கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் விரைவில் குணமாக...

கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் விரைவில் குணமாக...

அதிக அளவில் மது அருந்துவதால  மற்றும் சில காரணங்களினாலும் கல்லீரல் தனது இயக்கத்தை நிறுத்தி மிகவும் குறைவாக செயல்படும். அப்படி செயல்படும் பொழுது கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். அப்பொழுது கல்லீரல் நமக்கு பெரியதாக காணப்பட்டு அதில் வீக்கம் ஏற்பட்டது போல் இருக்கும். அதற்கு பெயர் தான் கல்லீரல் வீக்கம் என்பார்கள்.

அளவுக்கு அதிகமான கொழுப்பான உணவுகளை உண்பதாலும் கல்லீரலில் கொழுப்புகள் படிந்து விடும். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி கொடுக்காவிட்டாலும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு உடல் எடை அதிகமாக காரணமாக இருக்கும்.

இப்படிப்பட்ட கல்லீரல் வீக்கத்தை இயற்கை மூலிகை மருந்து மூலம் சரி செய்வது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவு!

தேவையான மூலிகைகள் :

1. கருந்துளசி – 1 கைப்பிடி
2. கருந்துளசி வேர் – 10கிராம்
3. மிளகு – 10
4. சித்தரத்தை – 25கிராம்
5. சதகுப்பை – 25கிராம்

செய்முறை:

1. கருதுளசி மற்றும் கருந்துளசி வேர், சதகுப்பை, மிளகு, சித்திரத்தை என அனைத்து தேவையான மூலப்பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள்.

2. மூலிகைகளை நிழல் காய்ச்சலாக நன்கு காயவைத்து சுத்தம் செய்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

3. பாத்திரத்தில் 200மி நீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு பொடியை கலந்து 100மிலி ஆக சுண்டியதும் சூடாக டீ போல குடிக்கவும்.

4. தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு முன் அல்லது பின் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளவும்.

இத்தனை தொடர்ந்து 1 மாதம் எடுக்கும் பொழுது கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவை சுத்தமாகும், வீக்கம் வலி ஆகியவை குணமாகும்.