மூன்று வேளையும் நேரத்திற்கு சாப்பிடலாமா?
உடல் எடை குறைய விழிப்புணர்வு பதிவு...
உலகின் முதல் மனிதன் NON_Vegetarian தான் இதை யார் மறுக்கிறீர்கள்?
இன்று நாம் உண்பது போல
* காலை இட்லி/ தோசை
மதியம் மூன்று தட்டு சாதம்
இரவு கொத்து பரோட்டா
என்றா ஆதி மனிதன் சாப்பிட்டான்..??
* விடியற்காலை எழுந்து நம்மைப்போன்று டீ/ காபி குடித்து விட்டு வேலையைத் தொடங்கும் பழக்கமெல்லாம் அவனிடம் இருக்கவில்லை..
* காலை எழுந்ததும் தன் குழுவுடன் சேர்ந்து ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வேட்டைக்கு செல்வான்.
* வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. வேட்டையாடிய விலங்கை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவதற்குள் சூரியன் மறைந்து விடும்..
* சூரியன் அடங்குமுன் உறங்கச் சென்று விட்டான்.
ஆகவே ஆதிமனிதன் உண்டது தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே என்பது தெரிகிறது.
* ஆதிமனிதர்களின் உணவுப்பழக்க வழக்கங்களை அப்படியே இன்றளவும் தொடர்ந்து வரும் பழங்குடி இனங்களை ஆராய்ந்து பார்த்தால்,
* நம்மை தாக்கும் நீரிழிவு நோய் / உயர் இரத்த அழுத்தம்/ இதய நோய்கள் பற்றி இன்னும் அறியாமலே வாழ்கின்றனர்.
* இன்றும் ஆப்பிரிக்காவில் வாழும் மசாய் எனும் பழங்குடியின மக்கள் தினமும் முழு கொழுப்பு பால், முட்டை , இறைச்சி போன்ற கொழுப்பு மட்டுமே அதிகமாக உண்டு வாழ்கின்றனர்.
* நமக்கு வந்த நோய்களான சுகர்/ ப்ரஷர் / இதய குழாய் அடைப்பு / பி.சி.ஓ.டி யாவும் அவர்களை அண்டவில்லையே ஏன்?
* இட்லி தோசை சாப்பிடும் நம்மால் வேட்டை மிருகங்களான சிங்கங்களை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியுமா??
உணவில் இருக்கிறது அத்தனையும்
* அவனது வாழ்க்கை முறையில் நமக்கு கிடைக்கும் பாடம் தினமும் ஒரு வேளை மட்டுமே முழுக்கொழுப்பு உணவுகளே அவன் உண்டான்
* நாம் மூன்று வேளையும் உணவு உண்டே ஆக வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதி ஏதும் இருக்கிறதா ?? இல்லை.
* நமது தேவைக்கு ஏற்ப, பசிக்கு ஏற்ப உணவு உண்டால் போதுமானது. அது நிச்சயம் மூன்று வேளை உணவாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
* கார்போஹைட்ரேட்டை பிரதான உணவாக உண்ணும் நமக்கு ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் ஒருமுறை பசி எடுக்கிறது.
* அதற்கு நடுவிலும் பலருக்கு பசி எடுக்கிறது . அதை அடக்க இருக்கவே இருக்கிறது நொறுக்குத் தீனிகள்.
* ஆனால் கொழுப்புணவை பிரதானமாக உண்ட நம் முன்னோருக்கு தினமும் ஒரு வேளை உணவே போதுமானதாக இருந்திருக்கின்றது.
உதாரணம் : மாமிசப் பட்சினிகளான சிங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு சிங்கம் தனக்கு உணவாய் மான்/ஆடு/மாடுகளை உண்ணும்.
* ஒருமுறை உணவுண்டால் அதற்கு மீண்டும் பசி எடுக்க பல நாள் ஆகிறது.
* பசி அடங்கிவிட்டால் மீண்டும் பசி வரும் வரை அது வேட்டைக்குச் செல்லாது.
* நமது இயற்கைப்படி கொழுப்புணவு வயிற்றுக்கும் உடலுக்கும் நிறைவாக இருக்கிறது.
* மாவுச்சத்து வயிற்றுக்கு நிறைவாய் இருப்பதில்லை. அதனால் மீண்டும் மீண்டும் பசி எடுக்கிறது. பசியெடுத்தால் மனிதன் தலைகால் புரியாமல் உண்கிறான்.
உண்மை என்னவெனில் அதிக மாவுச்சத்துக்கு அதிக எடைபோடுகிறது. அதோடு நோய்களும் வருகிறது...
இதனை யாரேனும் மறுப்பவர்கள் உளரோ??
உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147
உடல் எடை குறைப்பு தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, உடல் எடை குறைய Home Page-ற்கு செல்லவும்
உடல் எடை குறைய Home Page