கருப்பு ஏலக்காயின் அற்புத பலன்கள்...

கருப்பு ஏலக்காயின் அற்புத பலன்கள்...

ஏலக்காய் என்பது மசாலாப் பொருட்களின் ராணி ஆகும். 

சரி, கருப்பு ஏலக்காய் எப்படி இருக்கும்? 

ஏலக்காய் என்பது வீரியம் மிக்க வாசனை உடன் விளங்கும் ஒரு சிறிய செடியாகும். 

இதில் இரண்டு வகைகள் உள்ளது. 

'கருப்பு ஏலக்காய்' மற்றும் 'பச்சை ஏலக்காய்'. இவை இரண்டில் கருப்பு அல்லது காட்டு ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும். மலை ஏலக்காய் என்றும் சொல்வது உண்டு.

இந்த செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதிமுக்கிய எண்ணெய்களில் ஒன்றாகும். முக்கியமாக இதனை வாசனை தெரபிக்கு பயன் படுத்துகின்றனர்.

நமக்கு கடையில் கிடைக்கும்  ஏலக்காயை வியாபார நோக்கத்துடன் பயிரிடுவதால், பூச்சி மருந்து தெளிப்பு முதல் பச்சை கலர் சாயம் அடித்தல் என பல கலப்படங்கள் அரங்கேறுகிறது.

காட்டில் விளையும் கருப்பு ஏலக்காய் மிக அதிகமான சத்துகளை கொண்டது. எப்போதுமே கருப்பாக இருக்கும் பொருட்களுக்கு மகத்துவம் அதிகம்.

தோட்டம் மூலமாக கருப்பு ஏலக்காய் பயிரிடுவது இல்லை. காட்டில் பூர்வீகமாக வசிக்கும் ஆதி குடி மக்களால்தான் இன்னமும் கருப்பு ஏலக்காய் நமக்கு கிடைத்து வருகிறது. இதனால் பல தந்திரங்கள் மூலமாக காட்டில் உள்ள ஆதிமக்களை நசுக்க பல்வேறு தந்திரங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

உடல் நலத்தை பேணுவதில் இருந்து, பளபளப்பான முடியை பெறுவது வரைக்கும் கருப்பு ஏலக்காய்  பயன் படுத்தப்படுகிறது. இது அத்தனை வகையான பயன்களை அளிக்கிறது. 

இரைப்பை குடல் பாதை ஆரோக்கியம்  இரைப்பை குடல்பாதை ஆரோக்கியத்திற்கு கருப்பு ஏலக்காய் பெரிதும் துணை புரிகிறது. 

இரைப்பை மற்றும் குடல் பாதைகளில் தேவையான நீர்கள் சுரக்க கருப்பு ஏலக்காய் தூண்டி விடும். மேலும் நீர் வெளியேறுதலுக்கும் இது தூண்டுகோலாக அமைவதால். வயிற்றில் உள்ள அமிலங்களை கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால் இரையாக அல்சர் மற்றும் செரிமான கோளாறுகள் எல்லாம் மெது மெதுவாக கச்சிதமாக சீர் ஆகும்.
இதனால்தான் வட இந்தியாவின் கரம் மசாலாவிலும், அரேபிய பிரியாணியிலும் கருப்பு ஏலக்காய் முக்கிய இடம் வகிக்கிறது.

இதயக் குருதிக் குழாய்களின் ஆரோக்கியம், இதய ஆரோக்கியத்திற்கும் மிகப் பெரிய அளவில் உதவி புரிகிறது கருப்பு ஏலக்காய். இதயத் துடிப்பை கட்டுப்பாட்டில் வைப்பது இதன் முக்கிய குணமாகும். அதனால் இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். 

கருப்பு ஏலக்காயை சீரான முறையில் உட்கொண்டால். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். 

மேலும் கருப்பு ஏலக்காய் இரத்தம் உறைந்து போவதையும் தடுக்கும். 

சுவாச பிரச்சனைகள் உங்களுக்கு உள்ளதா? 

அப்படியானால் கருப்பு ஏலக்காய் அதற்கு பெரிய நச்சு முறிவாக விளங்கும். ஆஸ்துமா, கக்குவான் இருமல், நுரையீரல் இறுக்கம், மூச்சுக் குழாய் அழற்சி, நுரையீரல் சிரை, காச நோய் போன்ற சுவாச கோளாறுகளை தினமும் ஒரு கருப்பு ஏலக்காயை சுவைத்துக் கொண்டே எளிதாக குணப்படுத்தி விடலாம். 

