உடல் கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக்கி, உடம்பை மொத்தமாக Detox செய்ய வேண்டுமா?

உடல் கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தமாக்கி,  உடம்பை மொத்தமாக Detox செய்ய வேண்டுமா? 

உச்சி முதல் உள்ளங்கால் வரை நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை மெருகேற்றி என்றும் இளமை பொலிவுடன் வைத்திருக்கக்கூடிய ஒரு இயற்கையான வீட்டு வைத்திய முறையை பார்ப்போம்.

கற்றாழை என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது அது நமது சருமத்தை பாதுகாக்கும் என்பதுதான். முடி வளர்ச்சிக்கும் உதவக்கூடியது.

இந்த கற்றாழை நமது உடலில் உள்ள உறுப்புகளை மெருகேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி,  கழிவு பொருட்களை வெளியேற்றி கை கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி பிரச்சினைகளையும் சரி செய்யும். நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கும். இப்படி ஏராளமான நன்மைகள் கற்றாழையில் உள்ளன.

இந்த கற்றாழையை எவ்வாறு உள் உறுப்புகள் மெருகேற உடல் கழிவு சுத்தமாக பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

கற்றாழை மடலை கட் செய்தவுடன் ஒரு மணி நேரம் சாய்த்து வைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் உள்ள மஞ்சள் நிற திரவம் முழுவதும் வெளியேறும். இது சற்று விஷத்தன்மை மிக்கது என்பதால் இது வெளியேறியவுடன் பயன்படுத்துவது முக்கியம். இல்லையெனில் அலர்ஜி எரிச்சல் போன்றவை ஏற்படலாம்.

பிறகு கற்றாழையின் மேல் தோலை சீவி விட்டு உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை எடுத்துக் கொள்ளவும். இதை நன்றாக தண்ணீரில் மாறி மாறி 7  முறை அலசி மேலிருக்கும் வழவழப்பு தன்மையை போகும் வரை அலச வேண்டும். நேரடியாக குழாய் தண்ணீரில் கழுவினால் ஒரு ஐந்து நிமிடம் கழுவினாலே போதுமானது.

பிறகு  இதை சிறு சிறு துண்டுகளாக்கவும். இது தற்போது மேலிருக்கும் வழவழப்பு நீங்கி ஐஸ்கட்டிகளை போல இருக்கும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொண்டு இதனுடன் ஒரு துண்டு இஞ்சியையும் தோல் நீக்கி துண்டுகளாக்கி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக்கொண்டு இதனுடன் எலுமிச்சை சாறு அரை மூடி சுவைக்காக உப்பு அல்லது தேன் இவை இரண்டில் ஏதேனும் ஒன்று சேர்த்து காலை வெறும் வயிற்றில் பருக வேண்டும். காலையில் பருக முடியாதவர்கள் ஒரு 11 மணி அளவில் பருகலாம். மாலை வேளைகளில் பருக கூடாது.

மேலும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை பருக வேண்டாம். மற்ற அனைவரும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

இதை வாரத்தில் இரண்டு நாட்கள் குடித்து வர உடலில் உள்ள நாள்பட்ட கழிவுகள் நீங்கி ரத்தம் சுத்தமாகி உடலானது ஆரோக்கியமாகவும் இளமையாகவும் மாறும். உள் உறுப்புகள் சுத்தமாகும்.

அடிக்கடி கற்றாழையை கழுவி இதுபோன்று செய்ய முடியாதவர்கள் மிக்ஸி ஜாரில் கற்றாழை இஞ்சி அரைத்த விழுதை ஐஸ் ட்ரேவில் ஊற்றி ஃப்ரீசரில் பாதுகாக்கலாம். தேவையான பொழுது எடுத்து ஒரு டம்ளரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஜில் தன்மை குறைந்ததும் தேன் உப்பு கலந்து பருகலாம்.