கேரளாவின் பிரபலமான பதிமுகம் குடிநீர், தயாரிக்கும் முறையும், பலன்களும்!!!

கேரளாவின் பிரபலமான பதிமுகம் குடிநீர், தயாரிக்கும் முறையும், பலன்களும்!!!

கேரளாவின் பதிமுகம் குடிநீர் மிகவும் பிரபலமானது. அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த குடிநீர் தயாரிக்கும் முறையும் அதன் நன்மைகள் குறித்தும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தும் அற்புதமான மருத்துவ குணங்கள் அடங்கியவை. ஆயுர்வேதம் நோய் தணிக்க என்பதை தாண்டி நோயின் அடி வேரிலிருந்து குணப்படுத்த செய்யும் ஆரோக்கிய சிகிச்சை முறை என்று சொல்லலாம். பார்க்க இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த நீர் உடல் ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியம் வரை பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பதிமுகம் குடிநீர் என்றால் என்ன?​

பதிமுகம் அல்லது சாயமரத்தின் பட்டையை குடிநீரில் சேர்த்து அருந்துவது ப​திமுகம் குடிநீர் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் பரவலாக இந்த குடிநீர் பார்க்கலாம். இந்த மரத்தின் பட்டையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வழக்கமான தண்ணீராக குடிக்கலாம்.

இதில் உள்ள பிரேசிலின் என்பது இயற்கையான சிவப்பு நிறமியை கொடுக்கிறது. ஆயுர்வேதத்தின் படி நீர் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று. இது உடலில் நச்சுக்களை வெளியேற்றவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்கிறது. குறிப்பாக கோடை காலங்களில் உடலை குளிர்விக்கும் திறன் கொண்டது. இந்த குடிநீர் எப்படி தயாரிப்பது என்பதையும் அதன் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.

பதிமுகம் குடிநீர் தயாரிக்கும் முறை?​

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 5 லிட்டர் அளவு
* பதிமுக பட்டை பொடி - அரை டீஸ்பூன் ( இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
* ஏலத்தூள்- கால் டீஸ்பூன்
* கொத்துமல்லி விதைகள்- 3 டீஸ்பூன் 
* இஞ்சி சாறு - 2 டீஸ்பூன்

 தயாரிக்கும் முறை :
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். அரை டீஸ்பூன் பதிமுக பொடியை சேர்த்து கொதிக்க விடவும். சில நிமிடங்கள் அவை கொதிக்கட்டும். தண்ணீரில் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும். பிறகு அடுப்பை அணைத்து விடவும். மற்ற பொருள்களை சேர்க்கவும். இது நறுமணமாக வைத்திருக்கும். செரிமான மண்டலத்தையும் மேம்படுத்தவும் செய்யும். அறைவெப்பநிலைக்கு வந்ததும் நீரை வடிகட்டி விடவும். தேவையெனில் குளிரவைத்தும் பரிமாறலாம். இப்போது பதிமுகம் குடிநீர் தயார். இதன் நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

அழற்சி எதிர்ப்புகளை கொண்ட பதிமுகம் குடிநீர்​ :

பதிமுகத்தில் உள்ள கலவைகள் பலவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இவை காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. காயத்தை கழுவுவதற்கு உதவுகிறது. மேலும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க செய்கிறது. மூட்டுவலி பிரச்சினைகள் கொண்டிருப்பவர்கள் இந்த நீரை குடிப்பது மிகுந்த பலனை அளிக்கும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள பதிமுகம் குடிநீரானது ஒவ்வாமை போன்ற சுவாசப்பாதை வீக்கத்துக்கு உதவுகிறது. இது வெளிப்புற காயங்கள் போன்று பல்வேறு மூளை நோய்களுக்கு அல்சைமர், பார்கின்சன் நோய் போன்ற மூளை நோய்களுக்கு காரணமான நியூரோ இன்ஃப்ளமேஷனுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

பதிமுகம் குடிநீர் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டவை :

புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு இவை எதிரானவை. பதிமுகத்தில் இருக்கும் 3-DSC, என்னும் மூலக்கூறு பெருங்குடல் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியை தடுக்கிறது. இது மனித உணவுக்குழாய் புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. நரம்பு மண்டல புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள பிரேசிலின் கர்ப்பப்பை வாய், நுரையீரல், மார்பகம் மற்றும் ஹெபடோ புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.

