கூவைக் கிழங்கு என்றும் சேப்பங்கிழங்கு

இந்த கிழங்கை கட்டாயம் பார்த்திருப்பீங்க... இதோட மாவுல என்னென்ன அதிசயம் இருக்குன்னு தெரியுமா?

மரன்டா அருண்டினசியா என்னும் ஆரோரூட் செடியின் வேர்களில் இருந்து எடுக்கப்படும் மாவு ஆரோருட் மாவு ஆகும். ஆரோருட் என்பது தமிழில் கூவைக் கிழங்கு என்றும் சேப்பங்கிழங்கு என்றும் அறியப்படுகிறது. ஆனால் பரவலாக ஆரோருட் அல்லது ஆரோட் என்றும் அறியப்படுகிறது. கூவைக்கிழங்கு என்னும் ஆரோருட் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

இது ஒரு பரந்த, தட்டையான, முட்டை வடிவ இலைகள் கொண்ட சிறிய வற்றாத மூலிகை செடியாகும். 3 முதல் 5 அடி உயரத்திற்கு இது வளர்கிறது. இதன் வேர்கள் நிலத்திற்கு அடியில் சிறியதாக, உருளை வடிவத்தில், க்ரீம் வெள்ளை அல்லது லேசான சிவப்பு நிறத்தில் தோன்றும் கிழங்கு வகையாகும்.இந்த கிழங்கு மெல்லிய செதில்களால் மூடப்பட்டிருக்கும்.
 
கூவைக்கிழங்கு மாவு என்பது என்ன? 
கூவைக்கிழங்கில் 23% மாவுச்சத்து உள்ளது. இந்த கிழங்கில் இருந்து மாவை தயாரிப்பதற்கு முன்னர், இந்த கிழங்கை கழுவி, அதன் வாசனையைத் தவிர்க்க அதன் செதில்கள் அகற்றப்படுகின்றன. இதன் வேர்கள் நன்றாக கழுவப்பட்டு, நீரை முழுவதும் வடித்தபின் இயந்திரத்தின் மூலம் விழுதாக்கப்படுகின்றன. இந்த பால் போன்ற திரவத்தை கடினமான துணியில் வடிகட்டுவதால் தூய்மையான மாவு அடியில் தேங்கப்படுகிறது. இந்த மாவை வெயிலில் அல்லது வெப்பமான இடத்தில் காய வைப்பதன்மூலம் தயாராகிறது கூவைக்கிழங்கு மாவு. 

இந்த மாவு மென்மையான, தூய்மையான வெள்ளை நிறத்தில், வாசனையற்ற ஒரு மாவாக தயாராகி இருக்கும். உணவு தொழிற்சாலைகளில் உணவிற்கு அடர்த்தியைக் கொடுப்பதற்காக இந்த மாவு சேர்க்கப்படுகிறது.

புட்டிங் :
புட்டிங், சாஸ் போன்றவற்றில் கூவைக்கிழங்கு மாவு பரவலாக உணவு அடர்த்திக்காக பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான மாவை விட இரண்டு மடங்கு அடர்த்தி இந்த மாவில் இருக்கும். சூடான திரவங்களில் இதனை சேர்ப்பதற்கு முன்னர், குளிர்ந்த நீரில் இந்த மாவைக் கரைத்துக் கொள்வதால் கட்டிகள் உண்டாவது தவிர்க்கப்படுகின்றது. குக்கீஸ், நொறுக்குத் தீனி போன்றவற்றிலும் வழக்கமான மாவிற்கு மாற்றாக இந்த கூவைக்கிழங்கு மாவை பயன்படுத்தலாம். க்ளுடன் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. கூவைக்கிழங்கு கொண்டு தயார்க்கப்பட்ட பிஸ்கட் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை வயிற்றிற்கு இதமாளிப்பதாக அறியப்படுகிறது.

கூவைக்கிழங்கின் நன்மைகள் :

எல்லா வித உணவுகளிலும் கலக்கும் திறன், எளிதில் செரிமானம் ஆகும் தன்மை ஆகியவை கூவைக்கிழங்கில் இருப்பதால் குழந்தைகளுக்கான பார்முலா மற்றும் உணவுகளில் கூட அதிகம் பயன்படுத்தும் மாவாக இது ஏற்கப்படுகிறது. சமையலில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் இதன் நன்மைகள் பெருமளவில் அடங்கியுள்ளன.

