மாசு மருவற்ற சருமத்திற்கு ஒயின் ஃபேசியலின் 10 அற்புதமான நன்மைகள்

 மாசு மருவற்ற சருமத்திற்கு ஒயின் ஃபேசியலின் 10 அற்புதமான நன்மைகள்

1.      தோல் சுருக்கங்கள் வரவிடாமல் தடுக்க (To keep wrinkles at bay)

சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தின் கொலாஜனை சமநிலைப் படுத்துவதின் மூலமும், தோலின் இழுவைத் தன்மையை பாதுகாப்பதின் மூலமும், தோல் வயதாவதை எதிர்த்துப் போராடுகின்றன

சிவப்பு ஒயின் ஃபேசியல் வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் சரி செய்யும், இதன் மூலம் உங்கள் சருமத்திற்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

2.     சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க (To minimise sun damage)

சிவப்பு ஒயின் நேரடியான சன்ஸ்கிரீன் அல்ல, ஆனால் சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள், சூரியனின் வலுவான புற ஊதா கதிர்வீச்சுக்கு எதிராக இயற்கையான தடையை உருவாக்க உதவும். நிச்சயமாக ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் புற்றுநோயைத் தடுக்க உதவும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்

3.      பிரகாசமான ஒளிவீசும் சருமத்திற்கு (For radiant skin)

உங்கள் முகத்தில் சிறிது சிவப்பு ஒயின் தெளிக்கவும், பிறகு மிகவும் மெதுவாக மசாஜ் செய்யவும்.  ஒரு சிவப்பு ஒயின் மசாஜ் என்பது பிரகாசமான பளபளக்கும் சருமத்திற்கான உத்திரவாதமான வழி

 

4.      தோலில் உள்ள வீக்கத்தைத் தணிக்க (To soothe Inflammation)

சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிவந்த வீக்கமடைந்த தோலில் வேலை செய்கின்றன. சிவந்த மற்றும் வீக்கமடைந்த தோலில் சில துளிகளை மெதுவாகத் தடவி, உங்கள் தோலின் சிவந்த நிறத்தைத் குறைக்கலாம்

 

5.      முகப்பருவை எதிர்த்துப் போராட (To fight Acne)

முகப்பருவால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு நீங்கள் சிவப்பு ஒயின் பயன்படுத்தலாம்

ஆன்டி-செப்டிக் (Antiseptic) மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-Inflammatory) தோலில் உள்ள எண்ணெய் மற்றும் அசுத்தங்களை சுத்தப்படுத்துகின்றன, மேலும் பருக்கள் உடைவதைக் குறைக்கின்றன

 

6.      Skin டோனராக உபயோகப்படுத்தலாம் (As a toner)

விலை உயர்ந்த ஒரு அழகு சாதனப் பொருளில் பணத்தை செலவழிப்பதற்குப் பதிலாக, நீங்கள் சிவப்பு ஒயினை ஒரு டோனராகப் பயன்படுத்தலாம், மேலும் இதன் மூலம் மென்மையான, தெளிவான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறலாம். இதற்கு உங்கள் முகத்தில் மெதுவாக சிவப்பு ஒயினை பூசி, 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

 

7.      முகத்தில் உள்ள வயதான தோற்றமளிக்கும் இடங்களை குறைக்க (To lighten age spots)

உங்கள் முகத்தில் உள்ள வயதான தோற்றமளிக்கும் இடங்களை குறைக்கவும் மற்றும் சிவப்பு ஒயின் சிகிச்சையால் உங்கள் முகத்திற்கு வயதாவதை தள்ளிப் போடலாம்.

வயதானது போல் தோற்றமளிக்கும் முகத்தில் சில துளிகள் சிவப்பு ஒயினை தடவி 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். நல்ல முடிவுகள் வரும் வரை இதை தினமும் செய்யுங்கள்.

 

8.      சிவப்பு ஒயினை ஐஸ் கியூப்-ஆக மாற்றி மசாஜ் (A wine ice cube massage)

சாதாரணமாக ஒரு ஐஸ் கட்டியை (Ice Cube) முகத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம்

சிவப்பு ஒயினை ஐஸ் டிரேயில் ஊற்றி வைத்து ஐஸ் க்யூப்-ஆக மாற்றி, உங்கள் சருமத்திற்கு ஐஸ்-கட்டியின் குளிர்ச்சியுடன் சிவப்பு ஒயினின் அனைத்து நன்மைகளையும் கொடுங்கள்

 

9.        சிவப்பு ஒயின் ஃபேசியல் (As a wine facial)


சிவப்பு ஒயின் ஃபேசியல் உங்கள் சருமத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது

சூரிய ஒளியினால் (Sun Tan) ஏற்பட்ட கருமையை சரி செய்யலாம் , தோலின் ஆங்காங்கே உள்ள சிறு சிறு நிறமாற்றங்களை நீக்கலாம், சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்யலாம் மற்றும் அழகான ஒளிவீசும் பிரகாசமான சருமத்தை பெறலாம்

சிவப்பு ஒயின் ஃபேசியலலை நீங்கள் வீட்டிலேயே செய்தும் கொள்ளலாம்.

உங்கள் முகத்தை நன்கு கழுவி விட்டு 5-10 நிமிடங்கள் நீராவியில் முகத்தை காட்டவும்.

சிவப்பு ஒயின், ஸ்ட்ராபெர்ரி அல்லது திராட்சை போன்ற பழங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த அத்தியாவசிய எண்ணெய்களின் (Essential oils) கலவையை உருவாக்கவும்

இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் உறுதியாக ஆனால் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

உங்கள் சருமம் சென்சிடிவ் ஸ்கின் என்று நீங்கள் நினைத்தால், சிவப்பு ஒயின் உடன் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து உபயோகப்படுத்தலாம்.


10. முகத்தில் உள்ள சருமத்தை தளர்வாகவும், இறுக்கமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது ( As an Exfoliating agent)

1 தேக்கரண்டி அளவு நன்றாக அரைக்கப்பட்ட பாதாம் மற்றும் நசுக்கப்பட்ட திராட்சை தோலுடன் 2 தேக்கரண்டி சிவப்பு ஒயின் சேர்க்கவும்

கலவையை உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய,  இறந்த சரும செல்களை நீக்கி, மென்மையான, ஒளிரும் சருமத்தை  பெற முடியும்.

கொரியப் பெண்களைப் போன்ற சுருக்கமில்லாத, வழுவழுப்பான , இளமைத் தோற்றமுள்ள சருமத்தை பெற சிவப்பு ஒயின் ஃபேசியலை தேர்வு செய்யலாம், ஏனெனில் சிவப்பு ஒயின் ஃபேசியல் கொரியாவில் மிகப் பிரபலம்.

சிவப்பு ஒயினைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. ஏனென்றால் சிவப்பு ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் தான் மேலே சொல்லப்பட்ட பலன்கள் அனைத்தையும் கொடுக்கிறது. ஆனால் மார்க்கெட்டில் கிடைக்கும் ஒயின் அனைத்துமே மது குடிப்பவர்களைத் திருப்தி செய்வதற்காக மட்டுமே தயாரிக்கப்படுபவை. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் இருக்காது. எனவே இவை பயன் தராது.

நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு அனைத்து நல்ல குணங்கள் நிறைந்த சிவப்பு ஒயின் கிடைத்தாலும் அவற்றின் விலை மிக அதிகம்.

இதற்கான மிக எளிமையான தீர்வு, வீட்டிலேயே ஒயின் தயாரித்து பயன்படுத்திக் கொள்வது மட்டுமே (Home Made Wine)

Wine Facial