கல்லீரல் கொழுப்பு பிரச்சினை (Fatty Liver) கூட சரியாகி போகும்..

கல்லீரல் கொழுப்பு பிரச்சினை (Fatty Liver) கூட சரியாகி போகும்.. 

கல்லீரல் கொழுப்பு பிரச்சினையை சரிசெய்யும் 2 அற்புத பானங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் மாதிரியான ஊட்டச்சத்துக்களை பிரிக்கும் வேலையை கல்லீரல் செய்கிறது. இந்த சத்துக்களை கல்லீரல் பிரித்து உடல் முழுக்க வழங்குவதால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம். அதுமட்டுமல்ல.. நம் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை கூட கல்லீரல் நீக்கிவிடும். ஆனால் இந்த கல்லீரலில் கொழுப்பு படிந்தால் நமக்கு சிக்கல் தான். அந்த கொழுப்பை எப்படி வெளியேற்றுவது என இங்கு காணலாம். 

சாதரணமாகவே நம்முடைய கல்லீரலில் கொழுப்பு தன்மை காணப்படும். அதனுடைய அளவு அதிகமாகும்போது தான் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை வருகிறது. இந்த பிரச்சனை ஆரம்பத்தில் அறிகுறிகளை காட்டுவதில்லை. ஆனால் முதல், இரண்டாம் நிலைகளை தாண்டினால் அறிகுறிகள் வந்துவிடும். 

கல்லீரல் கொழுப்பு பிரச்சினை அறிகுறிகள்:

கல்லீரலில் வீக்கம், 

குமட்டல்,

வாந்தி,

அடிவயிற்று வீக்கம்,

செரிமானக் கோளாறு, 

பசி எடுக்காது, 

உடல் சோர்வு,

எடையிழப்பு மாதிரியான அறிகுறிகள் வரும். 

கீழாநெல்லி ஜூஸ் :

கீழாநெல்லி கிடைத்தால் பயன்படுத்துங்கள். கிடைக்கவில்லை என்றால், நாட்டு மருந்து கடையில் கீழாநெல்லி பொடி வாங்கி பயன்படுத்துங்கள். இந்த பொடியை அரை ஸ்பூன், ஒரு டம்ளர் மோரில் போட்டு நன்கு கலந்து காலையில் அருந்துங்கள். இப்படி ஒரு டம்ளர் கலக்கி தொடர்ந்து 48 நாட்களுக்கு குடித்தால் கொழுப்பு கல்லீரல் பிரச்சினை விரைவில் குணமாகும். 

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட்டை நன்கு தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். வெள்ளரிக்காயையும் தோல் சீவி குட்டியாக நறுக்கி கொள்ளுங்கள். நறுக்கி வைத்த பீட்ருட், வெள்ளரிக்காய் கூட புதினா, கொத்தமல்லி, இஞ்சி போன்றவை போட்டு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை வடிகட்டி, கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் கல்லீரல் சுத்தமாகும். காலை வேளையில் தொடர்ந்து குடித்தால் கொழுப்பு கல்லீரல் பிரச்சினை மெல்ல குறைந்து விடும்.