இயற்கையான முறையில் வேகமாக கருத்தரிப்பது எப்படி

இன்று பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறப்பு தள்ளிப் போகின்றதற்கு காரணங்களும் அதற்கான தீர்வுகளும்: 
 எந்த பிரச்சினையை சந்திக்கப் போவதற்கு முன்பும் அதற்கான ஒரு தீர்வு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், குழந்தை பிறப்பு தாமதமாவதற்கான காரணங்களை இக்கட்டுரையில் பார்க்கும் முன்பே அதற்கான தீர்வுகளை பார்த்து விடுவோம்…

   எல்லோரும் நன்கு கவனித்தால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியும், 90களில் அரசாங்க விளம்பரங்களில் பார்த்தால் “இரண்டு பெற்றால் இன்பமயம், இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம்”

2000-ல் பார்த்தால் “ஒன்று பெற்றால் ஒளிமயம்” என்றும் அரசாங்க விளம்பரங்களை எல்லோரும் பார்த்திருக்கலாம்

இன்று யாராவது அந்த மாதிரியான குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா?

இன்று நாம் எல்லா இடங்களிலும் பார்க்கக் கூடிய விளம்பரங்கள் அனைத்துமே செயற்கை கருத்தரிப்பு மையங்களின் விளம்பரங்கள் தான்…

இவ்வளவு எண்ணிக்கையில் திடீரென ஒரு நாடு முழுவதும் குழந்தையில்லா பிரச்சினை வருகிறதென்றால் அது கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒரு பிரச்சினையே…

மாறிவிட்ட வாழ்க்கை நடைமுறைகளே பெரும்பாலும் பெண்கள் கர்ப்பமடையாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது…

90-களில் பெரும்பாலான பெண்களிடையே இருந்த தாவணி கட்டும் பழக்கம் இன்று பெரும்பாலும் கிராமத்தில் கூட இல்லை, 90-களில் 100 பெண்களை பார்த்தால் ஒரு 10 பெண்கள் மட்டுமே குண்டாக தெரிவார்கள், 2020-ல் தாவணி கட்டும் பெண்களையும் பார்க்க முடியவில்லை ஒல்லியான பெண்களையும் பார்க்க முடியவில்லை…

   ஆண்களை குற்றம் சொல்லவில்லையே என்று பார்க்க வேண்டாம், தொப்பை இல்லாத ஆண்களைப் பார்ப்பதும் அரிதாகி விட்டது (10வயது சிறுவர்கள் உட்பட தொப்பையுடன்தான் இருக்கிறார்கள்)

   இன்று பெண்கள் கர்ப்பமாவதற்கு தடையாக இருக்கும் விஷயங்களில் அடிப்படையானது மற்றும் முதன்மையானது PCOD எனப்படும் நீர்க்கட்டி பிரச்சினைகளாகும்.

   நீர்க்கட்டிகளுக்கும், உடல் எடைக்கும் நேரடி தொடர்புள்ளது. உடல் எடை குறைந்தால் நீர்க் கட்டிகளின் எண்ணிக்கை குறையும், எடை கூடினால் எண்ணிக்கை கூடும். இது புரியாமல் வெறுமனே மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு நீர்க்கட்டிகளை குணப்படுத்த முடியாது. ஏனென்றால் நீர்க் கட்டிகளுக்காக கொடுக்கப்படும் மாத்திரைகள் சர்க்கரை நோய்க்காக கொடுக்கப்படும் மாத்திரைகளே ஆகும்.

   அப்படியே நீர்க்கட்டிகள் இருந்தாலும் கூட நாட்டு மருந்து கடைகளுக்கு சென்று கழற்சிக்காய் வாங்கி வந்து காலை மாலை இரண்டு வேளையும் ஒரு பருப்புடன் 4மிளகு வைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் உள்ள கட்டிகள் மாயமாய் மறைந்து போகும். (உடல் எடையையும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்)

   இரண்டாவதாக சீரற்ற மாதவிலக்கு, ஒழுங்கில்லாத மாதவிலக்கை ஒழுங்குபடுத்துவதற்கு  உள்ள
 
சித்த ஆயுர்வேத மருந்துகள்

1.   அசோகரிஷ்ட
2.   அசோக க்ருதம்
3.   அசோகாதி வடீ
4.   பால ஸூர்யோதய ரஸ
5.   நஷ்ட புஷ்பாந்தக ரஸ
6.   பலஸர்பிஸ்
7.   ரஜ ப்ரவர்த்தனீ வடி
8.   ஸூகுமார க்ருதம்
9.   ஸூகுமார ரஸாயனம்

மேற்கண்ட மருந்துகளை சாப்பிட்டால் மாதவிலக்கை சீராக்கி விடும்.

   இதற்கடுத்தபடியாக வரக்கூடிய பிரச்சினை ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே. ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்கு மிகச்சரியான மருந்து சதாவரி லேகியம், சதாவரி க்ருதம் போன்ற மருந்துகளே, ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விரைவில் கர்ப்பமுறச் செய்கிறது.

