உடல் எடை குறைய ஆளி விதை, உடல் எடையை குறைக்கும் ஆளி விதை

 உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கியமான ஆளி விதை

 

உடல் எடை அதிகரிப்பது என்பது பொதுவாக கல்யாணம் ஆன பெண்களுக்கு இது ஒரு சவாலாகவே இருக்கிறது. எவ்வளவோ உடற்பயிற்சி, டயட் இருந்தாலுமே உடல் எடை குறையாது.

அப்படி உடல் எடை குறையாமல் இருப்பவர்களுக்கு இதனை சரிசெய்ய இப்போது நம்ம ஒரு பயனுள்ள டிப்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம்.

ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கிய ஒரு அற்புதமான விதையாகும். இது பார்ப்பதற்கு கொள்ளு போன்று காணப்படும்.

இதில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபேட்டீ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை, மனித உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் வளமான அளவில் உள்ளன.

ஆளி விதையை பயன்படுத்தினாலும் நன்றாக சாப்பிடலாம். காலை எழும்பியவுடனே இந்த தண்ணீரை நீங்கள் குடித்தாலே 10 நாளிலேயே எடை குறையும்.

இதை சாப்பிட்டால் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமுமில்லை. இந்த ஆளி விதையை பொடி செய்தும் பயன்படுத்தலாம், பொடி செய்யாமலும் சாப்பிடலாம்.

தேவையானவை

ஆளிவிதை
தண்ணீர்
உப்பு

பயன்படுத்தும் முறை

ஆளிவிதையை முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்க. அதனுடைய வாசனை வரும் அளவிற்கு நன்றாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு வறுத்த ஆளிவிதையை ஆற வைத்து பின் மிக்சியில் போட்டு பொடித்து எடுக்கும் போது, ஆளிவிதை பவுடர் போன்று கிடைக்கும்.

இதனை ஒரு டப்பாவில் போட்டு நன்றாக மூடி வைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு டம்ப்ளர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் குடிக்கிற அளவிற்கு நல்ல சூடான தண்ணீராக இருக்க வேண்டும். இப்போ இந்த தண்ணீரில்1 ஸ்பூன் ஆளி விதை பவுடர் போட வேண்டும்.

பின் இந்த பொடியை தண்ணீருடன் கலந்து நன்றாக கலக்கி விட வேண்டும். இதை நாம் அப்படியே குடிக்க முடியாது. ஏனெனில் இதன் சுவை வித்தியாசமாக காணப்படும்.

எனவே சிறிதளவு உப்பு சேர்த்து இந்த தண்ணீரை நன்றாக கலக்கி விடுங்கள். அதன் பிறகு இதனை அப்படியே நாம் குடிக்கலாம். சுவையாக இருக்கும்.

இதனை குடிக்கும் போது ஸ்பூன் வைத்து கலக்கி விட்டு குடியுங்கள். ஏனெனில் இந்த பவுடர் டம்ளரின் அடிபாகத்தில் அப்படியே தங்கிவிடும்.

குடித்துக் கொண்டிருக்கும் போதே இந்த பவுடர் அடியில் உறைந்து காணப்படும். ஆகவே 2 வாய் குடிச்சிட்டு உடனே கலக்கி விடுங்க. தொடர்ந்து இப்படி குடிக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

ஆளி விதை பொடி செய்யாமல் பயன்படுத்தும் முறை

3 ஸ்பூன் ஆளிவிதையை பொடி செய்யாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள். பின்பு அதில் 1 லிட்டர் கொதிக்கும் சுடுநீரை விட்டு மூடி வையுங்க.

இரவு முழுக்க சுடுநீரில் அப்படியே ஊற வைத்து மறுநாள் உட்கொள்ள வேண்டும். தயாரித்த ஆளிவிதை நீரை ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் முன்பும் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு தொடர்ச்சியாக 10 நாட்கள் பின்பற்ற வேண்டும். பின்பு 10 நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 10 நாட்கள் பின்பற்ற வேண்டும்.

இதனால் உடல் எடை குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது ஆளிவிதைகளில் கிடைக்கும் இதர நன்மைகளை பார்க்கலாம்.

நன்மைகள்

ஆளி விதையில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இந்த கொழுப்பு அமிலங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

ஆளி விதையில் உள்ள ‘லிக்னன்ஸ்’ எனப்படும் ஊட்டச்சத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடண்டு மற்றும் ஈஸ்ட்ரோஜென் பண்புகள் உள்ளன. இது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆளிவிதை மிகவும் நல்லது. இந்த விதையை ஒருவர் தினமும் உணவில் சேர்த்து வர உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

ஆளிவிதையில் தாவர வகை புரோட்டீன் அதிக அளவில் இருக்கிறது. ஆளிவிதையில் உள்ள நார்சத்து இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

ஆளிவிதையில் நார்ச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இது அன்றாட டயட்டில் சேர்க்கப்படும் பொழுது குடல் இயக்கம் சீராகி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

அதிக அளவு நார்சத்து கொண்ட ஆளிவிதை கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதிக செலவில்லாமல் வீட்டில் இருந்த படியே சுலபமாக இந்த ஆளி விதையை பயன்படுத்தி எடையை குறைக்கலாம். நீங்களும் இந்த ஆளி விதையை பயன்படுத்தி தேவையற்ற அதிகப்படியான உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்.

குறிப்பு

கர்ப்பகாலத்தில் ஆளிவிதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page