஜீரணத்தின் மீது கைவைக்கும் மகாபாதகச் செயலை செய்கிறார்கள். நண்பர்களே! இப்படியெல்லாம் பெயருக்கு எடை குறைத்து ஆயுளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமா?

7. கொழுப்பு சாப்பிடுவதை நிறுத்தியெல்லாம் எடை குறைப்பது தவறு: தட்ப வெட்ப சூழலுக்கேற்பவும், நோய் எதிர்ப்புக்காகவும் நமது தோல் சுருங்கி விரிந்து செயல்பட நல்லக் கொழுப்பு வேண்டும். அதேபோல், இரத்தக் குழாய் சுருங்கி விரியவும், நரம்பு சூட்டிகைக்குச் சுருங்கி விரியவும் நல்லக் கொழுப்பு அவசியம் வேண்டும். நல்லக் கொழுப்புச் சேமிப்பானது அவசரத் தேவைக்கு (விரதம் மற்றும் சாப்பிட முடியாத சூழலில்) உதவியாக இருக்கும். என் இனிய நண்பர்களே! உங்களுக்குக் கொழுப்பை தவிர்க்கவோ அல்லது பகுதியாக தவிர்க்கவோ (உதாரணமாக, முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்தல்) சொல்லும் எவரும் உங்களுக்குக் குழி தோண்டுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

8. தண்ணீர் அதிகம் குடித்தெல்லாம் எடை குறைக்க முடியாது: அளவுக்கதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் இரைப்பை, மண்ணீரல் மற்றும் கல்லீரல் சோர்வை ஏற்படுத்திவிடும். அதேபோல், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பதும், சிறுநீரகங்களை சோர்வடையச் செய்யும். தண்ணீர் குடித்து எடையைக் குறைக்கிறேன் என்று, சிறுநீரகங்களைக் கெடுத்து, துர்நீர் கோற்று உடல் வீங்க வேண்டுமா?

9. ஹார்மோன் சிகிச்சையால் எடை குறைப்பு: நண்பர்களே! ஜீரணத்தின் மீது கைவைப்பது எப்படியோ, அதேபோல், ஹாமோன்களுடன் விளையாடுவதும் மகாபாதகச் செயலே. ஹார்மோன்களை வெளியில் இருந்து கொடுக்கும் போது சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாது. இதனால் ஹார்மோன் சமன்பாட்டை குலைத்து மனநிம்மதியோடு விளையாடும் நிலை ஏற்படுகிறது.

சரி, அப்படியானால், உண்மையான எடை குறைப்பு வழிகள்தான் என்ன என்று கேட்பவர்கள் அடுத்த அத்தியாயத்தைப் பாருங்கள்.

உடல் பருமன் மற்றும் எடை குறைப்பு மாயைகளில் சிகாமல் இருக்கத் தேவை விழிப்புணர்வு!

உடலைக் குப்பையாக்காமல், மூளையை வளமாக்குவோம்! விழிப்புணர்வாய் வாழ்வோம்!

எடை குறைப்பு இரகசியங்கள்

அன்பர்களே! உடலை பலவீணப்படுத்தாமல், வேலைப் பிழைப்பு கெடாமல், இலட்சங்களை இழக்காமல், உடலை வலுவேற்றி, அதிகப்படியான எடையைச் சீராக குறைக்க வழி சொல்லப் போகிறேன். இந்த எடை குறைப்புக்காக விடுப்பு எடுத்து, படுக்கை விரித்தெல்லாம் ஓய்வெடுக்க வேண்டியதில்லை. உங்கள் அன்றாட வாழ்க்கைச் செயல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். இன்னும் சொல்லப்போனால், உங்கள் அதிகப்படியான எடை குறையக் குறைய, உங்கள் உயிர்ச் சக்தியானது அதிகப்பட்டுகொண்டே இருக்கும் அற்புதத்தை உணரமுடியும். அன்பர்களே! உண்மையான ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது உடலை வலுவைக் குலைக்காமலும் உயிர்ச் சக்தியை குறைக்காமலும், உடற் கழிவையும், கெட்டக் கொழுப்பையும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு சேதாரம் ஏதுமின்றி வெளியேற்ற வேண்டும். இதற்காக சில ஆயிரங்கள் செலவாகலாம். ஆனால் பின்னாளில் பல இலட்சங்களை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வழி முறைகளை இன்று பார்ப்போம்.