     மேலும் பெண்களுக்கு அடுத்தபடியாக மருத்துவமனைகளில் செய்யச் சொல்லும் சோதனை கர்ப்பப்பை தொடர்பான குழாய்களில் அடைப்பு இருக்கின்றதா எனப்பார்த்து, அந்தப் பிரச்சினைக்கும் மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை வழியாக தீர்வு காண்கின்றனர். கர்ப்பப்பை தொடர்பான குழாய்களில் அடைப்பு, சதை வளர்ச்சி ஆகியவற்றிற்கு சித்த வைத்தியத்தில் எளிமையான முறையில் மருந்துகளிலேயே தீர்வு உள்ளது. கீழ்க்கண்ட மருந்துகளைச் சாப்பிட்டால் 2,3 மாதங்களில் அடைப்புகள் அனைத்தும் சரியாகி விடும்

1.   கல்நார் பற்பம்
2.   குங்கிலிய  பற்பம்
3.   படிகார பற்பம்
4.   கற்பூர சிலாசத்து பற்பம்
5.   வெங்கார பற்பம்

மேலே சொல்லப்பட்ட அனைத்து மருந்துகளுடன் சிறுநெருஞ்சிலையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை தொடர்பான 99% பிரச்சினைகள் சரியாகி விரைவில் குழந்தைச் செல்வம் உங்களுக்கும் கிடைக்கும்.

குழந்தை வரம் தரும் நெருஞ்சில்

சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நெருஞ்சியின் மருத்துவ குணம் பற்றி சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருஞ்சில் இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. நெருஞ்சில் இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும். நெருஞ்சில் செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.
ஆண்மை பெருக நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும். நெருஞ்சில் இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.


இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? - 
காரணங்களும்... தீர்வுகளும்..

பெரும்பாலும் இன்று ஆண்களும் பெண்களும் காலம் கடந்து திருமணம் செய்துகொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது.  இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு முறை, வாழ்வியல் முறை என்ற அனைத்தும் மாறிவிட்டது.  அதனால் குழந்தையின்மை பிரச்சினை நம்முடைய முந்தைய தலைமுறைக்கு இல்லை என்று அர்த்தம் இல்லை.  அவர்களுக்கு இன்று உள்ள அதிக எண்ணிக்கையில் இல்லை எனலாம். இன்று தோராயமாக நாற்பது விழுக்காடு அளவிற்கு இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. இது இளம் தம்பதியரை மிகுந்த மன உளைச்சலுக்கும் பல குழப்பத்திற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கும் உட்படுத்தியுள்ளது

இன்றைய சூழ்நிலையில் பணம் என்பது வாழ்க்கையின் போக்கை மாற்றிவிட்டுள்ளது.  முடிந்தவரை பெண்கள் முப்பது வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அவர்கள் உடலுக்கும், சுகபிரசவத்திற்கும் நல்லது.  காலம் கடந்தால் அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது மேலும் மருத்துவர்கள் அதிக கவனத்துடன் பிரசவத்தை கையாள நேரிடும். பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக,எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். இருப்பினும்,  தவிர்க்க முடியாத காரணங்களால் முப்பது வயதைக் கடந்து குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இதை நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பது என்பது பல காரணங்களால் தள்ளிப்போகிறது.  இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம், பணம் சம்பாதிக்கும் வேகம், இரவு பகல் பாராமல் உழைப்பது, உடலை கவனிக்காமல் இருப்பது, மடிக்கணினி பயன்படுத்துவது, இயற்கையாக ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ உடலில் உள்ள சில பிரச்சினைகள், ஆண்களுக்கு குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை, குறைவான தூக்கம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருப்பை குழாய் அடைப்பு போன்ற பல காரணங்களால் இவை தள்ளிப்போகலாம்.  மாறியிருக்கும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், திருமணமான புதிதில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுதல், எல்லை மீறிய சட்டபூர்வ மற்றும் சட்ட விரோதமான கருக்கலைப்பு, பி.சி.டி. எனப்படும் "பாலிஸிஸ்டிக் ஓவரீஸ்' குறைபாடு, உயிரணுக்களின் எண்ணிக்கையில் உள்ள குறைபாடு, வீரியமற்ற உயிரணுக்கள், பாதுகாப்பாற்ற முறையில் செய்து கொள்ளும் கருச்சிதைவு ஆகியவையும் குழந்தை தள்ளிபோவதற்கு காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

குழந்தை எதிர்ப்பார்க்கும் தம்பதியர் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்களை தொகுத்துக் கொடுப்பதே இக்கட்டுரையின் நோக்கம்:

1. முப்பது வயதிற்கு மேல் திருமணம் ஆனவர்கள் குழந்தைப்பெறுவதை தள்ளிப்போடாமல் இருப்பது நல்லது. முப்பது வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் நிறைய சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.

 2. குழந்தைப் பேறு மருத்துவரை அணுகி விட்டமின் மாத்திரைகளை வாங்கி தினமும் சாப்பிட்டு, மேலும் உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு உடலை தயார் செய்ய வேண்டும். இது விதை விதைக்கும் முன் நிலத்தை பக்குவப்படுத்துவது போன்றதாகும்

 3. தம்பதியர் காபி, டீ, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப்போட வேண்டும்.

