இந்த கலவையை தேய்த்து குளித்தால் ஒரே நாளில் வெள்ளை கலரும், பிங்க் கலரும் சேர்ந்து வந்து உங்கள் சருமத்தில் ஒட்டிக் கொள்ளும். பிறகு நீங்க அழகோ அழகு!!

இந்த கலவையை தேய்த்து குளித்தால் ஒரே நாளில் வெள்ளை கலரும், பிங்க் கலரும் சேர்ந்து வந்து உங்கள் சருமத்தில் ஒட்டிக் கொள்ளும். பிறகு நீங்க அழகோ அழகு!!


டக்குனு வெள்ளையாக சுலபமான ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வந்தால் உங்களுடைய தோலின் நிறம் கூடிய சீக்கிரத்திலேயே வெள்ளையாக மாறிவிடும். திடீரென்று வெளியில் சென்று விட்டு வந்து உங்களுடைய சருமம் மிகவும் வாட்டமாக கருத்துப் போய் இருந்தாலும், அந்த கருமை நிறத்தை ஒரே குளியலில் நீக்கவும் இந்த பேக் உபயோகமாக இருக்கும். ஆக மொத்தத்தில் உங்களுடைய ஸ்கின்க்கு எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல், உடனடியாக அழகாக மாற இந்த ஒரு பேக் போதும்.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு மொத்தம் 3 பொருட்கள் தான் தேவை. பச்சரிசி 1 கப், பீட்ரூட் சாறு – 1/4 கப், தக்காளி பழச்சாறு தேவையான அளவு, அவ்வளவுதான். (பீட்ரூட்டை நன்றாகத் துருவி விட்டு உங்கள் கையாலேயே பிழிந்தால் சாறு கிடைக்கும். அந்த சாரை தான் குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும். தண்ணீர் ஊற்றி அரைத்து எல்லாம் பீட்ரூட் சாறு எடுக்கக் கூடாது.)

முதலில் 1 கப் அளவு பச்சரிசியை எடுத்து இரண்டு முறை நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். ஊற வைத்த இந்த பச்சரிசியை அந்த தண்ணீரோடு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ அவ்வளவு நைசாக அரைத்து விட்டு இதை ஒரு வடிகட்டியின் மூலம் ஃபில்டர் பண்ணி எடுத்துக்கோங்க.

கொரகொரப்பாய் இருக்கிற துகள்கள் அனைத்தும் வடிகட்டியில் தங்கிவிடும். கீழே வடிந்திருக்கும் சாறு மட்டும்தான் நமக்கு தேவை. அதாவது ஒரு ஸ்டீல் பில்டரில் வடிகட்டினால் கூட போதுமானது. இந்த கலவையை இப்போது நாம் காய்ச்சப் போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடிகட்டி வைத்திருக்கும் அரிசி மாவை அதில் ஊற்றிவிட்டு, அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து கைவிடாமல் இதை கலந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த அரிசி மாவு லேசாக திக்காக க்ரீம் பதத்திற்கு வர தொடங்கும் போது, எடுத்து வைத்திருக்கும் பீட்ரூட் சாறை இந்த அரிசி மாவோடு ஊற்றி கலந்தால் நைசான ஒரு பிங்க் கலர் பேக் நமக்கு கிடைக்கும். இந்த பேக்கை நன்றாக ஆற வைத்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 நாட்கள் வரை கெட்டுப் போகாது. (மாவு சூடாகி வெந்து கிரீம் ஆக வர 4 லிருந்து 5 நிமிடங்கள் வரை எடுக்கும்.)

தயார் செய்து வைத்திருக்கும் இந்த பிங்க் கலர் பேக்கை தேவையான அளவு சிறிய கிண்ணத்தில் போட்டு இதில் தக்காளி பழச்சாறை ஊற்றி கலந்தால் கிரீமியான ஒரு ஃபேஸ் பேக் நமக்கு கிடைக்கும். இந்த ஃபேஸ் பேக்கை முகம் கை கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு குளியல் பொடி வைத்து குளித்தாலும் சரி, அல்லது சோப்பு போட்டு குளித்தாலும் சரி உங்களுடைய சருமம் பளிச்சு பளிச்சென்று இருக்கும். கூடுமானவரை இந்த பேக்கை போட்டுவிட்டு சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நன்மை தரும். இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: இந்த பேக்கில் கட்டாயமாக பச்சரிசி பீட்ரூட் சாறு சேர்த்து அந்த பேக்கை தயார் செய்ய வேண்டும். இந்த பேக்கோடு தக்காளி பழச்சாறு கலந்து இருக்கிறோம் அல்லவா. அந்த தக்காளி பழச்சாறுக்கு பதிலாக நீங்கள் வேறு ஏதாவது பொருளை கூட கலந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு வெள்ளரிக்காய் சாறு, கேரட் சாறு, ரோஸ் வாட்டர், தேன், எலுமிச்சை பழச்சாறு போன்ற பொருட்களில் ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பம் தான்.