உடல் எடையைக் குறைக்க இயற்கை தந்த கொடாம்புளி

உடல் எடையைக் குறைக்க இயற்கை தந்த கொடாம்புளி

வெறும் 3 நாட்களில் சூப்பர் ரிசல்ட்
கொடாம்புளி ஜூஸ் செய்முறையும், எப்படி அருந்துவது, எப்போது அருந்துவது போன்ற தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

இன்றைய அவசர உலகத்தில் அவசர அவசரமாக ஏதோ ஒன்றை சாப்பிட்டு நாட்களை நகர்த்தி கொண்டு இருக்கிறோம். இப்படி எளிதில் செய்யக்கூடிய , ஆரோக்கியமற்ற உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடலில் பல விதமான மாற்றங்கள் நிகழ்கிறது. அதில் ஒன்று தான் அதேதான் உடல் எடை பிரச்சினையும் ஒன்று.

இந்த உடல் பருமன் பிரச்சினையானது ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சினை என்று தான் கூற வேண்டும். இந்த உடல் பருமன் பிரச்சினையை சரி செய்வது இன்று பலருக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது.என்ன தான் உணவைக் குறைத்து சாப்பிட்டாலும், நடை பயிற்சி, உடற்பயிற்சி என்று செய்தாலும் உடல் எடையில் மிகப் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் உண்டாவதில்லை.

இப்படியான அதீத உடல் எடையை குறைக்க நமது உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைத்தாலே பாதி பிரச்சினையை சரி செய்து விடலாம். இதற்கு இயற்கை தந்த கொடாம்புளி வைத்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடம்பில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் உடலில் இருந்து கரைந்து விடும். இந்த கொடாம்புளி ஜூஸ் செய்முறையும் எப்படி எப்போது அருந்த வேண்டும் போன்ற தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

தேவையானவை:

கொடாம்புளி – 1 எலுமிச்சை அளவு

செய்முறை:

முதலில் கொடாம்புளியை ஒரு முறை அலசிக் கொள்ள வேண்டும். அலசிய கொடாம்புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த நாள் காலை அடுப்பில் 1 பாத்திரம் வைத்து அதில் 3 கப் அளவில் தண்ணீர் ஊற்றி, ஊறவைத்துள்ள கொடாம்புளியை தண்ணீருடன் சேர்க்க வேண்டும்.

இப்போது இதனை கொதிக்க செய்ய வேண்டும். ஒரு கொதி வந்த பிறகு, அடுப்பின் தீயினை மிதமாக வைத்து 1 கப் அளவில் வரும் வரை அடுப்பில் வைத்து பின் பாத்திரத்தை இறக்கி விட வேண்டும். மிதமான சூடாக இருக்கும் போது இதனை ஒரு கண்ணாடி க்ளாசில் ஊற்ற வேண்டும்.

எப்படி அருந்துவது?

இந்த கஷாயத்தை 100 மில்லி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன்பாக (சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பு) இதனை குடித்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் போதும், உங்களது எடையில் நல்லதொரு மாற்றத்தை நீங்கள் உணர்ந்து நீங்களே மற்றவர்களுக்கும் இந்த பயனை கூறுவீர்கள்.

பலன்கள் :

உடலில் தேங்கியிருந்த நாள்பட்ட கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் தண்மை பெற்றது. இது ஒரு ஆயுர்வேத மருந்து ஆகையால் உடலில் கொழுப்பை தங்க விடாது.

தவிர செரிமானப் பிரச்சினையை சரி செய்து பசியை தூண்டும்.

தொடை, இடுப்பு, பின் இடுப்பு, வயிறு என்று உடலில் பல்வேறு பாகங்களில் படிந்து இருக்கும் கொழுப்புகள் அனைத்தையும் கரைக்கும்.