விரதம் ஏன், எதற்காக, எப்படி, எப்போது?

விரதம் ஏன், எதற்காக, எப்படி, எப்போது?

 
‘வயிறு நிறைந்திருக்கும் போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். 

பெண்களையும் விரதத்தையும் பிரிக்கமுடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம்.  கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.

விரதங்கள் பலவிதம்...

விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம். 

ஏன், எதற்காக விரதம்

ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? 
‘‘நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. 

சரியான இடைவெளி தேவை 

அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். 

தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்...

குறைந்தது வாரம் ஒருமுறை 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.

வயிறுமுட்ட சாப்பிடுவது தவறு 

வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. 

விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

திரவ உணவு விரதம் 

அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். 

அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். 
மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். 

இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.

பழங்கள் விரதம் 

இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. 

நடிகைகள், மாடல் போன்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம்.கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. 

குறைந்த கலோரி விரதம்

இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். 

உடலின் நச்சுக்கள் வெளியேறும் 

வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.
 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page