இரைப்பை புண்களுக்கு பதிமுகம் நீர் சிகிச்சை அளிக்குமா?​

பதிமுகம் குடிநீர் இரைப்பை புண்களை பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது பாரம்பரியமாக புண் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆய்வு ஒன்றில் எலிகளுக்கு இரவு முழுவதும் உணவு கொடாமல் ஒரு கிலோ எடை அளவு கொண்டுள்ளவற்றுக்கு 250 மிகி அளவிலும் 500 மிகி அளவுகளிலும் பதிமுகம் நீர் கொடுக்கப்பட்டது. இதுசக்தி வாயத்த புண் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எரிச்சல், குடல் நோய்க்குறி அல்லது அல்சர் இருந்தால் உணவில் பதிமுகம் நீரை தவிர்க்காமல் சேர்க்க வேண்டும்.

உடலில் பிளேட்லட் செயல்பாடு மேம்படுத்த பதிமுகம் குடிநீர்​ :

ஆன்டி பிளேட்லெட் பண்புகள் பதிமுகத்தின் முக்கியமானவை. இதில் உள்ள பிரேசிலின் இரத்தத்தில் பிளேட்லெட் செயல்பாட்டை கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இரத்தக்கட்டிகள் உருவாக்குவதை தடுக்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதை தடுக்கும் ஆன் டி பிளேட்லெட் பண்புகளை கொண்டுள்ளது.

சருமத்துக்கு நன்மை செய்யும் பதிமுகம் குடிநீர் :

பதிமுகம் பட்டையில் உள்ள பிரேசிலின் புற ஊதாக்கதிர்கள் மற்றும் வயதான சரும தோற்றத்தை எதிர்க்கிறது என்கிறது ஆய்வுகள். சருமத்தை புற ஊதாகதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கவும், முகப்பருவை குணப்படுத்தவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இதை முகப்பருக்கள் பராமரிப்பு மற்றும் சீரம்களில் நாம் தவறாமல் பயன்படுத்தலாம்.

பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதிமுகம் குடிநீர் :

பதிமுகம் பட்டையில் உள்ள பிரேசிலின் என்னும் செயலில் உள்ள கலவை ஆண்டிமைக்ரோபியல் விளைவுகளை கொண்டுள்ளது. இது மூன்று வகையான கரியோஜெனிக் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படுகிறது. குறிப்பாக ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்னும் பல் சிதைவை ஏற்படுத்தும் கடுமையான பாக்டீரியாவை எதிர்க்கிறது. இந்த பதிமுகம் நீரை வாய் கொப்புளித்தால் பல் சொத்தையை பெருமளவு தடுக்கலாம்.

பதிமுகம் நீர் வளர்சிதை மாற்ற நோய்களை கட்டுப்படுத்துமா?​

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவை வளர்சிதை மாற்ற நோய்கள் ஆகும். பதிமுகம் இந்த மூன்றுக்கும் உதவுகிறது. பதிமுகம் சாறு உயர் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. ஆய்வு ஒன்றில் 30 மாதவிடாய் நின்ற பெண்களின் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்தது, அவர்களுக்கு பதிமுகம் நீர் கொடுக்கப்பட்டது. தண்ணீர் குடித்த அவர்களது இரத்த சர்க்கரை அளவு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது, தண்ணீர் குடிப்பதற்கு முன்பும் தண்ணீர் குடித்த பிறகும் கணிசமான வித்தியாசம் இருப்பதாக சோதனை முடிவுகளை காட்டுகின்றன.

பதிமுகம் நீர் பக்கவிளைவுகள்​ :

இந்த பதிமுகம் மரத்தில் இருக்கும் பிரேசிலின் இனப்பெருக்க நச்சுத்தன்மையை உண்டு செய்கிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் இளந்தாய்மார்கள் இதை தவிர்க்க வேண்டும் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறைந்து விடலாம். அதனால் அடிக்கடி இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிப்பது நல்லது.