காலையில் மோர் குடிச்சுப் பாருங்க..

காலையில் மோர் குடிச்சுப் பாருங்க..

நோய்கள் உங்களை விட்டு பறந்து விடும்

பொதுவாக கோடை காலத்தில் 

நாம் அதிகமாக அருந்தும் பானம் என்றால் அது மோர் என்று கூறலாம்.

கோடை வெயிலால் நமது உடலில் நீர்ச்சத்து குறையும்போது, 

வெயிலின் தாகத்தை தணித்து  நீர் ஏற்றத்துடன் நமது உடல் இருக்க மோர் உதவுகிறது.

மோரில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் காலை குடிப்பது உடலுக்கு நன்மையே தருகின்றது. 

மோர் குறைந்த கொழுப்புச்சத்து

ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)

ஆற்றல் 169 kJ (40 kcal)

கார்போஹைட்ரேட்டு 4.8 g

கொழுப்பு 0.9 g

புரதம் 3.3 g

கால்சியம் 12%

தினமும் மோர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

🌷மோர் செரிமானத்திற்கு நல்லது.☘️☘️☘️

🥬மோரில் சேர்க்கப்படும் சீரகப் பொடி, மசாலாப் பொருட்களும் செரிமானத்திற்கு உதவுவதோடு,

🍃செரிமானத்தை எளிதாகவும் மேலும் சரியானதாகவும் ஆக்கும்.

🍁கோடை வெப்பத்தால் உடல் வெப்பமடைகிறது. 
இதைத் தடுக்க, அதிக அளவு வியர்வை தேவைப்படுகிறது. 

🌷மோர் இந்தப் பிரச்சினையைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

☘️வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள்,

*🍀மோரில்* இஞ்சி பொடி 

🕊️அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். 

அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். 

🌸இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சினை குணமாகிவிடும்.

🌺மோர் கலோரி மற்றும் கொழுப்பின் அடிப்படையில் வழக்கமான பாலுடன் ஒப்பிடத்தக்கது. 

ஒரு கப் (237 மில்லி) முழு பாலில் 157 கலோரிகளும் 8.9 கிராம் கொழுப்பும் உள்ளன. 

ஒரு கப் முழு மோர் 152 கலோரிகளையும் 

🌿8.1 கிராம் மொத்த கொழுப்பையும் கொண்டுள்ளது.

🪸 குறைந்த அளவு கொழுப்பு கொண்ட மோரும் கிடைக்கிறது. மோரில் வைட்டமின்கள், பாஸ்பரஸின் தடயங்கள் உள்ளன.

மோரில் கால்சியம் தவிர... பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.*

🌼இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. 

இதன் விளைவாக, 

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது.

ஆகவே மோரை தினமும் குடித்தால், 

☘️இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

🍃ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், 

🌱நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

🌿வாய்புண் நீக்கும்

🍁தினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். 

🌺மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து  பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும்.
 

🌸மூல நோய்க்கு மருந்து

☘️சாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்துகொள்ள வேண்டும்.

 🌻இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும். 

🪸சளியை போக்கும்

🍀மோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும்.

🍀 இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும். 

🌼சாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால்

🌱அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது. 

🌱ஆனால் இதன் பயன் தெரியாமலே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம்.

 ☘️இவ்வளவு பயன்கள் உள்ள மோரை தொடர்ந்து பயன்படுத்தினால் 

🌿நாம் என்றென்றும் உடல் நலம் குன்றாமல் வாழ்வது உறுதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை☘️☘️☘️