கருத்தரித்தல்

எளிதில் கருத்தரிக்க சில வழிகள்!

 

அந்தக்காலத்தில் எல்லாம் பெண்களால் பல குழந்தைகளை எளிதில் பெற்றெடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே பலர் பல மருத்துவரை சந்தித்து, கருத்தரிக்க மருந்துகளை எடுத்து சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களும் தான்.

 ஆனால் அத்தகைய மருந்துகளின் உதவியின்றியும் இந்தக் காலத்திலேயும் எளிமையாக கருத்தரிக்க முடியும். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். என்ன தான் கடைகளில் நாவிற்கு சுவையை தரக்கூடிய வகையில் உணவுப் பொருட்கள் விற்கப்பட்டாலும், அதனை வாங்கி உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தாலேயே, உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுடன், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கலாம்.

இந்தக் கட்டுரையில் எந்த ஒரு மருந்துகளின் உதவியின்றியும் எளிதில் கருத்தரிப்பதற்கான சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கருத்தரிக்கலாம்.

 

ஆரோக்கியமான டயட்

கருத்தரித்தல் வாய்ப்பை அதிகரிக்க, தம்பதிகள் இருவரும் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். அதிலும் பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன் நிறைந்த உணவுகள் என அனைத்தையும், அத்துடன் வாரத்திற்கு இரண்டு முறை மீனையும் உணவில் சேர்த்து வர வேண்டும்.

 

 யோகா

தற்போது மன அழுத்தம் தான் பலரையும் வாட்டி வதைக்கிறது. மேலும் மன அழுத்தமே கருத்தரிக்க பெரிதும் தடையை ஏற்படுத்துகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா செய்து வர வேண்டும். இதனால் மனம் அமைதி அடைவதுடன், விரைவில் கருத்தரிக்கவும் முடியும்.

 

ஊட்டச்சத்துப் பொருட்கள்

உடலில் வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் போதிய அளவில் இல்லாவிட்டாலும், கருத்தரிக்க முடியாமல் போகும். எனவே வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் உணவுடன் எடுத்து வாருங்கள். அதிலும் ஃபோலிக் ஆசிட்டை தவறாமல் எடுத்து வந்தால், கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக எந்தவித பிரச்சசினையும் இல்லாமல் பிறக்கும்.

 

பழக்கவழக்கங்கள்

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் தம்பதிகளுக்கு இருந்தால், உடனே அவற்றை நிறுத்த வேண்டும். மேலும் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களான காபி, டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தான் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது. இப்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், உடலில் பல பிரச்சனைகள் ஆரம்பமாகி, பின் கருப்பையில் சிசு தங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே கருத்தரிக்க நினைக்கும் முன், தம்பதிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையான நல்ல உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்பது, உடற்பயிற்சியில் தினமும் ஈடுபடுவது என மேற்கொண்டு வர வேண்டும்.

 

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.