கோடைக் காலத்தில் தயிர் சாப்பிடலாம், ஆனால் தினமும் சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா?
கோடைக் காலத்தில் தயிர் சாப்பிடலாம், ஆனால் தினமும் சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா?
கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் நம் உடலுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என இந்தியாவின் பண்டைய மருத்துவ முறையான நம் தமிழ் மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் வாத, பித்த, கபம் ஆகியவற்றை பொறுத்து ஒருவருக் கொருவர் இது மாறுபடும்
தயிரில் கபமும் பித்தமும் அதிகமாகவும் வாதம் குறைவாகவும் இருக்கிறது. ஆகவே எந்தவொரு பருவத்திலும் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தயிர் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை தருகிறது. ஆனால் இதை தினசரி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள்
கோடை காலத்தில்….
ஏன் காட்டாயம் தயிர் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்…
கோடை காலத்தில் நமது வயிற்றை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க, உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்து கிறார்கள் தயிரில் அதிகளவு ப்ரோபையாடிக்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன புரதம், கால்சியம், விட்டமின் B மற்றும் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன.
சிலருக்கு தயிர் சாப்பிட்டால் முகப்பரு, தோல் அலர்ஜி, செரிமானப் பிரச்சனைகள், உடல் சூடாவது போனறவை ஏற்படுவதாக கூறுவதை கேட்டிருப்போம். தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ர்சியாகும் என்றுதான் நாம் நினைத்திருப்போம்.
ஆனால் அப்படியல்ல, உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மைகள் தான் அதில் உள்ளன. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை.
ஏன் தயிர் சாப்பிட்டால் நம் உடல் சூடாகிறது
தயிர் சாப்பிட்டால் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் நாமும் அதை குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிட்டு வருகிறோம். ஆனால், புளிப்பு சுவையும் சூட்டை அதிகரிக்கும் தன்மைகளையும் கொண்ட தயிர் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
தயிரில் கபமும் பித்தமும் அதிகமாகவும் வாதம் குறைவாகவும் இருக்கிறது. ஆகவே எந்தவொரு பருவத்திலும் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடும் போது சிலருக்கு உடல் சூட்டை அதிகரிப்பதற்கு இதுவே காரணமாகும். அதுமட்டுமல்லாமல், தயிர் சாப்பிட்டால் நல்லது என நினைத்து, அதிகமாக சாப்பிடும் போதுதான் உங்களுக்கு பருக்களும் வேறு பல பிரச்சினைகளும் வரும் எனினும் தயிரை சரியான முறையில் சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தயிரை எப்படி சாப்பிட வேண்டும்..
கோடை காலங்களில் தயிரை தினமும் சாப்பிட்டால் உடல் சூடாகும். அதற்குப் பதிலாக நாம் தினசரி மோரை அருந்தலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மோரில் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. தயிரோடு தண்ணீரை சேர்க்கையில், அதிலிருக்கும் வெப்பத் தன்மை சமனாகிறது. தண்ணீர் சூட்டை குறைப்பதோடு தயிரின் குளிர்ச்சியையும் அதிகரிக்கிறது. ஆகையால் கோடை காலத்தில் தயிர் சாப்பிட வேண்டும் என நினைத்தால், தயிரில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி மோராக அருந்துங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும்.
இன்னொரு முக்கியமான விஷயம், தயிரை சூடாக்க கூடாது. அப்படி சூடாக்கினால் அதன் தன்மையை இழந்துவிடும். இதில் கப தோஷம் அதிகமாக இருப்பதால், உடல் பருமனாக இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அதேப்போல், தயிரோடு பழங்களை சேர்க்க கூடாது என ஆராய்ச்சி கூறுகிறது. அப்படி சேர்த்தால் அவை பொருந்தாத கலவையாக மாறிவிடும்.
நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக் கின்றோமே பிணி...