பஞ்சவாசனை
பஞ்சவாசனை
தேவையான பொருட்கள்
வால் மிளகு ஜாதிக்காய் தக்கோலம் கிராம்பு ஏலக்காய் பச்சை கற்பூரம் இந்த ஐந்து பொருட்கள் தான் நமக்கு தேவை....
தேவைப்பட்டால் தக்கோலம் சேர்த்து கொள்ளலாம்..
இவை அனைத்தையும் பொடி செய்து கொள்ளவும் ..
இவை அனைத்துமே பஞ்ச பூதங்கள் கலந்துள்ள பொருட்கள்...
இவை அனைத்தும் லட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் ..
இதை வெற்றிலை பாக்கு போடும் போது உபயோகிக்கலாம்..
இதை உபயோகிக்கும் போது ஒரு சிட்டிகை அளவில் எடுத்து கொள்வது நல்லது...
ஒரு தாமிர பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை இந்த பொடி போட்டு இரவில் சுவாமி முன்பு வைத்து விட்டு தீர்த்தமாக காலை எடுத்து சாப்பிடலாம் ..
ஹோட்டல் போன்ற இடங்களில் சாப்பிடும் போது சாப்பிட்டு பிறகு ஒரு சிட்டிகை சுடு நீரில் கலந்து சாப்பிட வயிற்று பெருமல் பிரச்சினை சரியாகும்..
அனைத்து இனிப்பு பொருட்களிலும் அளவுக்கு தகுந்தவாறு சேர்க்கலாம்...
தினமும் இரவு ஒரு சிட்டிகை அளவு உணவுக்கு பின் சுடு நீரில் கலந்து சாப்பிடலாம்..
இப்படி சேர்த்து கொள்ள உடலில் உள்ள ராஜ உறுப்புகளில் உள்ள பிரச்சினைகள் விலகி உறுப்புகள் புத்துயிர் பெற்று பலமடையும் ...
மேலும் அஜீரணம் வாய் துர்நாற்றம் திடிர் வயிறு வலி இரவில் சுவாச பிரச்சினை தூக்கம் இன்மை வேலையில் உள்ள பிரச்சினையினால் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தரும் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.