கல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள்!!

கல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் 

பாரம்பரிய மருத்துவ பொருள்!!


குன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை பல பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வளிக்கிறது என காண்போம்.

குன்றிமணி எண்ணெயானது கிருமிநாசினியாகவும், சுவாச குழாயில் ஏற்படும் பிரச்சினைகள், சிறுநீரக தொற்று போன்ற உள் அழற்சி நோய்கள் மற்றும் சரும தொற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக உள்ளது.

குன்றிமணி எண்ணெய் :

குன்றிமணி எண்ணெயின் மனமானது மிகவும் இனிமையாகவும், உற்சாகமாகவும் இருக்கும். எனவே இது பல அழகுசாதன பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமன்றி நீரிழிவு நோய் மற்றும் இருமலை குணப்படுத்தவும் உதவுகிறது. அத்துடன் அழற்சி எதிர்ப்பானாகவும் இந்த குன்றிமணி எண்ணெய் பயன்படுகிறது.

நரம்புகள் பாதுகாப்பு :

பக்கவாதம், மூளை மற்றும் முதுகெலும்பில் ஏற்படும் அதிர்ச்சியினால் உண்டாகும் அழற்சிக்கு இந்த எண்ணெய் மருந்தாக உதவுகிறது.

கல்லீரல் பாதிப்பு :

குன்றிமணி எண்ணெயானது அசெட்டமினோஃபென் போன்ற வலி நிவாரணிகளால் கல்லீரலில் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது.

பல் ஆரோக்கியம் :

பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தில் குன்றிமணி எண்ணெய் மிக முக்கிய பங்காற்றுகிறது. குன்றிமணி எண்ணெயின் பிசின் ஒரு சிறந்த பற்சொத்தை அடைப்பானாக பயன்படுகிறது. மேலும் பல் மருத்துவத்தில் ஒரு நம்பத்தகுந்த மருந்தாக இது உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குன்றிமணி எண்ணெய் ஸ்ட்ரெப்டோகோகஸ் மியுடன்ஸ் போன்ற பாக்டீரியாக்கள் பற்சொத்தை மற்றும் பற்குழிக்கு வழிவகுப்பதை தடுக்கிறது. இந்த எண்ணெயைக் கொண்டு வாயை கொப்பளிப்பதன் மூலம் பற்சொத்தையை தடுக்கலாம்.

வலி நிவாரணி :

குன்றிமணி எண்ணெயின் அன்டினோசிஸ்ப்டிவ் பண்புநலனால் ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெயை உபயோகித்ததன் மூலம் மூட்டுவலி மற்றும் வீக்கம் வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது.

முகப்பரு நீக்கம் :

குன்றிமணி எண்ணெயின் கிருமிநாசினி அழற்சியை எதிர்க்கும் திறன் மற்றும் குணப்படுத்தும் ஆற்றலால், இயற்கையாகவே முகப்பருவை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. 

குன்றிமணி எண்ணெயின் சரும சுத்திகரிப்பு பயனை முழுமையாக பெற, ஒரு துளி குன்றிமணி எண்ணெயை நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக கிரீம்களிலும் இதனை கலந்து பயன்படுத்தி வர வேண்டும்.

மன அமைதி :

குன்றிமணி எண்ணெயின் இயற்கை நறுமணம், ஒருவருக்கு நாள் முழுவதும் ஏற்பட்ட களைப்பு மற்றும் கவலைகளை மறக்க செய்வதுடன், நல்ல தூக்கத்தை தரவல்லது.

பக்க விளைவுகள் :

குன்றிமணி எண்ணெயை நேரடியாக சருமத்தின் மீது உபயோகிக்கும்போது, சரும உணர்த்திறனில் சிலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எனவே, இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் கலந்து உபயோகிக்க வேண்டும்.

அதிகப்படியாக இந்த எண்ணெயை உட்கொள்ளும்போது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, நடுக்கம், துர்நாற்றம், இடுப்பு வலி மற்றும் தூக்கமின்மை வர வாய்ப்புள்ளது.