பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிலாச்சத்து எடுத்துக் கொள்ளலாமா?
பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிலாச்சத்து எடுத்துக் கொள்ளலாமா?
சிலாச்சத்து என்றாலே அது ஆண்களுடைய மலட்டுத்தன்மையை போக்கவும் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்குமான மூலிகை என்று நமக்கு தெரியும். அந்த சிலாச்சத்தை பெண்கள் எடுத்துக் கொள்ளலாமா என்று நமக்கு தெரியாது. ஆனால் ஆயுர்வேதத்தில் பெண்களும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதன்மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சிலாச்சத்தை எடுத்துக் கொள்வதால் பெண்களின் உடலில் ஏற்படும் ஆரோக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக சிலாச்சத்து கூறப்படுகிறது. ஆண்களின் ஆரோக்கியம் மேம்படுவது போலவே பெண்களுடைய இனப்பெருக்க மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஒட்டுமொத்த பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெண்களும் இதை பயன்படுத்தலாம். அதுதவிர வேறு நிறைய பயன்கள் இதில் இருக்கின்றன.
சிலாச்சத்து என்பது என்ன?
சிலாச்சத்து என்பது உடலை வலுவாக்கி பாலியல் ஆரோக்கியத்தை ஆண்களுக்கு அதிகரிக்க செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை (பிசின்) பொருள். இந்தியாவின் இமயமலை பகுதிகளில் அதிகம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
அடர்ந்த கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும் ஒரு வகை பிசின் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது
சிலாச்சத்தை பெண்கள் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் எடையை குறைக்க உதவும் சிலாச்சத்து :
பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று உடல் பருமன். எவ்வளவு தான் கடினமாக உடற்பயிற்சிகள், டயட் ஆகியவற்றைப் பின்பற்றினாலும் அவை ஆண்களுக்கு எப்படி வேகமாக உடல் எடையை குறைக்க உதவுமோ அதுபோல பெண்களுக்கு ஆவதில்லை. அதனால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த சிலாச்சத்து இது உதவும்.
அதேபோல பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். இந்த மன அழுத்தத்தைக் குறைக்க செய்து எடையை குறைக்க சிலாச்சத்தை பயன்படுத்தலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்யும் சிலாச்சத்து :
பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் ஏற்படும் பல்வேறு வகை ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை. குறிப்பாக இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படும் போது அது ரத்தசோகையாக மாறும்.
மாதவிடாய் காலங்களில் அதிக அளவு உதிரப்போக்கு ஏற்படுவதும் இரத்த இழப்பை உண்டாக்கும். இந்த சிலாச்சத்து எடுத்துக் கொள்ளும்போது ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்க செய்து ரத்த சோகையைப் போக்கும்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சிலாச்சத்து :
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துவதன் மூலம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வேலையை சிலாச்சத்து செய்கிறது.
குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் நோயெதிர்ப்பு மண்டல பலவீனத்தைக் குறைத்து பருவ காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க சிலாச்சத்து உதவும்.
பெண்ணின் கருவளத்தை மேம்படுத்தும் சிலாச்சத்து :
பெண்களின் கருவளம் பாதிக்கப்படுவதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை தொடங்கி ஹார்மோன் மாற்றங்கள், கருப்பை பலம் குறைவாக இருப்பது, பிசிஓடி மற்றும் தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக அமைகின்றன.
இது போன்ற பிரச்சினைகளைச் சரிசெய்து பெண்களின் கருப்பையை பலப்படுத்தி மலட்டுத்தன்மையை நீக்கி கருவளத்தை மேம்படுத்து்ம் ஆற்றல் இந்த சிலாச்சத்துக்கு உண்டு.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிலாச்சத்து :
ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு எலும்புகள் மிக வேகமாகத் தேய்மானம் ஏற்படும். எலும்புகளின் அடர்த்தி குறைபாடு உண்டாகும். இதற்குக் காரணம் அவர்களுடைய உடலில் ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை.
பெரும்பாலான பெண்களுக்கு மெனோபஸ் காலகட்டத்தில் எலும்பு அடர்த்தி குறைபாடு அதிகமாக உண்டாகும். ஆர்த்தரைடிஸ் பிரச்சினை உண்டாகும். இவற்றை சரிசெய்வதில் சிலாச்சத்து முக்கியப் பங்குண்டு
தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு ஷிலாஜித் :
சிலாச்சத்தில் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் ஜிங்க் சத்தும் அதிகமாக இருக்கின்றன. இவை ப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது.
குறிப்பாக வயதான தோற்றத்தைத் தடுத்து இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.
சிலாச்சத்து இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
சிலாச்சத்து பவுடர் வடிவிலும் கிடைக்கும். அதை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்கலாம்.
பெரும்பாலும் சப்ளிமெண்ட்டுகளாகக் கிடைக்கின்றன. உங்களுடைய ஆயுர்வேத மருத்துவர் ஆலோசித்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.