சித்தர்களின் உடலுறவு கொள்கை

சித்தர்களின் உடலுறவு கொள்கை


பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை.

விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16 ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.

#4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.

#5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூரா பெண் மகள் உருவாகும்.

#6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.

#7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண் மகள் உருவாகும்.

#8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண் மகன் உருவாகும்.

#9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண் மகள் உருவாகும்.

#10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.

#11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண் மகள் உருவாகும்.

#12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண் மகன் உருவாகும்.

#13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண் மகள் உருவாகும்.

#14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண் மகன் உருவாகும்.

#15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண் மகள் உருவாகும்.

#16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண் மகன் உருவாகும்.

ஒரு கரு உருவாகும் முன்னரே பிறக்க போகும் உயிரின் ஆயுள் என்ன ? எனபதை துள்ளிமாக கணக்கிட்டு கூறியுள்ளார் ஆசான் திருமூலர்.
இந்த கணக்கிற்கு இன்றைய விஞ்ஞானிகள் வாயடைத்துப்போவார்கள்.

“பாய்ந்தபின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறுஆகும்;
பாய்ந்தபின் நால் ஓடின் பாரினில் எண்பதாம்;
பாய்ந்திடும் வாயுப் பகுந்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே” (திம 479)

பொருள்:

பாய்ந்தோடி விழும் விந்தானது 5 விரகடை (3.75 inch) ஓடி சென்று விழுந்தால் அதாவது பெண்ணின் கருமுட்டையின் அருகில் பிறக்கும் உயிரானதின் ஆயுள் 100 எனலாம். 4 விரகடை (3 inch) ஓடி விழுந்தால் பிறக்கும் உயிரின் ஆயுள் 80 எனலாம். இந்த சூட்சமம் யோகிகள் நன்கு அறிவர்.

அறிவியல் விளக்கம்:

பாயும் விந்துவானது கருமுட்டையின் அருகில் சென்று விழுந்தால் அந்த விந்துவின் ஆயுள் சேமிக்கப்படுகிரது உயிரின் ஆயுளும் அதிகரிக்கிறது.
அதுவே கருமுட்டையின் அருகில் விழாமல் போனால் அந்த விந்தானது கருமுட்டைக்கு நீந்தி செல்லும் பட்சத்தில் தனது சக்தியை சிறிது இழக்கிறது.