தேங்காய் பூ மருத்துவம்...

 'தேங்காய் பூ' மருத்துவம்...

கோடைகாலத்தில் தேங்காய் பூ உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். இனி அதை வேண்டாம் என சொல்லாமல் சாப்பிடுவீர்கள். 

நீர்ச்சத்து அவசியம்

கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் இனிவரும் தினங்களில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. இந்த கோடை நாள்களில் உடலில் நீர்ச்சத்து முற்றிலும் வற்றிவிடும். இப்படி பயங்கரமான வெயிலில் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் இருக்க நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உண்பது அவசியம்.

கோடை காலம் தொடங்கியதை அடுத்து சில மாவட்டங்களில் பனை பூ, குருத்து , தேங்காய் பூ குருத்து, இளநீர், விற்பதை பார்த்திருப்பீர்கள். அதென்ன தேங்காய் பூ... அப்படி அதில் என்ன சத்துக்கள் இருக்கிறது என தோன்றுகிறதா? வாருங்கள் பார்க்கலாம். 

தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு

தேங்காய் பூக்கள் முன்பு கேரள மாநிலத்தில் மட்டும்தான் விற்பனையாகி வந்தன. தற்போது கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்கத் தொடங்கியுள்ளன. இந்த தேங்காய் பூவின் ஸ்பெஷலே பருவகாலத்தில் வரும் தொற்று நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கும். இப்போது பல்வேறு வகையான காய்ச்சல் வந்து பாடாய்படுத்துகின்றன. இந்த சூழலில் தேங்காய் பூவை வாங்கி உண்பது எவ்வளவு நல்லது தெரியுமா? 

சிறுநீரகத்தை பாதுகாக்கும்

சிறுநீரகத்தில் உண்டாகும் பாதிப்பை அறவே குறைக்கும் வல்லமை தேங்காய்ப் பூவுக்கு இருக்கிறது. அந்த தூய்மையான வெள்ளை பூவை அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள் உடல் முழுக்க அற்புதம் நிகழும். சருமம் இளமையாக மாறி உடல் பொலிவு காணும். 

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த 

செரிமான கோளாறு இருந்தால் தேங்காய் பூ சூப்பர் மருந்து பொருளாக செயல்படும். ஏனெனில் இந்தப் பூவில் மினரல், வைட்டமின் ஆகியவை உள்ளன. இது குடலுக்கு பாதுகாப்பை அளித்து காக்கிறது. தேங்காய்ப்பூ நம் உடலில் இன்சுலின் சுரப்பை தூண்டிவிடும். இதனால் சுகர் நோயாளிகளுக்கு ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப் படுகிறதாம். 

இளமையான தோற்றம் பெற

மலச்சிக்கலால் ஒவ்வொரு நாளும் சிரமமா? நிச்சயம் தேங்காய் பூ உங்களுக்கு உதவும். இதை உண்பதால் மலச்சிக்கல் குணமாகும். ஒரே நாளில் தீராது. ஆனால் அடிக்கடி உண்டு வர பலன் கிடைக்கும். இளமையாக இருக்க உதவும். ஏனெனில் இதில் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. முகச்சுருக்கம், வயதான தோற்றம் ஆகியவை வராது.  

தைராய்டு குணமாக 

தைராய்டு பிரச்சினை வராமல் காக்கும். ஏற்கனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீராக தைராய்டு சுரப்பு இருக்க உதவும். உடல் எடை கண்டபடி ஏறுதா? இந்த தேங்காய்ப் பூவை சாப்பிடுவதால் உடல் எடை கூட கட்டுக்குள் வரும். குறைந்த கலோரி இருப்பதால் டயட்ல இருந்தாலும் சாப்பிடலாம். உடலுக்கு முழுக்க நன்மைகளை வாரி வழங்கும் தேங்காய்ப்பூவை சாப்பிடாமல் இருக்காதீங்க மக்களே..!