30 நாட்களில் உடலில் அதிகமாக உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் அற்புத உணவு!
30 நாட்களில் உடலில் அதிகமாக உள்ள கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் அற்புத உணவு!
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்டிராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்டிரால் பிரச்சினையை சந்திக்கக் கூடும். என்ன தான் கொலஸ்டிரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
இங்கு கொலஸ்டிராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத உணவு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விதை இல்லாத கருப்பு பேரிச்சம் பழம் – 3-4
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்
பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் உள்ள அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.
இஞ்சி
இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்டிரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்டிராலைக் கரைத்துவிடும்.
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் முழுமையாக கரைந்து விடும்.
குறிப்பு
இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொலஸ்டிரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.