முழங்கை முழங்கால்களில் நீண்ட நாட்களாக மறையாமல் இருக்கும் கருமை நிறத்தை போக்க எளிமையான வழிகள்!!

முழங்கை முழங்கால்களில் நீண்ட நாட்களாக மறையாமல் 

இருக்கும் கருமை நிறத்தை போக்க எளிமையான வழிகள்!!


பல பேருக்கு முழங்கை, முழங்கால், முட்டி, கணுக்கால், இது போன்ற இடங்களில் மட்டும் கருமை படிந்து இருக்கும். இதற்கு காரணம் அந்த இடத்தில் உள்ள தோள்கள் மற்ற இடங்களை விட அதிக அளவில் சுருங்கி விரியும் தன்மை கொண்டது எனவே அந்த இடங்கள் மட்டும் சீக்கிரம் மற்ற இடங்களை விட அதிகம் கருமை படிந்து விடுகிறது. இது மட்டுமில்லாமல் அந்த இடங்களில் அதிக அழுத்தம் கொடுப்பது போன்று வைத்திருந்தாலும், இது போன்ற நிறம் மாறும் பிரச்சினை வரக்கூடும்.

இதை ஆரம்பத்தில் பெரும்பாலும் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. அதற்குள்ளாகவே அந்த இடத்தில படிந்த கருமையானது ஒரு தழும்பு போலவே படிந்து விடும். அதன் பிறகு அதை மாற்றுவது மிகவும் கடினமாகிவிடும். அப்படி கருமை படிந்த இடத்தை நிறம் மாற்றுவதற்கான இந்த எளிய வழி முறையை பின்பற்றினாலே போதும் அது என்னவென்று பதிவை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

முதலில் கருமை படிந்த கை கால்களை நன்றாக சோப்பு போட்டு தேய்த்து கழுவி விடுங்கள். அதன் பிறகு ஒரு அரை எலுமிச்சை பழம் எடுத்து அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கருமை படிந்த முட்டி, முழங்கை, கணுக்கால் போன்ற இடங்களில் லேசாக இந்த எலுமிச்சை பழத்தை வைத்து ஒரு ஐந்து நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த இடத்தில் ஒரு துணி அல்லது தண்ணி கொண்டு துடைத்து விடலாம்.

அதன் பிறகு ஒரு கேரட்டை எடுத்து அரைத்து அதில் இருந்து கொஞ்சம் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளையும் சேர்த்து பிறகு ஒரு பேஸ்ட் போல இதை குழைத்து கொள்ளுங்கள். இப்போது அரை எலுமிச்சை பழம் இருக்கும் அல்லவா அதை எடுத்து அதை இந்த பேஸ்ட்டில் முக்கி எலுமிச்சை பழத்தை வைத்து உங்கள் கருமை படந்த இடங்களை மசாஜ் செய்யுங்கள். இதுவும் ஒரு ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை செய்ய வேண்டும். இதன் பிறகு ஒரு துணி அல்லது தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து விடுங்கள்.

இப்போது கடைசியாக தயிர் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து இவை இரண்டையும் எடுத்து ஒரு பேக் போல போட்டு ஒரு பத்து நிமிடம் வெறும் கையாலே மசாஜ் செய்தால் போதும். மசாஜ் செய்த பிறகு ஒரு ஐந்து நிமிடம் இந்த பேக் உங்கள் கருமை படிந்த இடங்களில் இருக்கும் படி விட்டு விடுங்கள். அவ்வளவுதான் இப்போது சுத்தம் செய்து விடுங்கள்.

இதை ஒரு மாதம் வரையிலாவது தொடர்ந்து செய்ய வேண்டும். இது போன்ற இடங்களில் படிந்துள்ள கருமை கொஞ்சம் சீக்கிரத்தில் மறைந்து விடாது. அது வரை இதை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள். உங்களுக்கு நிறம் மாறுவது தெரிந்த பிறகு மாதம் ஒரு நாள் மட்டும் செய்தால் போதும்.