1. சமச்சீர் புரதம் எடுத்துகொண்டால் எடை குறைவது நிச்சயம்: எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களை உள்ளடக்கிய சமச்சீர் புரதமானது கெட்டக் கொழுப்பை (புரதம் குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ளLDL) நல்லக் கொழுப்பாக (புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளHDL) மாற்றி, உடல் இயக்கத்திற்குச் சக்தியளிக்கும் விதமாக பயன்பட்டு, எடை குறைக்க உதவுகிறது,

2. நல்லக் கொழுப்பு விகிதாச்சாரம்: நல்லக் கொழுப்புகளான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஆகியவை 1:5 என்ற விகிதாச்சாரத்தில் அமையும்போது உடல் இலகுவாகவும், சக்தியளிக்கவல்ல கொழுப்புச் சேமிப்பாகவும் அமையும். இதனால், நரம்பு சூட்டிகையாகவும், மூளை விழிப்புணர்வாகவும் செயல்பட்டு, உடலில் கழிவு தேங்காமல் பார்த்துக் கொள்ள உதவும். உடல் பருமனாவது நிகழாது. நமது உணவுப் பழக்கத்தால் இந்த நல்லக் கொழுப்பு விகிதாச்சாரம் 1:70 முதல் 1:100 வரை இருக்கிறது. இதை 1:5 என்ற விகிதத்தில் கொண்டுவர ஒமேகா-3 கொழுப்பை அதிகப்படுத்த வேண்டும்.

3. நீரில் கரையக்கூடிய நார்ச் சத்து அவசியம் தேவை: நீரில் கரையாத சாதாரன நார்ச் சத்தானது குடலை மட்டும்தான் சுத்தப்படுத்தும். இது ஓரளவு பரவாயில்லைதான். ஆனால், நீரில் கரையும் நார்ச் சத்தானது நமது உடல் செல்களை சுத்தப்படுத்தி, உடலை புத்துணர்வாக்கி சக்தியாக வைக்க உதவும்.

4. இயற்கையான சி மற்றும் ஈ-உயிர்ச் சத்துக்கள்: நீரில் கரையக்கூடிய கழிவுகளை, இயற்கையான சி-உயிர்ச் சத்தும், கொழுப்பில் கரையக்கூடிய கழிவுகளை இயற்கையான ஈ-உயிர்ச் சத்தும் நீக்க உதவும். இப்படி இயற்கையான உயிர்ச் சத்துப் பொருள் கொண்டு வெளியேற்றும் போது சிறுநீரகங்கள் பழுதாகாமல் இருக்கும்.

5. பக்குவ பூண்டு இருந்தால் மிகவும் நல்லது: ஆயுர்வேத முறையில் பக்குவப்படுத்தப்பட்ட பூண்டானது இரைப்பையில் வீணாகாமல், பதமாகி, சிறுகுடலுக்கு வந்து கெட்ட எண்ணைக் கொழுப்பையும் (Triglyricides) வாய்வையும் நீக்க உதவும். இதனால், குடல் சுத்தமாகி சத்துக்களை எடுத்துகொள்ள (Assimilation) வழி பிற்க்கும்.

6. உயிர் மற்றும் தாதுச் சத்து: உயிர்ச் சத்துக்கள் (Vitamins) மற்றும் தாதுச் சத்துக்கள் (Minerals) உடல் ஆக்கத்திற்கு (Metabolism) கிரியா ஊக்கியாக (Catalyst) செயல்பட்டு, உடலைச் சுறுசுறுப்பாக்கி, கழிவு நீக்க உதவியாக இருக்கும்.

7. மிளகு மற்றும் எலுமிச்சை மந்திரம்: பச்சை மிளகாய்க்கு பதில் மிளகையும், புளிக்கு பதில் எலுமிச்சையையும் உணவில் பயன்படுத்தினால் கெட்டக் கொழுப்புச் சேர்மானம் நிகழாது. அசைவ மற்றும் கொழுப்பு உணவுகளுடன் மிளகு சேர்த்துக்கொண்டால், கொழுப்புச் செரிமாணம் முழுமையாக நடைபெற்று, கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கும். மிளகு உடலின் விஷங்களை வெளியேற்றும் அற்புத மருந்தாகும். அசைவ உணவு சாப்பிட்டபின், எலுமிச்சை சாறு அருந்தினால், வாய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். பச்சை மிளகாய் மண்ணீரலையும், அதிகப்படியான புளி கல்லீரலையும் கெடுத்து கெட்டக் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி வகுக்கும்.

