டெஸ்டோஸ்டிரோன் லெவல் அதிகரிக்க நெருஞ்சில்..
டெஸ்டோஸ்டிரோன் லெவல் அதிகரிக்க நெருஞ்சில்..
வயல்
ஓரங்களில் எளிதாக காணக்கூடிய நெருஞ்சில் செடி குறித்து
கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. மருத்துவ குணங்கள் அடங்கிய இதை எப்படி
பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெருஞ்சி முள் என்றால் என்ன :
நெருஞ்சி,யானை
நெருஞ்சில், திரிகண்டம், சுவதட்டம், காமரசி, சுதம் போன்ற பெயர்களில்
அழைக்கப்படுகிறது. யானையின் மெத்தென்ற பாதங்களை துளைத்து யானையை வணங்க
செய்வதால் இதற்கு யானை வணங்கி என்ற பெயரும் காமத்தை பெருக்கும் தன்மை
கொண்டதால் இது காமரசி என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் நிற பூக்களை
கொண்டிருக்கும்.
சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்றும் நெருஞ்சி :
அரிசியுடன்
இந்த செடியை கலந்து வேகவைத்து அதனுடன் நாட்டுசர்க்கரை சேர்த்து குடித்து
வந்தால் சிறுநீர் பாதையில் இருக்கும் பிரச்சினைகள் சரியாகும். சிறுநீர்
எரிச்சல் குணமாகும். வெள்ளைப்படுதல் தீவிரமாக இருக்கும் பெண்களுக்கு இவை
நல் மருந்தாக இருக்கும். மேலும் சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்றும் தன்மை
நெருஞ்சிக்கு உண்டு.
ஆண்மையை பெருக்கும் நெருஞ்சி :
விந்தணுக்கள்
அதிகரிக்க ஆண்களுக்கு மருந்தாகும் நெருஞ்சில். இந்த செடியை அரைத்து அதை
வெள்ளாட்டுபாலில் ஊறவைத்து அதை வடிகட்டி சுத்தமான தேன் கலந்து குடித்து
வந்தால் ஆண்மை பெருக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. விந்தணுக்கள்
வீரியமாகவும், அதிக எண்ணிக்கையும் கொள்ள நெருஞ்சில் விதைபொடி, வெள்ளரி
விதைபொடி இரண்டையும் கலந்து பாலில் குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
ஆண் ஹார்மோன் அதிகரிக்க நெருஞ்சில் :
டெஸ்டோஸ்டிரோன்
ஹார்மோனின் அளவை நெருஞ்சில் விதைகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நெருஞ்சியில் இருக்கும் வேதிபொருளான செர்டொலி ஆனது செல்களை தூண்டி
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகிறது. சித்த
மருத்துவத்தில் ஆண்மை பெருக்கி மருந்துகளில் நெருஞ்சிக்கு தனி இடம் உண்டு.
செரிமானம் சீராக நெருஞ்சில் :
நெருஞ்சி பொடியை கொத்துமல்லி விதைகளுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் செரிமானம் சீராகும். செரிமான மண்டலம் மேம்படும்.
இந்த
நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நன்றாக காயவைத்து ஒரு பங்குக்கு 4 பங்கு
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வற்ற வைத்து இந்த பானத்தை குடித்து
வந்தால் சிறுநீரக பாதை தொற்றுகளை சரி செய்யும்.
நெருஞ்சி
பொடியை ஆரோக்கியத்துக்காகவோ அல்லது மருந்தாகவோ எடுக்கும் போது
மருத்துவரின் அறிவுரையுடன் எடுப்பது பாதுகாப்பானது. பலன் அளிக்க கூடியது.