உணவை குறைத்தாலும் உடல் எடை குறையவில்லையே ஏன்?

உணவைக் குறைத்தாலும் உடல் எடை குறையவில்லையே ஏன்? எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

உடல் எடை மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது.

விதிமுறை என்னவென்றால்: உட்கொள்ளும் கலோரி தினசரி செலவிட்ட கலோரியை விட குறைவாக இருக்க வேண்டும்.

நாம் உணவை குறைத்தால் அது மூளைக்கு தெரிந்துவிடும். உடனே கலோரியை சேமிக்க துவங்கிவிடும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை (Metabolic Rate) பாதிக்கும். இதனால் எடை குறைப்பு கடினமாகிவிடும். எனவே நாம் மூளையை ஏமாற்ற வேண்டும். சில குறிப்புகள்:

• அதிக கலோரி உணவுகளைத் தவிர்க்கவும்.

• சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

• கார்போஹைட்ரேட்டுகளை நார்ச்சத்து மற்றும் புரதத்துடன் மாற்றவும்.

• வெள்ளை அரிசிக்கு பதிலாக, தானியங்களைப் பயன்படுத்துங்கள்.

• தினமும் மூன்றுவேளை உணவை பிரித்து ஐந்து முறை உட்கொள்ளவும்.

• உங்கள் உணவில் 75% பழங்கள் மற்றும் காய்கறிகளாக இருக்கவேண்டும்.

• வேகவைத்த உணவு சிறந்தது. பதப்படுத்தப்பட்ட உணவு தவிர்க்கப்பட வேண்டும்.

• குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

• அடிக்கடி தண்ணீர் குடிப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.