உடல் கழிவுகளை வெளியேற்ற கரும்பு சாறு...

கரும்புச்சாறு அடிக்கடி குடிப்பவர்களா நீங்கள் ?
 
 
எனில் உடல் கழிவுகளை சரியாக வெளியேற்றுகிறீர்கள் என்று அர்த்தம்...
 
நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தே சாப்பிடுகிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? 


உடலிலிருந்து நச்சுக்கள் (Toxins) வெளியேறும்

*கரும்பு சாறு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. 

*உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.
 

Best Energy source for Body and Mind

*அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். 

*உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது. 

*அதே போன்று விட்டமின்-சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் விரைவில் குணமாக உதவுகிறது. 
 

நோய்த் தொற்றுக்களை அழிக்கக்கூடியது

* கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.

*அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.
 

பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை

*சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது. 
 

உடலில் நீர்ச்சத்தை குறையாமல் நிர்வகிக்கிறது

*உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.
 

உடலைக் குளிர்விக்கிறது

*பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. 
 

மூளை செயல்திறனை அதிகரிக்கிறது

* நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. 

*கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் இது உதவுகிறது. 

கல்லீரல் ஆரோக்கியம்

*பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

* சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்த பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.
 

சிறுநீரக பிரச்சினைகளுக்கு

* சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
 

இரத்தம் உறைதலை தடுக்கும் 

* கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. 
 

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

*முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. 

*இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.

*உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கரும்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது. 

*கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
 

உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்

உடல் எடை குறைய Home Page