தினந்தோறும் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதனால் கிடைக்கும் அற்புத பலன்கள்....!
தினந்தோறும் ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதனால் கிடைக்கும் அற்புத பலன்கள்....!
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன இவை அனைத்துமே உடலின் எலும்பு வளர்ச்சிக்கு மற்றும் உறுதிக்கும், இதயம், இரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.
தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெருகும்.
ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், சுக்கு சேர்த்து இடித்து பல் பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.
ஆரஞ்சு பழங்களை சாறு பிழிந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.
ஆரஞ்சு அதிகம் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சியடைகிறது. வியர்வையில் வெளியேறிய சத்துக்களையும் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள் ஈடு செய்கிறது.