கர்ப்பப்பை கட்டிகள் கரைய, கர்ப்பப்பை நீர்கட்டிகள் குணமாக, கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள், கர்ப்பப்பை எடுத்த பிறகு

கர்ப்பப்பையில் கட்டிகள் ஏன் ஏற்படுகின்றது?


கர்ப்பப்பை கட்டிகளுக்கான சிகிச்சைகளும் முழுமையான தீர்வுகளும்…

கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பப்பையில் சுமக்கும் காலத்தில் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன . இவ்வாறு ஏற்படும் கட்டிகள் பெரிதும் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு. பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே ஏற்படுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும்.

இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது சிறந்ததாகும்.

அறிகுறிகள்:

மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி என்பன ஏற்படும். தனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டச்சத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப் பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம். கருப்பையின் உள் துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

காரணங்கள்:                               

 மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றது. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது. கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம்.

நவீன சிகிச்சை:

பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது. இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது.

இதனால் கருப்பை குழாயில் இருந்த அடைப்பு முற்றிலும் நீக்கப்படுவதால் கர்ப்பம் சாத்தியமாகிறது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் 60 முதல் 70 சதவீதம் வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாக கண்டறியப்பட் டுள்ளது. பெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், இரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம்.

எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும். இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். முட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீ அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம். ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.

கர்ப்பப்பைக்கு இயற்கை மற்றும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை:

கர்ப்பப்பை என்பது பெண்மையின் அடையாளம், பெண்களின் பெரும்பாலான ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பையை சார்ந்தே இருக்கின்றன…  கர்ப்பப்பையில் வரும் பிரச்சினைகளான நீர்க்கட்டிகள், சதை மற்றும் நார்க்கட்டிகளை இயற்கையான முறையில் சரி செய்ய வேண்டுமே தவிர கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கர்ப்பப்பையை முழுவதுமாக எடுத்து எறிவது தீர்வு அல்ல… இன்று இருக்கும் ஒரு சில பணத்திற்கு ஆசைப்படும் மருத்துவமனைகளும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் எதிர்கால உடல்நலனைப் பற்றிக் கவலைப்படாமல் கர்ப்பப்பையை வெட்டி எறிவதில் குறியாக உள்ளன…

மேலும் கர்ப்பப்பையினால் ஏற்படும் பிரச்சினைகளை விட நீங்கள் கர்ப்பப்பையை எடுத்ததற்குப் பிறகு உங்கள் உடலில் வரும் பிரச்சினைகள் ஏராளம், ஏராளம். கர்ப்பப்பையை எடுக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் ஏற்கெனவே கர்ப்பப்பையை எடுத்து 10 வருடமான யாராவது ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டோ அல்லது அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கின்றது என்பதை பற்றி ஒரு ஆலோசனை செய்து விட்டு பிறகு முடிவெடுப்பது சாலச் சிறந்தது…

வெட்டி எறிய கர்ப்பப்பை வேண்டாத பொருள் அல்ல…
கர்ப்பப்பை பெண்மையின் அடையாளம்,..
பெண்களின் ஆரோக்கியத்தின் அடித்தளம்…
 

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.