அனைத்து ஊர்களிலும் தெரு ஓரங்களிலும் கிடைக்கும் கிணற்றடி பூண்டுச் செடியின் எண்ணற்ற மருத்துவ பயன்கள்..

அனைத்து ஊர்களிலும் தெரு ஓரங்களிலும் கிடைக்கும் கிணற்றடி பூண்டுச் செடியின் எண்ணற்ற மருத்துவ பயன்கள்..

தோல் நோய்களுக்கு 

உடம்பில் ஏற்படும் தோல் பிரச்சினையான தேமல், சொறி இவைகள் குணமாக இந்த கிணற்றடி பூண்டு இலையின் சாறை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே  நாட்களில் மறையும்.

சளியை வெளியேற்றும்

கிணற்றடி பூண்டு செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சினை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப்பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும்.
 
காயங்களை உடனே ஆற்றும்

நம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு இரத்தம் இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த கிணற்றடி பூண்டு செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் இரத்தம் உடனடியாக நிற்கும்.

 சர்க்கரை நோய் புண்கள்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த கிணற்றடி பூண்டு இலை என்பது குறிப்பிடத்தக்கது.
 
நாள்பட்ட புரையோடிய புண்கள்

நீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த கிணற்றடி பூண்டு இலையை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.
 
மூட்டு வலிகளுக்கு

கிணற்றடி பூண்டு செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சினை உடனடியாக ஒரு  முடிவுக்கு வந்துவிடும்