பழுபாகல் அல்லது மெழுகுபாகல் காயின் ஆரோக்கிய நன்மைகள்

பழுபாகல் அல்லது மெழுகுபாகல் காயின் ஆரோக்கிய நன்மைகள்

இந்த காயை வாரத்தில ரெண்டு நாள் சாப்பிட்டா, புற்றுநோயே வராது! நோய்க்கு எதிரி பழுபாகல்!!

பழுபாகல் அல்லது மெழுகு பாகல் என்ற காய். இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று காணப்படுகிறது. மழைக்காலத்தில் சுலபமாக கிடைக்கும்.

குட்டிப் பலாக்காய் போல இருக்கும் பழுபாகல், ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பது ஒருபக்கம் என்றால், அதன் சுவையோ மிகவும் ருசியானது. நாட்டு காய்கறிகளில் ஒன்றான மெழுகுபாகலை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது : 

அதிகரிக்கும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும் பழுபாகல் உதவுகிறது. உங்களுக்கு அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நோய்த் தொற்றுகளைத் தடுக்கிறது :

 பழுபாகல் காயை உட்கொள்வதால், ஜலதோஷம் மற்றும் காற்றில் பரவும் பிற வைரஸ்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.  ஜலதோஷம் மற்றும் பிற வைரஸ்களால் ஏற்படும் நோயைத் தடுக்கவும் உதவும்.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு : 

நிறைய நார்ச்சத்து கொண்ட மெழுபாகல், உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், கழிவாக மலம் மூலம் வெளியேற இந்தக் காய் உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கும் :

சில அறிக்கைகளின்படி, புற்றுநோயை எதிர்க்கும் பல சிறப்பு கூறுகள் பழுபாகலில் காணப்படுகின்றன, அவை உடலுக்குள் சென்று புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளை உருவாக்குக்கிறது. அவ்வப்போது பழுபாகல் காயை உண்டு வந்தால், புற்றுநோய் அபாயம் குறைக்கிறது.
 
நீரிழிவு நோய் கட்டுப்பாடு :

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் பழுபாகல் காய்கறியை சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த காய்கறியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது: 

உடல் எடையை பராமரிப்பது இன்று பெரும்பாலானவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.  ஃபிட்டாக இருக்க போராடுபவர்களுக்கு பழுபாகல் உதவியாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அவசியமான காய்கறிகளில் ஓன்று பழுபாகல்.

வயதாவதை தடுக்கும் பண்புகள்: 

வயதாகும்போது தோற்றத்தில் முதுமை வருவதை யாரும் விரும்புவதில்லை. பழுபாகலில் இருக்கும் சிறப்புத் தன்மை, வயதாகும் உடலின் செயல்முறையை மந்தமாக்குகிறது.  

சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது:

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பதில் மெழுகுபாகல் பயனுள்ளதாக இருக்கும்.

கண்பார்வையை கூர்மையாக்கும் காய்: 

மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே பழுபாகல் காயும் நல்ல கண்பார்வையைப் பராமரிக்க நன்மை பயக்கிறது.

சரும பிரச்சினைகள்: 

ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது பழுபகலை உட்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக மாற்ற உதவுகிறது.

மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது: 

பழுபாகல் காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், மூளை ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.