 4. இறுக்கமான உடைகளை அணிவதால் உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு சொல்கிறது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

 5. கால் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்ப்பது நல்லது. உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருக்கிறது. இதை மரியாதைக்காக என்று ஒரு வாழ்வியல் தத்துவமாக நம் முன்னோர் சொல்லியுள்ளனர். அதன் உண்மையான பொருள்  உயிரணுக்களை பாதிக்கும் என்பதே.

 6. மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்தாதீர்கள்.

 7. தேவையான அளவு தூக்கம் தேவை. அதிக இரவு வேலையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.  குறைந்தது 6-8 மணி நேரம் தூக்கம் தேவை.

 8. மன அழுத்தம், மன உளைச்சல் எதுவும் இல்லாமல் மனதை மகிழ்ச்சியாக  வைத்துக்கொள்வது அவசியம்.  முடிந்தவரை எந்தவித மன உளைச்சல் தரக்கூடியவற்றை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்ப்பது நல்லது.  உதாரணத்திற்கு உடல் சோர்வை தரக்கூடிய கடன் வாங்குவது , வீடு கட்டுவது, வேலை மாறுவது, உறவுகளுக்குள் சிக்கல், நீண்ட பயணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

 9. சுடுநீரில்  (Hot Water) குளிப்பதை குறைப்பது நல்லது. அல்லது அதிக சூடு இல்லாமல் குளிக்கலாம். இது உயிரணுக்கள் எண்ணிக்கையை மிகவும் பாதிக்கும்.

10.கோபம் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்த்து மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும்.

 11. பணம் சம்பாதித்துதான், வீடு கட்டித்தான், கார் வாங்கித்தான் என்று குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீர்கள்.

 12. இளவயதில் திருமணம் முடிப்பதால் எந்த பிரச்சனை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் பல வாய்ப்புகள்  குறைந்து விடுகிறது.

 13. 30 வயதை தாண்டியவர்கள் ஒபிசிடி, சுகர், பி.பி,கொலஸ்ட்ரால் என்று ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளவும்.

 14. சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் விட்டு
 சாப்பாடு, ஒழுங்கான தூக்கமின்மை போன்றவற்றை தவிர்க்கவும்

 15. ஆண்களில் விந்தணு குறைபாடு மற்றும் ஆண்மை குறைவு (ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். ) போன்றவை குழந்தைப்பேறின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் பிரச்சினையாகும். இதை தக்க மருத்துவரிடம் ஆலோசித்து சரிசெய்துகொள்ளவும்.

 16. சர்க்கரை நோய்க்கும் குழந்தைப் பேறு இல்லாமைக்கும் தொடர்பு  உள்ளது.  உயிரணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மையை சர்க்கரை நோய் உருவாக்குகிறது. ஆனால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குழந்தையின்மைக்கான சிகிச்சையைப் பெற முடியும். அதற்கான நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 17. அதிக அளவில் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், டிவி பார்ப்பவர்கள் கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். இதனாலும், குழந்தை பிறப்பு தடைப்படுகிறது என்ற தகவல் அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது.

 18. ஓராண்டு வரை முயற்சி செய்துவிட்டு பிறகு மகப்பேறு மருத்துவரை அணுகி கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்று மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்க்கவும்.

 19. தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் ஆணுறுப்பை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.

20. உடல் பருமனை குறைப்பது

21. சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதலை தடுத்தல்

22. எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற Radiation சிகிச்சைகளை தவிர்த்தல்.

23. சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளுதல்

24. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

25. உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

26. தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் வேலை செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

27. வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

28. ஜிங்க் உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.

29. செலினியம்(Selenium) நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் விந்தணு குறைபாட்டைத் தடுக்கும்.

30. அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்ளுதலை தவிர்க்கவும்.

ஆண்களுக்கான காரணங்கள் :

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.
விந்து அணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, விந்து அணுக்களின் இயக்கத் தாமதம் என இரண்டுக்குமே, உணவில் முளைகட்டிய பயறு வகைகளும், இலவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும். தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரப்பருப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்கக் கண்டிப்பாக உதவும்.போகம் விளைவிக்கும் கீரைகள் எனச் சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றைக் கண்டிப்பாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவுக்கு விந்து அணுக்களை அதிகரிப்பதிலும் இதன் இயக்கத்தைக் கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கின்றன இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.பூனைக்காலி விதை, ஓரிதழ்தாமரை, நிலப்பனைக் கிழங்கு, முதலான பல சித்த மருத்துவ மூலிகைகள் பயனளிப்பதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்தியுள்ளது. நெருஞ்சில் முள் விந்தணுக்களின் உற்பத்தி நடைபெறும் செர்டோலி செல்கள் சிதைவைக்கூடச் சரிசெய்வது தெரியவந்துள்ளது.

பெண்களுக்கான காரணங்கள் :

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.  

குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியவை.

உணவு:
நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.

உடல் எடை:
உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.
 
உடற்பயிற்சி:
முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.

புகைப்பழக்கம்:
புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.

குடிப்பழக்கம்:
போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.

பிற மருந்துகள்:
ஆண்களில் பிற மருந்துகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.