8. நிம்மதியான தூக்கம்: நிம்மதியான ஆழ்ந்த தூக்கம், உடல் உள்ளுறுப்புகளைப் புதுபிக்க உதவும். இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 1.30 வரை மண்ணீரல் புதுப்பிக்கப்படும் நேரமாகவும், அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை கல்லீரல் புதுப்பிக்கப்படும் நேரமாகவும் விளங்குகிறது. இந்த நேரங்களில், நாம் ஆழமாக தூங்கினாதான் மண்ணீரலும் கல்லீரலும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வாக ஆகும். அடிக்கடி தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுத்து கொள்பவர்கள் செரிமானச் சக்தியை இழந்து, கெட்டக் கொழுப்புச் சேர வழிவகுப்பர்.

9. இயற்கையான அகிம்சை எனிமா: எடை குறைக்கும் வைத்திய முறையில், வெளிப்படும் அதிக கழிவுகளை வெளியேற்ற அதிகச் சக்தி தேவைப்படும். ஆக, உடல் வலுவாகப் பயன்பட வேண்டிய சக்தியானது, கழிவு வெளியேற்றத்திற்கு அதிகம் செலவானால், குணம் பெறுவது தாமதமாகும். இதைத் தவிர்க்க இயற்கை வைத்தியமுறை அகிம்சை எனிமா உதவும். இதன் மூலம் மிக குறைந்த சக்தி செலவில் குடல் கழிவுகள், வாய்வு மற்றும் உடல் உஷ்ணம் வெளியேற்றப்படுகிறது. இதனால், எடை குறைப்பு சுமூகமாக நடைபெறுகிறது.

10. சத்து +சக்தி +உடற்பயிற்சி + நேர்மறை மனோபாவம்: நண்பர்களே! எந்த ஒரு எடை குறைப்புச் செயலும் ஒரு கூட்டு முறையில் (Package) இருக்க வேண்டும். அதில், கொழுப்பு கழிவை அகற்ற சக்தி தரும் சக்தி மருத்துவம், கழிவு நீக்கிய இடத்தில் சத்தை நிரப்பத் தினிவான சத்துணவு மருத்துவம், உடல் செயலாக்கத்தை தூண்ட உடற்பயிற்சி மற்றும் மனதை நேர்மறையாக இயக்க மலர் மருத்துவம் அல்லது யோகப்பயிற்சி உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நம்மில் பலர், வெறும் சக்தி மருத்துவத்தால் (அக்குபங்சர், ஹோமியோபதி, மலர் மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள்) முழுமையாக முடியும் என்றோ அல்லது சத்து மருத்துவத்தால் மட்டுமே முடியும் என்றோ கூறுவதில் பாதி உண்மைதான் உள்ளது. ஆனால், கூட்டு முயற்சியால் சுலபமாக எடை குறைப்பு சாத்தியமாகும். மேலும், எடை குறைப்பு செய்வதில் மனோபாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும், சரியான வழிகாட்டுதலும் இருக்குமாயின் எடை குறைப்பு என்பது இலகுவான விஷயமாக இருக்கும்.

11. மலர் மருத்துவத்தின் பங்கு:

நிலைப்பாடு

மலர் மருந்து

வாயைகட்டி, ருசிக்கு பதில் நல்லதைச் சாப்பிட

செர்ரி பிளம்(Cherry Plum)

ஆழ்ந்த தூக்கம் பெற்று புத்துணர்வு பெற்று எடை குறைப்புக்கு உதவ

வைட் செஸ்நட் (White Chestnut)

உடல் குப்பைகளை விரைவாக வெளியேற்ற

கிராப் ஆப்பிள் (Crab Apple)

துர்நீரை உடலில் இருந்து வெளியேற்ற

ராக் ரோஸ் (Rock Rose)

எடை குறைக்க நம்மாலும் முடியும் என்று தன்னம்பிக்கை பெற

லார்ச் (Larch)

நமக்கு விமோசனமே இல்லை என்ற நினைப்பிலிருந்து விடுபட

ஸ்வீட் செஸ்நட் (Sweet chestnut)

உடல் ஒழுக்க நெறியை கடைபிடித்து எடை குறைப்பை நிகழ்த்த

பீச் (Beach)

மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு எடை குறைய

அக்ரிமனி (Agrimony)

எடை மிகுதியால் உண்டான அபாயங்களில் இருந்து மீள

ரெஸ்கிவ் ரெமடி(Rescue Remedy)

உடல் எடையை குறைத்து, நோயைக் குறைப்போம்!

உடல் வளம் பெற்று, ஆயுளை நீட்டிப்போம்!

ஆதாரம் : தன்னம்பிக்கை மாத இதழ்

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page