டெங்கு, மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை இப்படி எந்த காய்ச்சலாக இருந்தாலும் மூன்றே நாளில் குணமாக...

 டெங்கு,  மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை 

இப்படி எந்த காய்ச்சலாக இருந்தாலும் மூன்றே நாளில் குணமாக...


இந்த கசாயத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தாலே போதுமானது. எப்பேர்ப்பட்ட விஷக்காய்ச்சலும் உடனடியாக குணமாகிவிடும். டெங்கு,  மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எப்படிப்பட்ட விஷக்காய்ச்சல் ஆக இருந்தாலும் சரி அதை சீக்கிரம் குணமாகிவிடும். அது மட்டும் இல்லாமல் காய்ச்சலால் வந்த உடல் வலி, மூட்டு வலியையும் சேர்த்து போக்கும்.

குறிப்பா கொசுக்களினால் ஏற்படும் டெங்கு காய்ச்சலை இது குணப்படுத்த உதவும். டெங்கு வந்தாலே இரத்தத்தில் உள்ள ரத்தக் தட்டுக்களின் அளவு குறையும். இது குறைவது நோயின் தீவிர அறிகுறி. எனவே இரத்த தட்டுகளின் அளவை அதிகரித்துக் கொள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தற்போது கோவிட் பாதிப்பினால் கூட இரத்த தட்டுகளின் அளவு குறைவு ஏற்படுகிறது. இதுவும் கோவிட்டின் ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்புகளை சரி செய்யக்கூடிய பானத்தை தயாரிக்கும் முறையை காண்போம்.

1. 10- மிளகு. இது இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து சாப்பிடலாம்.

2. ஒரு ஸ்பூன் சீரகம் – உண்ட உணவை செரிக்க உதவும். அகத்தை சீராக்கும்.

3. கிராம்பு – 4 இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

4. ஏலக்காய் -2  இவை அனைத்தும் ஒருவர் சாப்பிடுவதற்கான அளவு முறைகள். ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது அதற்கு ஏற்றார் போல் இவைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த நான்கு பொருட்களையும் இஞ்சி பூண்டு இடிக்கின்ற கல்லில் போட்டு நசுக்கிக் கொண்டு ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு இதில் சேர்ப்பதற்காக பப்பாளி இலைகளை பறித்து நன்றாக அலசிக் கொள்ளவும். பப்பாளி இலை பாக்டீரியாவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற விஷ காய்ச்சலுக்கு இது நல்ல பலன் கொடுக்கும்.

இதில் ஏழு வகையான ஃபீனால் சேர்மங்கள் இருக்கின்றன. இதில் உள்ள வேதிப்பொருட்கள் டெங்கு வைரஸின் மூலக்கூறுகளை அழிக்க உதவுகிறது. பப்பாளி இலைச்சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

3 வெற்றிலை அளவு கொண்ட பப்பாளி இலையை சிறியதாக கட் பண்ணி கொதிக்கிற நீரில் போடவும். பிறகு அதில் இடித்து வைத்த கலவையை சேர்க்கவும். மேலும் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொண்டு நன்றாக கொதிக்க விடவும்.

உடலில் ரத்த தட்டுகளின் அளவு குறைந்தால் அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த கசாயத்தை மாதம் ஒரு முறை குடித்து வர இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மஞ்சள் காமாலை,புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கொதிக்கின்ற கசாயத்தில் ஒரு துண்டு கருப்பட்டியை சுவைக்காக சேர்க்கவும். கருப்பட்டி நன்றாக கரைந்து ஒரு டம்ளர் நீர் அரை டம்ளராக மாறும் வரை கொதிக்கவிட்டு சிறிது ஆறியதும் டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும். இதை பொறுக்கின்ற சூட்டில் காலை, மாலை என இருவேளையும் குடித்து வர எப்பேற்பட்ட காய்ச்சலும் குணமாகிவிடும். காய்ச்சலினால் ஏற்படும் உடல் வலி மூட்டு வலியும் சரியாகும்.