செரிமானத்திற்கு :

குடல் இயக்கத்தை கட்டுப்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது கூவைக்கிழங்கு. கூவைக்கிழங்கில் இருக்கும் உயர்ந்த மாவுச்சத்து காரணமாக, இது ஒரு மென்மையான மலமிளக்கியாக செயல்பட்டு, இரைப்பை குடல் நோய்க்குறியால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. எரிச்சல் அல்லது அழற்சியைக் குறைக்கும் தன்மை கூவைக்கிழங்கில் இருப்பதால் இரைப்பை குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த முறையில் குடலை இதமாக வைக்க உதவுகிறது. மேலும் கூவைக்கிழங்கு மாவு வயிற்றுப்போக்கு மற்றும் பல இரைப்பை குடல் நோய்களுக்கான ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மூலமாக வெளியேற்றப்பட்ட ஊட்டச்சத்துகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக இது செயல்படுகிறது. குமட்டலைப் போக்க உதவுகிறது.

அமிலத்தின் சமநிலை :

கூவைக்கிழங்கில் காணப்படும் ஒரே மாவுச்சத்து கால்சியம் ஆகும். கால்சியம் வடிவத்தில் இருக்கும் கால்சியம் க்ளோரைடு, மனித உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சமநிலையை நிர்வகிக்க தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாகும்.

கைக்குழந்தைகளுக்கு :

மற்ற மாவுப் பொருட்களை விட எளிதில் ஜீரணம் ஆகும் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு உணவாக இது கருதப்படுகிறது. கூவைக்கிழங்கை ஜெல்லியாக தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். எளிதில் செரிமானம் ஆகும் காரணத்தால் தாய்ப்பாலுக்கு மாற்றாகவும் இந்த மாவை பயன்படுத்தலாம்.

குளுடன் இல்லாத மாவு :

பொருள் சோளம் அல்லது க்ளுடன் போன்றவற்றிக்கு ஒவ்வாமை இருப்பவர்களுக்கான ஒரு சிறந்த மாற்றாக இது கருதபப்டுகிறது. கோதுமை மாவிற்கு ஒரு சிறந்த மாற்றாக இது பயன்படுகிறது. க்ளுடன் இல்லாமல் பேக் செய்யப்படும் உணவுகளில் பரவலாக இது பயன்படுத்தப்படுகிறது.

விஷத்திற்கான மாற்று மருந்து :

சில பகுதிகளில், சில வகையான காய்கறி விஷத்திற்கு மாற்று மருந்தாக கூவைக்கிழங்கு பயன்படுத்தபடுகிறது. கூவைக்கிழங்கு வேர்களை அரைத்து காயத்தின் மேல், பூச்சிக்கடி மேல் தடவுவதால் விஷம் வெளியேற்றப்படுவதாக அறியபப்டுகிறது. தேள், சிலந்தி போன்ற பூச்சிகடிக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

பிரசவத்தில் :

கர்ப்ப காலத்தில் போலேட் சத்து உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாகும். கூவைக்கிழங்கு போலேட்டின் ஆதாரமாக விளங்குகிறது. 100 கிராம் கூவைக்கிழங்கில் 338 மைக்ரோ கிராம் அளவு அதாவது ஒரு நாளைக்கு தேவையான போலேட் அளவில் 84% அளவு இந்த கிழங்கில் உள்ளது. வைட்டமின் பி 12 உடன், ஃபோலேட், டிஎன்ஏ தொகுப்பு மற்றும் உயிரணு பிரிவில் ஒரு முக்கிய அங்கமாகும். கருவுறுதலுக்கு முந்தைய காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் போதிய அளவு போலேட் எடுத்துக் கொள்வதால், நரம்புக் குழாய் பாதிப்பு மற்றும் இதர பிறப்பு குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க உதவும்.

