சொட்டை தலையிலும் முடி முளைக்க கற்றாழை எண்ணெய்! முடி வளர இதை விட சிறந்த எண்ணெய் இருக்கவே முடியாது!!

கற்றாழை எண்ணெயை மட்டும் தடவினால் சொட்டை தலையிலும் முடி முளைக்கும்! முடி வளர்ச்சிக்கு இதை விட சிறந்த எண்ணெய் இருக்கவே முடியாது!!

முடி உதிர்தல் பிரச்சினையை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்து விட்டால் ரொம்பவே நல்லது, ஆனால் நீண்ட நாட்களுக்கு முடி உதிர்வது தொடர்ந்து வந்தால் சொட்டை அல்லது வழுக்கையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களுக்கும் அதிக முடி உதிர்வதால் வழுக்கை விழுகிறது. இதனால் முடியின் அடர்த்தி வெகுவாக குறைந்து தலையில் சருமம் தெரியும்படி ஆகி விடுகிறது. அது மட்டுமல்லாமல் சிலருக்கு தலையில் அடிபட்டு தழும்புகள் இருக்கும்.

தழும்புகள் இருக்கும் இடங்களில் மீண்டும் முடி வளர்வது தடுக்கப்படுகிறது. இது போன்றவர்களும் இந்த எண்ணெயை தடவினால் தழும்புகள் விரைவாகவே மறைந்து அந்த இடத்தில் மீண்டும் முடி வளர துவங்கும். அத்தகைய அற்புதமான ஆற்றல் கற்றாழை எண்ணெய்க்கு உண்டு. மண்டை ஓடு பகுதியில், இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அந்த இடத்தில் புதிய செல்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் தலைமுடியானது வளராமல் அப்படியே நின்று விடுகிறது.

இத்தகைய பிரச்சினையை சரி செய்து, மீண்டும் வேர்கால்களில் இருந்து முடி முளைக்க செய்யும் அற்புத ஆற்றல் இந்த கற்றாழைக்கு உண்டு. கற்றாழையிலிருந்து கிடைக்கக் கூடிய ஜெல் கொண்டு தயாரிக்கப்படும், இந்த எண்ணெய் தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கு உதவி புரிகிறது. இதனால் தலைமுடி நீண்டதாகவும், அடர்த்தியாகவும் வளர்கிறது. இதனுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து நாம் ஆரோக்கியமான மற்றும் குளிர்ச்சி ஏற்படுத்தாத எண்ணெயை தயாரிக்க போகிறோம்.

முதலில் மூன்று கற்றாழை மடல்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் நன்கு வடிந்த பின்பு உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் வழித்து எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஐந்தாறு முறை நன்கு தண்ணீரில் கழுவினால் தான் நன்கு சுத்தமாகும். பிறகு ஒரு நிமிஷம் வரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து அதனுடன் ஒரு பெரு நெல்லிக்காய் அளவிற்கு இஞ்சியை எடுத்து தோலை நீக்குங்கள். நன்கு கழுவி பொடி பொடியாக வெட்டி கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைக்க தண்ணீர் எதுவும் பயன்படுத்தக்கூடாது.

அடுப்பில் ஒரு அடிகனமான வாணலியை வையுங்கள். அதில் 200 மில்லி அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் அரைத்து எடுத்த இந்த கற்றாழை ஜெல், இஞ்சி சாற்றையும் சேருங்கள். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு நன்கு கொதிக்க விடுங்கள். இல்லையேல் மேலே தெறிக்க ஆரம்பிக்கும். நன்கு கொதித்து வந்து ஓரளவுக்கு சுண்டும் பொழுது ஒரு டீஸ்பூன் அளவிற்கு முழு மிளகுகளை அப்படியே சேருங்கள். மிளகில் இருக்கும் சத்துக்கள் தழும்புகள், புழுவெட்டு போன்றவற்றை நீக்கி மீண்டும் அந்த இடத்தில் முடி வளர செய்யும். மீண்டும் நன்கு கொதிக்க விடுங்கள்.

ஒரு நிமிடம் கழித்து அரை கைப்பிடி அளவிற்கு பச்சையாக இருக்கும் கருவேப்பிலைகளை சேர்த்து கொதிக்க விடுங்கள். கருவேப்பிலை கருக்கருவென முடியை அடர்த்தியாக வளர செய்யும். மேலும் கண் பார்வைக்கு நல்ல குளிர்ச்சியை கொடுத்து கண் பிரச்சினைகளையும் போக்கும். 200ml தேங்காய் எண்ணெய் பாதி அளவிற்கு சுண்டியதும், எண்ணெய் தெளிய ஆரம்பிக்கும். எண்ணெய் நன்கு தெளிந்த பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள். குளிர்ச்சியாக ஆறியதும் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணையை நீங்கள் வழக்கம் போல தடவி வந்தால் எப்பேர்பட்ட வழுக்கை தலையிலும் மீண்டும் பிரெஷ் ஆக கருகருவென அடர்த்தியாக நீண்ட கூந்தல் வளரும்.