குதிகால் வலியை குணப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த கஷாயம் உங்களுக்கு உதவும்.

குதிகால் வலியை குணப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்களா?  இந்த கஷாயம் உங்களுக்கு உதவும்.

குதிகால் வலி என்பது கால் வலியை விட மோசமானது. ஏனெனில் உடலின் மொத்த எடையின் அழுத்தத்தை பாதங்கள் தான் தாங்குகின்றன. அதனால் இந்த வலியை ஆரம்ப கட்டத்தில் சரிசெய்யாவிட்டால் அது மோசமான உபாதையை உண்டு செய்யலாம். குதிகால் வலிக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பல மூலிகைகளை கொண்டு செய்யப்படும் கஷாயம் பரிந்துரைக்கப்படுகிறது. 

குதிகால் வலி தீர ஆயுர்வேத மருந்து​ :

குதிகால் வலி என்பது மிக மிக மோசமான ஒன்று. உடலின் மொத்த எடையையும் தாங்கும் குதிகாலில் வலி உண்டாகும் போது அதை விட பாதிப்பு எதுவுமே இல்லை என்னும் அளவுக்கு உபாதையை உண்டு செய்யும். இந்த வலிக்கு ஆயுர்வேத மருத்துவம் அற்புதமான மூலிகைகளை பரிந்துரைக்கிறது.

குதிகால் வலி தீர கஷாயம்!

தேவை :

கரிசலாங்கண்ணி பொடி -2 கிராம்
வேப்ப மரப்பட்டை பொடி - 2 கிராம்
புடலங்காய் - 2 கிராம்
நெல்லிக்காய் பொடி - 2 கிராம்

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 4 மூலிகை பொடிகளையும் சேர்த்து காய்ச்சி வடிகட்டினால் குதிகால் வலி தீர கஷாயம் தயார்.

குதிகால் வலிக்கு கஷாயம் யாருக்கு தேவை​?

இந்த 4 மூலிகைகளும் கசப்புத்தன்மை கொண்டவை. வாதத்தை கட்டுப்படுத்தக்கூடியது. வாதத்துடன் பித்தத்தை கட்டுப்படுத்தும். இரவு நேரங்களில் கட்டிலில் எழுந்து கழிப்பறை செல்வதற்குள் குதிகால் வலியால் தாங்கி தாங்கி நடந்து அதற்குள் சிறுநீர் கழித்து விடுவதை கூறுகிறார்கள்.

நின்று கொண்டே வேலைப்பார்க்கும் பெண்களுக்கும் இத்தகைய குதிகால் வலி பிரச்சினை தீவிரமாகவே வருகிறது. இது உடல் வலியை நீக்கி உடலையும் வலுப்படுத்தும் என்பதால் பயமில்லாமல் இந்த கஷாயம் குடிக்கலாம்.

குதிகால் வலி கஷாயம் தரும் நன்மைகள்​ :

மூட்டு வலி, உடல் வலி, தோள் பட்டை வலி, தொடை வலி, கணுக்கால்களில் வலி, என இந்த வலிகளை தாண்டி மோசமான பாதிப்பை உண்டு செய்வது குதிகால் வலி தான். கடுமையான வலியால் கால்களை எடுத்து வைக்க முடியாத நிலையில் இருப்பவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் நடக்க முடியவில்லை என்பார்கள். உட்கார முடியவில்லை என்று சொல்வார்கள். அவர்களுக்கு இந்த கஷாயம் மிகப்பெரிய மருந்தாக இருக்கும்.

குதிகால் வலி ஏன் வருகிறது?​

சர்க்கரை நோய் கட்டுப்பாடின்மை, தைராய்டு கோளாறுகள், எலும்பு தேய்மானம் சிரமம் கொண்டிருப்பவர்கள். நேரடியாக மறைமுகமாக எலும்பு பிரச்சனை கொண்டிருப்பவர்கள். கால்சியம் பற்றாக்குறை, மலச்சிக்கல் நீண்ட காலம் கொண்டிருப்பது, மூட்டுகளில் ஏதேனும் பாதிப்பு இருந்து அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பது, பக்கவிளைவுகள் இருந்தும் வலி நிவாரணி மாத்திரைகள் எடுப்பது என இவை எல்லாமே குதிகால் வலியை உண்டு செய்துவிடும். உங்களுக்கு குதிகால் வலி இருந்தால் அதற்கு காரணம் இதில் ஒன்றாக இருக்கலாம்.

குதிகால் வலி இருந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு இந்த கஷாயம் எடுக்கலாம்.