கருப்பு ஏலக்காய் சுவாச குழாய்களை ஆசுவாசப் படுத்தி, நுரையீரல் வழியாக காற்று சுற்றோட்டத்தை செவ்வனே சுலபப்படுத்தும். 

வாயின் ஆரோக்கியம் பற்களில் அழற்சி, ஈறுகளில் அழற்சி போன்ற பலவிதமான பல் பிரச்சினைகளை கருப்பு ஏலக்காயை கொண்டு குணப்படுத்தலாம். மேலும் இதில் பலமான வாசனை வருவதால், துர்நாற்றத்துடன் வெளி வரும் மூச்சையும் இது சரி செய்யும். இதனால்தான் மூலிகைப் பல் பொடியில் ஒன்றாக கருப்பு ஏலக்காயை பயன் படுத்துகிறோம்.

சிறுநீர் சம்பந்தப்பட்ட ஆரோக்கியம் கருப்பு ஏலக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக இருப்பதால், சிறுநீர் கழிப்பதிலும் ஆரோக்கியமாக விளங்கும். 

கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணமுடையவை கருப்பு ஏலக்காயில் உள்ள இரண்டு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மார்பகம், குடல், முன்னிற்குஞ்சுரப்பி மற்றும் கருப்பை புற்று நோயை தடுக்கும். இதில் உள்ள கார்சினோஜெனிக்கிற்கு எதிரான குணம் க்ளுடாதியோன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உற்பத்தியாவதை அதிகரிக்கும். இதனால் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அணுக்கள் மற்றும் கெட்ட வைரஸ்கள்  வளருவது தடைபடும். 

நச்சு நீக்கம் உடலில் உள்ள நஞ்சை நீக்குவதில் கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. 

மேலும் இது இரத்தத்தில் உள்ள காப்ஃபைனை நீக்கும். அதனால் அல்கலாய்டு பாதிப்பில் இருந்து உங்களை காக்கும். 

உணர்வகற்றி குணம் உள்ள கருப்பு ஏலக்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் வீரியமிக்க உணர்வகற்றி குணம் அடங்கி உள்ளது. இது கடுமையான தலைவலியை நீக்கி, உடனடி நிவாரணம் அளிக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் அதிமுக்கிய எண்ணெய் மன அழுத்தம் மற்றும் சோர்வை போக்கவும் உதவும். 

ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல்,ஆன்டி - வைரஸ்  குணங்கள் கருப்பு ஏலக்காய் 14 வகை நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவை. 

அதனால் கருப்பு ஏலக்காயை நீங்கள்  உட்கொண்டால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிடம் இருந்து, உங்களை காத்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். 

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கருப்பு ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்து உள்ளது. 

அதனால் கருப்பு ஏலக்காயை  தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, சரும பரப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியம் மேம்படும். 

உங்களுக்கு இளமையான அழகிய தோற்றம் வேண்டுமா?

 அப்படியெனில் கருப்பு ஏலக்காயை உட்கொள்ள ஆரம்பியுங்கள். வெண்மையான சருமம் வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் ஜொலித்து வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது. 

சரும அலர்ஜிக்கு நிவாரணி கருப்பு ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியா குணம் நிறைந்து உள்ளதால், சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப் படுகிறது. 

திடமான தலை முடி, கருப்பு ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம், தலை சருமத்திற்கு உணவாக அமையும். அதன் விளைவாக தலை முடி ஆரோக்கியமாகவும், திடமாகவும், பளபளப்பாகவும் மாறும். தலை சரும தொற்றுக்கு நிவாரணி இதன் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியா குணங்களால், இதனை உட்கொண்டால் தலை சருமத்தில் எரிச்சலும் தொற்றுகளும் ஏற்படாது. 

கருப்பு ஏலக்காய் வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாத்து  வெப்பத் தாக்கு மற்றும் சூரியவாதை யிலிருந்து காக்கும் வல்லமையை கொண்டு உள்ளது. 

கல்லீரலை சரிப்படுத்தும்.
பசியை தூண்டும்.

இரு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி வேண்டுமா?

அற்புதமான கருப்பு ஏலக்காயை சுவைக்க,சவைக்க உடனே  பழகுங்கள்.

சாப்பிட்ட உடனேயே நெஞ்சு இதமாக இருப்பதை உணரலாம்.

தினம் ஒன்று வாயில் நெடுநேரம் ஊற வைத்து சுவைத்து, நன்றாக சவைத்து 10 நிமிடம் கழித்து சக்கையை துப்பி விடவும்.