மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது! இது ஒன்று போதும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்!!!

மூர்த்தி சிறிது. கீர்த்தி பெரிது! இது  ஒன்று போதும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்!!!

`கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்', என்ற பழமொழிக்கு ஏற்ப கடுக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இளமையோடு வாழலாம் மேலும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படும் கடுக்காயின் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கடுக்காயை அப்படியே சாப்பிட முடியாது. முதலில் கடுக்காயை சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சுத்தி செய்வது :

கடுக்காயை உடைத்து விட்டு அதன் சதைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். கொட்டைகளை எடுத்து விட வேண்டும். (கொட்டைகளை பயன்படுத்தக் கூடாது) இந்த சதைப் பகுதிகளை அம்மியினால் இடித்து அல்லது பொடித்து விட்டு பின் மிக்சி ஜாரில் போட்டு தூள் செய்து, சலித்து ஒரு டப்பாவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பற்கள் மற்றும் தொண்டை:

கடுக்காய் வாய் மற்றும் தொண்டையில் இருக்கும் புண்களை எளிதில் ஆற்றி விடும் தன்மை கொண்டது. கடுக்காய் பொடியை கொண்டு பல் துலக்கி வந்தால் பல்லும், ஈறும் உறுதி பெறுவதோடு, ஈறு வலி எளிதில் நின்றிடும். மேலும் ஈறில் இருந்து வரும் இரத்தத்தை நிறுத்தி விடும். 

மஞ்சள் காமாலை :

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கடுக்காய்ப் பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

மலச்சிக்கல் :

இரவில் படுப்பதற்கு முன்பு சிறிது கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்த கபம் என்றழைக்கப்படும் சிலேத்துமத்தை சமன் செய்து மலச்சிக்கலை போக்கும் தன்மை பெற்றது. மேலும் மூல நோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொண்டால் அது விரைவில் சரியாகி விடும். அதோடு அல்லாமல் குடல் சக்தியை பெருக்கி இயற்கையாக பசியை தூண்டி விடும்.
 
வயிற்றுப் புண்:

கடுக்காய்ப் பொடியை சிறிது எடுத்து சம அளவு நெய்யில் வறுத்து விட்டு , உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். 

கண் நோய் மற்றும் சர்க்கரை நோய்:

25 கிராம் கடுக்காய்ப் பொடியில், ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி 50 மில்லி அளவாக குறையும  வரை கொதிக்க செய்து பருகினால் சர்க்கரை நோய் போன்றவை கட்டுப்படும். மேலும் இதனை சில துளிகள் கண்ணில் விட்டால் கண்நோய் உடனே குணமாகும்.

உயிரணு குறைபாட்டிற்கு:

கடுக்காய் பொடியினை தினமும் எடுத்து வந்தால், உடல் பலவீனத்தைப் போக்கி வலிமை பெறுவதோடு, ஆண்களின் உயிரணு பிரச்னைகளை சரி செய்யும் தன்மை கொண்டது.

வயிறு பிரச்சினைகளுக்கு :

வயிற்றுப் பகுதியான இரைப்பை மற்றும் குடலில் இருக்கும் ரணங்களை ஆற்றிடும் தன்மை கொண்டது.மேலும் கடுக்காய் பொடியினை தினமும் தண்ணீரில் கலந்து பருகுவதால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அதிகரிக்கும், தோலில் வெண் புள்ளிகள் இருப்பின் மறையும் .பித்தம், கபம் போன்றவற்றால் வரும் பல்வேறு வியாதிகள் குணமாகும் .அதோடு மட்டுமல்லாமல் இருமல், கை கால் நமச்சல், மார்பு இறுக்கம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளையும் விரைவில் சரி செய்யும். 

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த கடுக்காய் பொடியினை நீங்களும் எடுத்துக் கொண்டு நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், வாழுங்கள்.