உங்கள் கன்னம் இரண்டும் புதுசா பூத்த ரோஜா பூ போல அழகாக மாற

உங்கள் கன்னம் இரண்டும் புதுசா பூத்த ரோஜா பூ போல அழகாக மாற

அதிகம் செலவு செய்யக் கூடாது. ஆனால் கன்னங்கள் இரண்டும் ரோஜா பூ போல எப்போதும் பிங்க் நிறத்தில் அழகாக இருக்க வேண்டும். இதற்கு ஏதாவது எளிமையான அழகு குறிப்பு இருக்குமா என்று கேட்பவர்களுக்கு இந்த பதிவு. ஒரு எளிமையான அழகு குறிப்பு ஒன்று உள்ளது.

 நம்முடைய வீட்டிலேயே ரோஜா இதழ்களை வைத்து கிரீம் தயார் செய்யலாம். அதை தினமும் முகத்தில் தடவி வந்தால் உங்களுடைய சருமம் எப்போதும் பொலிவாக இருக்கும். அதுவும் பிங்க் நிறத்தில் கன்னங்கள் இரண்டும் ஜொலி ஜொலிக்கும். இன்னும் சொல்லப்போனால் வெட்டி வைத்த ஆப்பிள் போல உங்கள் கன்னங்கள் மாறும் என்று வைத்துக் கொள்ளுங்கள். சரி சரி இவ்வளவு பில்டப் வேண்டாமே. முதல்ல நீங்க அழகு குறிப்பு படித்து பாருங்கள். பிடித்திருந்தால் மட்டும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

 ரோஜாப்பூவில் க்ரீம் தயார் செய்யும் முறை:

இந்த கிரீமை தயார் செய்ய நமக்கு பன்னீர் ரோஜா பூ 2 அல்லது 3 தேவை. அல்லது உங்கள் தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரோஜா இதழ்களை ஒவ்வொன்றாக பிரித்து போட்டுக் கொள்ளவும். இதோடு ரோஸ் வாட்டர் 2 ஸ்பூன் ஊற்றி மிக்ஸி ஜாரை ஓட விடுங்கள். ரோஜா பூ அரைபடும். இந்த விழுதை எடுத்து வடிகட்டியில் போட்டு பிழிந்து எடுத்தால் ரோஜா பூ சாறு மட்டும் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா. அந்த லிக்விட் லேசாக பிங்க் நிறத்தில் இருக்கும். அந்த ரோஜா பூ சாறை ஒரு கிண்ணத்தில் தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.

தயாராக எடுத்து வைத்திருக்கும் ரோஜா பூ சாறுடன் ஆலுவேரா ஜெல் 1 ஸ்பூன், பாதாம் ஆயில் 1 ஸ்பூன், கிளிசரின் 1 ஸ்பூன், விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல். 2 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல் போதும். இந்த பொருட்களை எல்லாம் போட்டு ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக அடித்து கலக்கினால் சூப்பராக ரோஸ் கலரில் ஒரு ஜெல் தயாராக உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இந்த கிரீமை உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

அடர்த்தியாக அப்ளை செய்யக்கூடாது. இதை ஒரு சீரம் போல உங்கள் விரல்களால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அப்படியே தடவி விட்டு விட்டால், இந்த கிரீமை உங்களுடைய முகம் அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். பிறகு முகம் கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே விட்டுவிடலாம். இரவு தூங்க செல்லும் போது முகத்தை கழுவி விட்டு இதை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் காலை மாலை இரண்டு நேரமும் இந்த கிரீமை முகத்தில் லேசாக தடவி வர சருமம் நாளுக்கு நாள் கூடுதல் பொலிவை பெறும்.

இந்த எளிமையான அழகு குறிப்பின் முழு பலனையும் நீங்கள் பெற வேண்டும் என்றால் மிக்ஸி ஜாரில் ரோஜா இதழ்களை போட்டு ரோஸ் வாட்டர் ஊற்றி அரைக்கிறீர்கள் அல்லவா, அதை தவிர்த்து விட்டு, ரோஜா இதழ்களை ஒரு சிறிய உரலில் போட்டு அதில் ரோஸ் வாட்டர் ஊற்றி, நசுக்கி சாரை கையால் பிழிந்து எடுத்தால் இதனுடைய சத்துக்கள் எல்லாம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். மிக்ஸி ஜாரில் அரைபடும்போது அந்த சூட்டில் சத்துகள் வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது. (வாய்ப்பு உள்ளவர்கள் இதைப் பின்பற்றுங்கள்).

இந்த குறிப்போடு சேர்த்து நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள் இவைகளை உணவோடு அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். நிறைய தண்ணீரை குடித்து வந்தால் சருமம் வறட்சி அடையாமல் எப்போதும் ஈரத் தன்மையோடு இருக்கும். அதுவே உங்களுக்கு ஒரு ஜொலி ஜொலிப்பு தன்மையை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறவும்.