குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சீத்தாப்பழம்...

குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சீத்தாப்பழம்...

 
நாம் சாப்பிடும் சீத்தாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாது உப்புகள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

* இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சீத்தாப்பழமானது இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. இப்போது இந்த சீத்தாப்பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.

* சீத்தாப்பழம் அதிகம் சாப்பிட்டு வந்தால், இது இதய வால்வுகளில் உள்ள கொழுப்பைக் கரைத்து இதயநோய், இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

* அதைப்போல் சோர்வு அதிகம் உள்ள குழந்தைகளுக்கு, சீத்தாப்பழத்தை தினமும் கொடுத்து வந்தால், அவர்கள் எப்போதும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

* சீத்தாப்பழத்தில் உள்ள தாமிரச்சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. எனவே காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால், இது வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையை சீராக்க உதவுகிறது.

* கர்ப்பிணிப் பெண்கள் சீத்தாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடல் வலிமை அடைவதுடன், வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலையும் மேம்படும்.

* சீத்தாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கலாம். சீதாப்பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

* சீத்தாப்பழ மரத்தின் பட்டைகள் நீரிழிவு நோயை குணமாக்குகிறது. இதன் இலைகள் நோய்த்தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.

* சீத்தாப்பழம் நம் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரத்தில் சாப்பிடும் போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, அதன் பிறகு சாப்பிடலாம்.

* காசநோய் பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால், காசநோயை கட்டுப்படுத்தலாம்.