உடல் எடை குறைய ஓமம்

 தொப்பை குறைந்து ஸ்லிம் ஆக உதவும் ஓமம்

 

உணவே மருந்து என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். நாம் சாப்பிடும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அஞ்சறை பெட்டி பொருட்கள் நமக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் தராமல் பாதுகாக்கும். ஆனால் இப்போது பலரது வீட்டில் அது இருப்பதே இல்லை. சீரகம், வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம், சோம்பு என அனைத்துமே செரிமான பிரச்சைக்கு நல்லது. ஜீரண உறுப்புகள் வலுவாக இருந்தாலே நாம் ஸ்லிம் ஆக இருக்கலாம்.

 

 உடல் எடை அதிகரிக்க முக்கியமான விஷயம் ஜீரணக்கோளாறு தான். உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் ஓமம் தினமும் சாப்பிட்டால் நல்லது.

 

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். தேவையற்ற கொழுப்பு குறையும். வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

 

ஓமம், கடுக்காய் தோல், திரிகடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்பு (Stamina) பெருகும். இதனால் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும்.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். இடுப்பு வலிமை பெரும்.


உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page