கண்கள் இளமையுடன் இருக்க? இதோ இரண்டு டிப்ஸ்...

கண்கள் இளமையுடன் இருக்க? இதோ இரண்டு டிப்ஸ்...


எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசை படாதவர் யாரும் இல்லை. உடலை இளமையாக வைத்திருக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, போன்றவைகளை கடைபிடிக்கலாம். முகத்தை இளமையாக, அழகாக்க வைத்திருக்க தலை முடி, உதடு, கண்ணம், இப்படி நாம் ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஏதாவது பேக், மசாஜ், இது போல ஒன்றை செய்து கொள்ளலாம்.

 ஆனால் கண்களை இளமையாக வைத்திருப்பது எப்படி? நம் கண்கள் எந்த விதத்திலும் பாதித்து விடாதபடி, அதே நேரத்தில் மிக, மிக எளிமையாக நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே உங்களின் கண்களை இளமையாக மாற்ற முடியும் என்றால் நல்லது தானே.

பொதுவாகவே நாம் எதற்கு எடுத்தாலும் பார்லர் தேடி ஓடும் பழக்கத்தை சற்று குறைத்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் பெண்கள் தான் அதிக அளவில் அழகு நிலையத்தை தேடி போய் கொண்டு இருந்தார்கள். இப்போது எல்லாம் ஆண்கள் கூட அதிக அளவில் அழகு நிலையத்திற்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். நம்மை அழகுப்படுத்திக் கொள்ள வீட்டில் உள்ள சிறு சிறு பொருள்களை வைத்தே எளிய முறையில் பக்க விளைவுகள் இல்லாமல் சில குறிப்புகளை முயற்சி செய்யுங்கள்.

சிலர் பார்க்க அழகாகவும், இளமையாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் கண்களை பார்த்தால் ஒரு வித சோர்வு எப்போதும் நிரந்தரமாக தங்கி இருக்கும். இது மட்டும் இல்லாமல் கண்களில் கருவளையம், கண்களை சுற்றி சுருக்கங்கள், கோடு விழுதல், கண்களுக்கு அடியில் நீர் கோர்த்தது போல் இருக்கும். இப்படி கண்களை சுற்றி பலவகை பிரச்சினைகள் உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள இரண்டு எளிமையான வழிகள் குறித்த பதிவு தான் இது.

இதை செய்வதற்கு முதலில் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஐஸ்கட்டியை எடுத்து காட்டன் துணியில் வைத்து கண்களின் புருவம், மற்றும் கண்களை சுற்றி உள்ள இடங்களில் மெதுவாக பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை ஒத்தடம் போல் ஒற்றி எடுங்கள். இதனால் கண்களை சுற்றி உள்ள வீக்கம் குறைந்து கண்களை சுற்றி உள்ள நரம்பு மண்டலங்கள் நன்றாக செயல்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஐஸ் கட்டிக்கு பதிலாக ஓரளவிற்கு குளிர்ந்த தண்ணீரை இந்த முறைக்கு பயன்படுத்தலாம்.

அடுத்து வெள்ளரிச்சாறு ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன், இரண்டையும் நன்றாக குழைத்து கண்களுக்கு மேல் தடவி பத்து நிமிடம் அப்படியே கண்களை மூடி இருங்கள். அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் விரல்களால் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்யும் போது அனைத்து இடங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக பரவும். வெள்ளரிச்சாறு சாறு கருமை நிறத்தை நீக்கும், தேங்காய் எண்ணெய் கண்களை சுற்றி உள்ளிருக்கும் இறந்த செல்களை நீக்கி உங்கள் கண்களை புது பொலிவுடன் மாற்றி கண்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

இவை இரண்டும் மிக மிக எளிய வழி தான். ஆனால் இதை வாரம் இரண்டு முறை தவறாமல் செய்து பாருங்கள். உங்களுக்கே வயதானாலும் உங்கள் கண்கள் எப்போதும் இளமையுடன் இருக்கும்.