எடை குறைப்பு :

கூவைக்கிழங்கு கொழுப்பு அற்றது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த நன்மை அளிக்கிறது. சாஸ், சூப் போன்றவற்றில் கொழுப்பு மற்றும் அதிக கலோரி பற்றிய பயம் இன்றி இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம் :

கூவைக்கிழங்கில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. உடலின் அணுக்கள் மற்றும் திரவங்களில் பொட்டாசியம் ஒரு முக்கிய கூறாக இருந்து செயல்படுகிறது. இது இதய துடிப்பை நிர்வகித்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

சருமத்திற்கான நன்மைகள் :

பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மூலிகைத் தீர்வாக கூவைக்கிழங்கு அமைகிறது. இந்த கூவைக்கிழங்கு கீழே குறிப்பிட்டுள்ள வகையில் சருமத்திற்கு நன்மை அளிக்கிறது: வைசூரி மற்றும் தோல் அழுகல் போன்றவற்றால் உண்டாகும் சரும தொற்று மற்றும் அரிப்பைப் போக்க கூவைக்கிழங்கு மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.

பேபி பவுடர் :

தென் அமெரிக்காவில், கூவைக்கிழங்கு மாவை குழந்தைகளுக்கு பவுடர் போல் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் லேசாக, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. சருமத்திற்கு இதனை பயன்படுத்துவதால் சருமம் மிகவும் மென்மையாக மிருதுவாக உணரப்படுகிறது.

மாயச்ச்சரைசர் :

மாயச்ச்சரைசர் மற்றும் டால்கம் பவுடரில் அடர்த்தியை அதிகரிக்க இந்த மாவு பயன்படுகிறது. ஒப்பனைப் பொருட்களில் இதனைப் பயன்படுத்துகின்றனர். கூவைக்கிழங்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டிருப்பதால், சருமத்தின் மேற்பரப்பில் ஊடுருவி சிறந்த முறையில் செயல்பட உதவுகிறது. கூவைக்கிழங்கு மாவு, உடலில் பயன்படுத்தும் பவுடர்களில் பயன்படுத்தப்படுவதால் சருமம், பட்டு போன்ற மென்மையை அடைந்து மிருதுவாகிறது. ஈரப்பததை உறிஞ்சி, சருமத்திற்கு மென்மையைத் தருகிறது.

சரும பிரச்சனை :

கூவைக்கிழங்கு மாவு, லேசான, மென்மையான மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள ஒரு பொருள். உடலுக்கு பயன்படுத்தும் பவுடர் தயாரிப்பில் இது சேர்க்கப்படுகிறது. இந்த மாவை உடலில் தடவுவதால் கொப்பளம், தடிப்பு, புண் போன்றவை மறைகின்றன.

சேற்றுப்புண் :

சேற்றுப்புண் போன்ற பாதம் தொடர்பான பாதிப்புகளில் கூவைக்கிழங்கு ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. கூவைக்கிழங்கில் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இல்லாத காரணத்தால் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த மட்டும் இது துணை புரிகிறது.

காயங்கள் :

கூவைக்கிழங்கில் குணப்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. மாவுக்கட்டு போட இதனை பயன்படுத்துவதால் காயங்கள் குணமாகின்றன. வேனிற் கட்டியின் சிகிச்சைக்காக மற்றும் புத்துணர்ச்சிக்காக ஆப்பிரிக்காவில் இதனை பயன்படுத்துகின்றனர்.

கூந்தல் பராமரிப்பு :

ஒப்பனைப் பொருட்களில் அடர்த்தியை அதிகரிக்க கூவைக்கிழங்கு பயன்படுத்தபடுகிறது. கூந்தல் பராமரிப்பில் இதன் நன்மைகள் அதிக அளவில் அறியப்படாதபோதிலும், இதன் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பின் காரணமாக கூந்தல் பராமரிப்பில் இது பயன்படுகிறது.

ஹேர் டை தயாரிப்பில் :

மற்ற மூலப்பொருட்களுடன் இணையும் தன்மை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் தன்மை ஆகிய காரணத்தினால், ஹேர் டையில் இது பயன்படுத்தப்படுகிறது.

கூவைக்கிழங்கின் ஊட்டச்சத்து விபரங்கள் :

இந்த வேர்க்கிழங்கின் ஆரோக்கிய நன்மைகளுக்கு முக்கிய காரணம் இதில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு மட்டுமே. இந்த வேர்கிழங்கு பதப்படுத்துவதற்கு முந்தையை நிலையில் அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்கிறது. இந்த கிழங்கை மாவாக பதப்படுத்திய பின்னர் இதன் ஊட்டச்சத்து மதிப்பு சற்று குறைகிறது. அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கலோரி :

கூவைக்கிழங்கின் கலோரிகள் மிகவும் குறைவு. கூவைக்கிழங்கு 100 கிராம் எடுத்துக் கொள்வதால் அதன் கலோரி அளவு 65 ஆக இருக்கிறது. இது உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு , மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை விட மிகவும் குறைவானதாகும். இந்த மாவுச்சத்தில் 80% அமிலோபெக்டின் மற்றும் 20% அமிலோஸ் உள்ளது.

