டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாக இரத்த தட்டுக்கள் அதிகரிக்க இந்த 9 உணவு போதும்...
டெங்கு காய்ச்சலில் இருந்து குணமாக இரத்த தட்டுக்கள் அதிகரிக்க இந்த 9 உணவு போதும்...
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுவாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்னவென்றால் ரத்த சிவப்பணுக்களில் உள்ள ரத்தத்தட்டுகளின் அளவு குறைந்து கொண்டே போவதுதான். இதை சரிசெய்து விட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் மீண்டுவிட முடியும். அப்படி ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு என்ன மாதிரியான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
பருவ காலம் தொடங்கியதும் நோய்த் தொற்றுக்கள் வருவது இயற்கையானது. அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள போதிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதனால் மழைக்காலத்தில் உணவுகளைத் தேர்வு செய்யும் போது அவை ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்ததாகவும் நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் கிவி :
இரத்த சிவப்பணுக்களில் உள்ள ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு கிவி பழம் மிகச்சிறந்த ஒன்று என்று கூறலாம்.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இரத்த தட்டுகளின் உற்பத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.
அதனால் டெங்குவால் பாதிக்கபபட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 1-2 கிவி பழத்தை கொடுத்து வந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் பப்பாளி இலை :
பப்பாளி இலைகளில் நிறைய பயோ - ஆக்டிவ் பண்புகள் இருக்கின்றன.
குறிப்பாக பப்பாளி இலையில் உள்ள அசிட்டோஜெனின் என்னும் மூலக்கூறு டெங்கு பாதிப்பால் ஏற்பட்ட இன்ஃபிளமேஷன்களைக் குறைப்பதோடு ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கச் செய்யும் மாதுளை :
மாதுளைப் பழம் என்று சொன்னாலே அது உடலில் ரத்தம் ஊற உதவும் என்று காலங்காலமாக நமக்குத் தெரியும்.
இதற்கு காரணமே மாதுளையில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் தான். இவை ரத்தத் தட்டுக்களை அதிகரிப்பதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. இதன்மூலம் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக குணமடையலாம்.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் ஸ்பின்னாச் :
டெங்கு காய்ச்சல் வந்தவர்களின் தினசரி உணவில் கட்டாயம் ஒரு கீரை வகை சூப்பாகவோ, ஸ்மூத்தியாகவே எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
கீரைகளில் இரும்புச்சத்துடன் சேர்த்து வைட்டமின் கே - வும் அதிகமாக இருக்கிறது. இது ரத்தம் உறைதலைத் தடுத்து ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவி செய்கிறது.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்து நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப்ஃப்ரூட் ஆகிய சிட்ரஸ் பழங்களை டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் இஞ்சி - மஞ்சள் :
இந்திய பாரம்பரிய மசாலாக்களில் பெரும்பான்மையானவை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
குறிப்பாக இஞ்சி மற்றும் மஞ்சளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்.
அதிலும் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உடல் வெப்பநிலை குறைவதோடு மூட்டுகளில் ஏற்படும் வலியையும் குறைக்கும்.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் நட்ஸ் வகைகள் :
பாதாம், சூரிய காந்தி விதைகள், பூசணிக்காய் விதைகள் ஆகியவற்றில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாக இருக்கின்றன.
இவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் இருப்பதால் டெங்குவில் இருந்து வேகமாக மீண்டு வரும்.
இரத்த தட்டுக்களை அதிகரிக்கும் சிக்கன், மீன் :
டெங்குவால் பாதிக்கப்பட்வர்களுக்கு சிக்கன், மீன், டோஃபு உள்ளிட்ட புரதங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது காய்ச்சலால் உண்டான உடல் பலவீனம் குறையும்.
மிக வேகமாக அதிலிருந்து மீண்டு வர இந்த உணவுகள் உதவும். ஆனால் எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை கொடுக்கக் கூடாது. சூப்பாகவோ, வேகவைத்தோ, கிரில் செய்தோ கொடுக்கலாம்.
நீர்ச்சத்தின் அவசியம் :
மேலே சொன்ன எல்லா வகை உணவுகளையும் விட டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
அதனால் நிறைய தண்ணீர், இளநீர், எலுமிச்சை சாறு, சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள், மோர் போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால் டெங்குவில் இருந்து வேகமாக மீண்டு வர முடியும்.