வறுத்த கொண்டக்கடலை உங்களுக்கு பிடிக்குமா?

வறுத்த கொண்டக்கடலை உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்கலானாலும் இனிமே இதை நிறைய சாப்பிடுங்க...!
 

இந்தியாவில் அதிகமாக நுகரப்படும் மிகவும் பொதுவான மற்றும் சுவையான சிற்றுண்டிகளில் ஒன்று வறுத்த சுண்டல். சுவையான இந்த வறுத்த சுண்டல் உங்களுக்கு எடைக்குறைப்பு உள்ளிட்ட பல அற்புத நன்மைகளை அளிக்கும் என்பது பலரும் அறியாதது.

வறுத்த சுண்டல் மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் உடலின் சீரான செயல்பாடுகளுக்கு தேவையான பல மூலக்கூறுகள் அதில் நிறைந்துள்ளது. உணவியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பசியைக் குறைக்க மற்றும் பிற ஆரோக்கிய நலன்களை முழுவதுமாக பெறுவதற்கு ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் சுண்டலை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகின்றனர்.

வறுத்த சுண்டலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது மற்றும் அவை உட்கொள்ளும் போது உடனடி ஆற்றலை வழங்குகிறது. இவை மட்டுமின்றி பல இன்றியமையாத நன்மைகளை வறுத்த சுண்டல் அளிக்கிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எலும்பைப் பலப்படுத்துகிறது :

உங்கள் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் தேவைப்படுகிறது, இது ஒரு முக்கிய கனிமமாகும். வறுத்த சுண்டல் என்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும், இது உங்கள் உடலின் வலிமையான பாதுகாக்கவும் மற்றும் எலும்புகளை பராமரிக்கவும், பல்வேறு நோய்களை தடுக்கவும் உதவுகிறது.

புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது :

வறுத்த சுண்டலில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதுடன், வறுத்த சுண்டலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது மற்றும் உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது.

நினைவாற்றலை அதிகரிக்கும் :

வறுத்த சுண்டலில் உள்ள சிறந்த ஊட்டச்சத்து காரணமாக மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மூளையின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான கோலினின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் இது அறிவாற்றல் உணவுகளில் அவசியமான ஒன்றாகும். மூளை நரம்புகளின் செயல்பாட்டிற்கு முக்கியமான தாதுவான மெக்னீசியமும் கொண்டைக்கடலையில் ஏராளமாக உள்ளது.

சர்க்கரை நோய்க்கு சிறந்தது :

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு அவசியமான ஒன்றாகும். குறைந்த ஜி.ஐ கொண்ட உணவுப் பொருட்களை, உண்பதால் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு மற்ற உணவுகளை சாப்பிடுவதைப் போல மாறாது. வறுத்த கொண்டைக்கடலை குறைந்த ஜி.ஐ அளவைக் கொண்டிருப்பதால் அவை நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான சிற்றுண்டியாக இருக்கின்றன.

இதயத்தைப் பாதுகாக்கிறது :

வறுத்த கொண்டைக்கடலை தாமிரம், மாங்கனீசு, ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பட்டியலிடப்பட்டுள்ள ஊட்டச்ச த்துக்களாகும். குறிப்பாக பாஸ்பரஸ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய செயல்பாட்டை பராமரிக்கிறது என்று கூறப்படுகிறது.

எடைக்குறைப்பிற்கு உதவுகிறது :

வறுத்த சுண்டல் உணவு நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.இதிலுள்ள டயட்டரி ஃபைபர் சப்ளிமெண்ட்ஸ், உட்கொள்ளும் உணவின் அளவையும், உணவின் அதிர்வெண்ணையும் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. பொதுவாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் திருப்தியான உணர்வை அளிக்கும். அந்த வகையில் இது எடைக்குறைப்பிற்கு சிறந்த நண்பனாக இருக்கிறது.