வைட்டமின் :

வைடமினின் ஆதாரமாக விளங்குவது கூவைக்கிழங்கு. 8 அவுன்ஸ் கூவைக் கிழங்கை பச்சையாக உட்கொள்வதால் வைடமின் ஏ தினசரி உட்கொள்ளல் அளவில் 1% பூர்த்தியாகிறது. தைமின் தினசரி உட்கொள்ளல் அளவில் 22%, ரிபோப்லவின் தினசரி உட்கொள்ளல் அளவில் 8%, நியாசின் தினசரி உட்கொள்ளல் அளவில் 19% என்று வைட்டமின் பி சத்து கிடைக்கிறது. உணவை ஆற்றலாக மாற்றுவதில் இந்த வைட்டமின் பி சத்து உதவுகிறது. ஆனால் கூவைகிழங்கை பதப்படுத்தி மாவாக தாயாரிக்கும்போது இந்த ஊட்டச்சத்தின் அளவு குறைகிறது. பச்சையாக கிடைக்கும் கூவைக்கிழங்கு வைட்டமின் பி 6 தினசரி உட்கொள்ளல் அளவில் 30%, பண்டோதேனிக் அமிலம் 7 %, போலேட் 192% ஆயாவை உள்ளது. ஆனால் அதே சமயம், கூவைக்கிழங்கு மாவில் வைட்டமின் பி 6, தினசரி உட்கொள்ளல் அளவில் 1 %, பண்டோத்னிக் அமிலம் 3% மற்றும் போலேட் 4% மட்டுமே பூர்த்தியாகிறது.

கனிமங்கள் :

கனிமங்களைப் பொறுத்த வரையில், பச்சை கூவைக்கிழங்கை விட, கூவைக்கிழங்கு மாவில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. 8 அவுன்ஸ் பச்சை கூவைக்கிழங்கில் கால்சியம் தினசரி உட்கொள்ளல் அளவு 1% , மற்றும் மாங்கனீஸ் தினசரி உட்கொள்ளல் அளவு 20% ஆக உள்ளது. அதே அளவு கூவைக்கிழங்கு மாவில், கால்சியம் தினசரி உட்கொள்ளல் அளவு 9% ஆகவும், மாங்கனீஸ் தினசரி உட்கொள்ளல் அளவில் 53% ஆகவும் உள்ளது. பொட்டாசியம் சத்தின் ஆதாரமாக விளங்கும் கூவைக்கிழங்கு மாவில் , 100 கிராம் மாவில் 454மிகி அளவு பொட்டாசியம் உள்ளது. இது ஒரு நாளுக்கு தேவையான அளவில் 10% ஆகும் . தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், மற்றும் ஜின்க் போன்ற கனிமங்கள் குறைந்த அளவில் உள்ளன.

புரதம் :

புரதம் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படுவதாகும். 8 அவுன்ஸ் கூவைக்கிழங்கில் புரதத்தின் தினசரி உட்கொள்ளல் அளவு 19% உள்ளது. ஆனால் கூவைக்கிழங்கு மாவில் இதன் அளவு 1 % மட்டுமே உள்ளது. வெப்ப மண்டல உணவுகளான உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் , மரவள்ளிகிழங்கு ஆகியவற்றை விட இதில் புரத அளவு அதிகமாகும்.

இதர ஊட்டச்சத்துகள் :

கூவைக்கிழங்கு மாவில் உயர்ந்த அளவு கார்போ சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. பச்சை கூவைக்கிழங்கில் 10% கார்போ சத்து இருக்கும்போது, கூவைக்கிழங்கு மாவில் 67% உள்ளது. இதேபோல், கூவைக்கிழங்கில் நார்சத்து 12% ஆகவும், மாவில் 31% ஆகவும் உள்ளது. என்ன வாசகர்களே, இப்போது கூவைக்கிழங்கைப் பற்றியும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் தெரிந்து கொண்டீர்களா.