தினமும் ஒரு டம்ளர் பிரியாணி இலை நீர் குடிப்பதால் உண்டாகும் பலன்கள்...

தினமும் ஒரு டம்ளர் பிரியாணி இலை நீர் குடிப்பதால் உண்டாகும் பலன்கள்...

பிரியாணி இலை, புலாவ், பிரியாணி, சூப் போன்ற உணவுகளில் வாசனைக்காக சேர்க்கப்படுகின்றது.

இதில் விட்டமின் A, C, B6 மற்றும் இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட முக்கிய சத்துப்பொருட்கள் கலந்திருக்கிறது.

இதை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவின் சுவை கூடுவது மட்டுமல்ல , சில ஆரோக்கிய நன்மைகளும் ஏற்படுவது உண்டு.

இந்த இலையை உணவில் மட்டுமல்லாது, இதனை கொதிக்க வைத்து அருந்துவதனாலும் பல நன்மைகள் கிடைக்கின்றது.

கிடைக்கும் நன்மைகள் :

குறைந்த மற்றும் உயர் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதில் பிரியாணி இலை மிகவும் நன்மை பயக்கும்.

குறிப்பாக பிரியாணி இலைகளை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

வளர்ச்சிதை மாற்றத்தை விரிவுபடுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க இந்த பிரியாணி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

பிரியாணி இலை நீரை குடிப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதுடன், உடலில் உள்ள அனைத்து நோய்களும் விலகும்.

இந்த பிரிஞ்சி இலையில், ஏ, பி, சி, ஈ, இரும்பு போன்ற பல வகையான வைட்டமின்கள் உள்ளன.மேலும் இந்த இலை உடலில் அதிகரித்த கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.

பிரியாணி இலை நீரை தினமும் குடித்து வந்தால், உடல் நன்றாக இருக்கும். இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. செரிமான நிலையை பராமரிக்க இது மிகவும் முக்கியமானது.

எப்படி தயாரிப்பது?

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இதில் ஒரு கைப்பிடி அளவுக்கு (1,2) இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

2 நிமிடங்கள் நன்கு கலக்கி விட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள்.

கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறிது தேன் சேர்த்து டீ போலவும் குடிக்கலாம் அல்லது நன்கு ஆறவைத்து தாகம் எடுக்கும்பொழுது அவ்வப்போது குடித்து வரலாம்.